எஸ்எம்எஸ் அனுப்பும் பேய், போலாந்து பாதிரியார் அதிர்ச்சி.!!

Written By:

மனித உடல் தனது ஆயுட்காலத்தை முடித்து கொண்ட பின், உடலில் இருக்கும் உயிர் ஆவியாகி விடும் என உலகெங்கும் பரவலாக 'நம்பிக்கை' இருக்கின்றது. நம்பிக்கையுள்ளவர்கள் ஆவிகளை பார்த்திருக்கலாம், அல்லது நெருக்கமானவர்களின் அனுபவத்தை வைத்தும் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கை இல்லாதவர்கள் நேரில் பார்க்கும் வரை இதனை நம்ப மாட்டார்கள்.

நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும், போலாந்து பாதிரியார் ஒருவரின் அனுபவத்தை ஆவிகளின் மீது இருக்கும் உங்களது நம்பிக்கைக்கு நிச்சயம் சவால் விடும் வகையில் இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

போலாந்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் ஆவியிடம் இருந்து தீய தகவல்கள் நிறைந்த குறுந்தகவல்களை பெறுவதாக தெரிவித்துள்ளார்.

2

தென்கிழக்கு போலாந்து பகுதியில் அமைந்திருக்கும் ஜரோஸ்லா எனும் பகுதியை சேர்ந்த பாதிரியார் மரியான் ரச்சேல் ஆவார்.

3

இவர் சிறுமியின் உடலில் இருக்கும் ஆவியினை வெளியேற்ற முயன்றதில் இருந்து ஆவியிடம் இருந்து தனக்கு எஸ்எம்எஸ் வருவதாக தெரிவித்துள்ளார்.

4

குறிப்பிட்ட சிறுமியின் உடலில் இருந்து ஆவியை வெளியேற்றும் முயற்சியில் பாதிரியார் தோல்வியுற்றதாகவும் அதன் பின் தான் அவருக்கு குறுந்தகவல் வருவதாக கூறப்படுகின்றது.

5

தனக்கு வந்த குறுந்தகவல் சிறுமியின் உடலில் இருக்கும் ஆவி தான் அனுப்பி வருகின்றது என பாதிரியார் உள்ளூர் செய்திகளில் தெரிவித்துள்ளார்.

6

மேலும் இக்காலத்தில் ஆவிகளும், பேய்களும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. இதில் சில நடவடிக்கைகள் ஆவிகள் தான் செய்கின்றன என்பது தெரிவதேயில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

7

மொபைல் போன் பயன்படுத்துவோர் இது போன்ற காரியங்கள் நடைபெறுவதை கவனிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

8

ஆவி அனுப்பிய குறுந்தகவலில் இந்த சிறுமியை விட்டு வெளியேற மாட்டேன், இவருக்காக யார் வேண்டினாலும் அவர்கள் மரணித்து விடுவர் என குறிப்பிடப்பட்டிருந்ததாக பாதிரியார் தெரிவித்துள்ளார்.

9

ஆவியின் குறுந்தகவலுக்கு பாதிரியார் பதில் அனுப்பியதாகவும் அதில் அவர், உன்னையே உன்னால் பார்த்து கொள்ள முடியாது, நீ ஒரு முட்டாள் என குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது.

10

உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் வேலையில் உலகில் ஆவிகள் மற்றும் பேய்கள் இருப்பது நம்பப்படுவது மட்டும் மிக தெளிவாக தெரிகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Priest receives Threat messages from DEVIL Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்