ஏலியன் வாகனத்தை நேரில் பார்த்த விமானிகள்.!!

Written By:

இதுவரை புகைப்படம், வீடியோக்களில் சிக்கியதாக கூறப்பட்டு வந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருளினை நேரில் பார்த்த சாட்சிகள் கிடைத்திருப்பது யுஎஃப்ஒ குறித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய சாட்சிகள் யுஎஃப்ஒ'வினை நேரில் பார்த்தாகவும், அவை சிறிது நேரத்தில் மாயமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

துருக்கி ஏர்லைன்ஸ் விமானிகள் கடந்த வாரம் வியாழன் கிழமை பச்சை நிற விளக்குகளுடன் மர்மமாக பறந்து, மாயமான அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்றை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

2

இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருளானது நண்ணிலக்கடல் பகுதியில் இருந்து 350 மைல் பரப்பளவில் பதிவு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

இது குறித்த தகவலினை விமானிகள் இஸ்தான்புல் பகுதியின் அடாடுர்க் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததாக அப்பகுதி செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

4

அடையாளம் தெரியாத பறக்கும் பொருளானது குறிப்பிட்ட விமானத்தில் இருந்து 2 முதல் 3,000 அடி உயரத்தில் பறந்ததாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.

5

குறிப்பிட்ட அடையாளம் தெரியாத பறக்கும் பொருளானது திடீரென வானத்தில் இருந்து மாயமாகிவிட்டது, எனவே இது யுஎஃப்ஒ'வாக இருக்கலாம் என்றும் விமானிகள் தெரிவித்தனர்.

6

குறிப்பிட்ட விமானமானது துருக்கியின் போட்ரம் பகுதியில் இருந்து இஸ்தான்புல் பகுதிக்கு செல்லும் வழியில் இஸ்தான்புல் பகுதியின் சில்விரி பகுதியின் மேல் சுமார் 17,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

7

மர்மமான பறக்கும் பொருள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் விமான நிலைய ரேடார்களில் எவ்வித பொருளும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்ட சம்பவத்திற்கு முன்னதாக எகிப்து ஏர்பஸ் ஏ320 விமானம் ஒன்று 66 பயணிகளுடன் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து மாயமானதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Passenger jet pilots 'saw UFO above plane'. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்