நம்பினால் நம்புங்கள், இனி யார் வேண்டுமானாலும் இரும்பு மனிதர் ஆக முடியம்.!!

Written By:

தலைப்பை படித்த உடன் சிலருக்கு, 'என்ன கதை உடுறியா' என்ற வாசகம் தான் நினைவிக்கு வரும்.

ஆனால் இது உண்மை தான், இனி யார் வேண்டுமானாலும் இரும்பு மனிதனின் சக்தியை பெற முடியும். இதற்கு அதிக பணமும், ஆர்வமும் இருந்தால் போதும்.

இது எப்படி சாத்தியம் என்பதை ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சூட்

மனிதர்களுக்கு நம்ப முடியாத சக்திகளை வழங்கும் எதிர்கால சூட் வகைகளை தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கின்றது.

எக்ஸோ ஸ்கெலிட்டன்

ரோபோட் போன்று காட்சியளிக்கும் புதிய வகை எக்ஸோ ஸ்கெலிட்டன்கள் பானாசோனிக் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

எடை

இந்த எஸ்கோ ஸ்கெலிட்டன்களை அணிந்து கொண்டால், அதிக எடை கொண்ட பொருட்களை சிரமம் இன்றி தூக்க முடியும், இதோடு அதிவேகமாக ஓடவும் முடியும்.

அம்சங்கள்

AWN-03 உடலின் மேல் பகுதியை உயர்த்தி அதிக எடை கொண்ட பொருச்களை தூக்க வழி செய்யும். PLN-01 சென்சார்கள் கால் பாதங்களுக்கு அடியில் இருக்கும், நடக்கும் போது இரு மோட்டார்கள் உதவி புரியும்.

சக்தி

உடல் ஊனமுற்றோருக்கு Resyone ஒரு மெத்தை போன்றும் நாற்காலி போன்றும் செயல்படும். இதன் பவர் லோடரில் மொத்தம் 20 என்ஜின்கள் இருக்கின்றது.

பணி

கடின பணிகளை செய்யும் போது ஏற்படும் விபத்துக்களை தடுக்க AWN-03 பானாசோனிக் தயாரித்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.5,42,812.52 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேட்டரி

இந்த சூட் உடல் அசைவுகளை கச்சிதமாக செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி சுமார் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவ் லின்க்

பானாசோனிக் நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் பிரிவான ஆக்டிவ் லின்க் PLN-01 சூட்டை எளிமையைக அனைவரும் பயன்படுத்த ஏதுவாக தயாரித்து வருகின்றது.

வீடியோ

இது எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கும் அதிகாரப்பூர்வ வீடியோ

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Now anyone can be an Iron Man Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்