மார்ஸ் கிரகம் பற்றி 3 புதிரான கேள்விகள் - வாய் திறக்கும் நாசா..!

|

செவ்வாய் கிரகம் எப்படி அதன் சூழ்நிலையை இழந்தது..?? செவ்வாய் கிரகத்தில் 'நிஜமாகவே' உயிர் இனங்கள் வாழ்கின்றனவா..?? மனிதர்கள் குடியிருப்புகள் அமைக்க செவ்வாய் கிரகம் ஏதுவான இடம்தானா..?? இப்படி செவ்வாய் கிரகம் மீது ஏகப்பட்ட கேள்விகள் அனுதினமும் எழுந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதுபோன்ற கேள்விகளுக்கு ஈடான பதில்கள் வெறும் கணிப்புகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்டாலும், வானவியல் விஞ்ஞானிகளும் செவ்வாய் கிரகத்தை உன்னிப்பாக ஆராயும் வல்லுனர்களும் வழங்கும் பதிலகளில் தான் உண்மை அதிகம் இருக்கும்.

அப்படியாக, செவ்வாய் கிரகம் பற்றிய தங்களது புதிய விவரங்களை நாசா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளது.

மேவன் :

மேவன் :

செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலம், அயனி மண்டிலம், காந்தப்புலம் ஆகியவைகளை ஆராயும் நாசாவின் மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விஞ்ஞானிகள் தான் செவ்வாய் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கேள்வி :

கேள்வி :

செவ்வாய் கிரகம் எப்படி அதன் சூழ்நிலையை இழந்தது..?? செவ்வாய் கிரகத்தில் ஏரி, ஆறுகள் , கூழாங்கற்கள் மற்றும் கனிமங்கள் இருந்ததற்க்கான சான்றுகளை நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் கண்டறிந்துள்ளது. ஆக செவ்வாய் இப்படி ஒரு வறண்ட கிரகமாக இருக்க எதோ ஒன்று காரணமாக இருக்க வேண்டும்..?

விளக்கம் :

விளக்கம் :

அதற்கு காரணம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் மையப் பகுதி குளிர்ந்து அதன் காந்தப்புலத்தை இழந்துள்ளது. அதனை தொடர்ந்து சூரிய காற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள வழியின்றி செவ்வாய் தனது நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இழந்து வறண்டு பொய் கிடக்கிறது.

கேள்வி :

கேள்வி :

செவ்வாய் கிரகத்தில் 'நிஜமாகவே' உயிர் இனங்கள் வாழ்கின்றனவா..?? மீத்தேன் உற்பத்தி ஆக உயிரினங்கள் தான் காரணம். ஆக, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களின் மூலம் இருக்க மீத்தேன் ஒரு நல்ல அறிகுறி தானே..?

விளக்கம் :

விளக்கம் :

செவ்வாய் கிருகன் சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு விரைவில் உடைந்துபோக வைக்கிறது அதானல் கூட அங்கு மீத்தேன் வாயு நிரம்பி கிடக்கலாம். மேவன் ஆய்வின் புதிய அளவீடுகள் இந்த கேள்விக்கான பதிலை இன்னும் தெளிவாக விரைவில் வழங்கும்.

கேள்வி :

கேள்வி :

மனிதர்கள் குடியிருப்புகள் அமைக்க செவ்வாய் கிரகம் ஏதுவான இடம்தானா..?? செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலையை மேவன் உன்னிப்பாக ஆராய்வதின் மூலம் அங்கு மனிதர்கள் குடியேற வாய்ப்பு அதிகரிக்குமா..??

விளக்கம் :

விளக்கம் :

கொடிய சூரிய கதிர்வீச்சு நிலவும் கிரகமான செவ்வாயில் உப்பு நீர் சார்ந்த சமீபத்திய கண்டுப்பிடிப்பு ஒன்றின் மூலமாக அங்கு வாழ்வதற்கான சாத்தியம் கொஞ்சம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

செவ்வாய் நீர், சாத்தான் சக்தி - ஒபாமா திட்டம்..??

கெட்ட செய்தி : செவ்வாய் கிரகத்தை 'காலி' செய்த சூரிய காற்று..!


செவ்வாய் பற்றிய சில உண்மைகள்: உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
NASA unveils 3 secret about Mars. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X