வட துருவத்தில் மர்மமான இராட்சத துளை, யார் மறைக்கும் உண்மை இது..?!

Written By:

சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும். பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..!

அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத ஓட்டை பற்றிய தகவல்களை முற்றிலுமாக மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஒரு சதியாலோசனை கோட்பாட்டாளர்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

வட துருவத்தில் மறைக்கப்படும் ஓட்டையானது உள் பூமிக்கு செல்லும் ஒரு வழியாக இருக்ககூடும், அது வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது என்று சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்பியுள்ளன.

#2

மேலும், மிகவும் நம்ப முடியாத வண்ணம் அந்த ஓட்டையின்கீழ் ஒரு முழுமையான முறையிலான தாவரங்கள், விலங்குகள், மனித நாகரீகங்கள் மற்றும் உள் சூரியன் உள்ளன என்றும் சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்பி உள்ளன.

#3

செக்யூர்டீம்10 (SecureTeam10) என்ற சதி கோட்பாட்டாளர்களின் குழுவானது, நாசாவின் வட துருவ படங்கள் மற்றும் வீடியோக்களை ஆராயும் போது ஒரு மாபெரும் விடயம் (ஒரு நிலையான துளை) மறைக்கப்படுவதை நம்புகின்றன.

#4

இதனால் எட்மண்ட் ஹாலி மூலம், 1692-ஆம் ஆண்டு முதன்முதலில் உருவான வெற்று பூமி கோட்பாடு (hollow earth theory) மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

#5

பூமிக்குள் - வெள்ளி, செவ்வாய் , மற்றும் புதன் கிரகங்களின் விட்டத்தின் அளவில், சுமார் 800 கிமீ ( 500 மைல்கள்) தடினமான ஒரு வெற்று ஷெல் உள்ளது தொடர்ந்து இரண்டு உள் பொதுமையக் கூடுகள் மற்றும் அதன் மிகவும் உள்ளே மைய பாகம் உள்ளது என்பது தான் வெற்று பூமி கோட்பாடு.

#6

அதனை தொடர்ந்து 1818-ஆம் ஆண்டு ஜான் சிம்மஸ் என்பவர் மூலம் அடர்ந்த கோளங்கள் மற்றும் துருவ வெற்றிடம் கோட்பாடு (theory of concentric spheres and polar void) உருவாக்கம் பெற்றது.

#7

ஜான் சிம்மஸ், அரசாங்கத்தின் உதவி மற்றும் நிதியை பெற்று பூமியின் வெற்றிடத்தை நோக்கிய ஆய்வு பயணம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டதாகவும், ஜான் சிம்ஸின் அந்த வாழ்நாள் கனவு ஆய்வு நடைபெறாமலேயே 1829-ல் இறந்தார் என்றும் வரலாற்று பதிவு உள்ளது. ஆராய ஒரு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

#8

பிறகு, ஏகப்பட்ட பூமி வெற்றிட கோட்பாட்டு ஆய்வாளர்கள், பூமி கிரகத்தில் மாபெரும் துளையை இட்டு ஆய்வு மேற்கொள்ள முயற்சித்தனர், அப்போது பல குழுக்களை சேர்ந்த ஆய்வாளர்கள் சில அரிய நிகழ்வுகள் மூலம் உயிரிழந்தனர்.

#9

துருவ ஆய்வாளர் ஆன அட்மிரல் ரிச்சர்ட் மின் பேர்ட் என்பவர் பூமி வெற்றிட ஆய்வின்போது வெற்றிகரமாக உள் பூமியை அடைந்ததை தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

#10

அதன் படியாக, துளைக்குள் நுழைந்த துருவ ஆய்வாளர் அட்மிரல் ரிச்சர்ட் மின் பேர்ட் - மலைகள், மரங்கள் , ஏரிகள் , நாகரிகம் மற்றும் ஆகப்பெரிய அசுரன் போன்ற விலங்குகளுக்கு மத்தியில் சுமார் 1,700 மைல்கள் பயணித்ததாக கூறியுள்ளார்.

#11

மிக முக்கியமாக பல விபரீதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நாஜி ஆட்சி காலத்தில் வெற்று பூமி கோட்பாடு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

#12

அடால்ஃப் ஹிட்லர் கூட பூமியின் மையத்தை நோக்கி ஆய்வு பயணம் ஒன்றை அண்டார்டிகாவில் நிகழ்த்த உத்தரவிட்டார் என்றும் சில சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

#14

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
NASA's Alleged Cover-up of a Giant Hole at North Pole, Made to Hide the Entrance to Inner Earth, Conspiracy Theorists Claim. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்