உலகின் தலைசிறந்த டாப் 10 ஹைடெக் துப்பாக்கிகள்.!!

Written By:

பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினரும் எதிர்கால தேவைக்கு ஏற்ற ஸ்மார்ட் வகை துப்பாக்கிகளை தயாரித்து அவைகளை சோதனை செய்து வருகின்றனர். தண்ணீரிலும் சுடும் திறன் கொண்ட துப்பாக்கிகளில் துவங்கி கைரேகை ஸ்கேனர் மூலம் பாதுகாக்கப்பட்ட துப்பாக்கி வரை பல்வேறு அதி நவீன தொழில்நுட்பங்கள் நவீன கால துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இது போன்ற தயாரிப்பு மற்றும் சோதனைகள் தினமும் நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றது. அது ஒரு பக்கம் இருக்கட்டும், இங்கு தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் துப்பாக்கிகளில் உலகளவில் தலைசிறந்த துப்பாக்கிகளின் டாப் 10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கார்னர் ஷாட்

CornerShot

செமி ஆட்டோமேடிக் பிஸ்டல் அல்லது கிரீனேடு லான்ச்சர் என இரு வித பயன்பாட்டை வழங்கும் கார்னர் ஷாட் துப்பாக்கி வகைகள் வளைவுகளில் சிறப்பாக தாக்க வழி செய்யும்.

ஏடிஎஸ்

ADS

ஏடிஎஸ் என்பது அசால்ட் ரைஃபிள் வகையாகும். இவ்வகை துப்பாக்கிகளை தண்ணீருக்கு அடியிலும் பயன்படுத்த முடியும். ரஷ்ய நாட்டு சிறப்பு படையினர் பயன்படுத்தும் இவ்வகை துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 700 ரவுன்டு வரை தாக்க முடியும்.

மேக்புல் FMG-9

Magpul FMG-9

இது சப்மெஷின் வகை துப்பாக்கி ஆகும். பார்க்க லேப்டாப் பேட்டரி போன்று காட்சியளிக்கும் இந்த துப்பாக்கிகள் குறைந்த எடை கொண்டிருக்கும்.

ஏர்மேடிக்ஸ் iP1

Armatix iP1

இது கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட அதிநவீன துப்பாக்கி என்பதால் இதனை இயக்க சரியான கைரேகை தேவைப்படும்.

போல்ட் ஆக்ஷன் டிபி ரைஃபிள்

Bolt-Action .338 TP rifle

டிராக்கிங் பாயின்ட் என்பது துப்பாக்கி மற்றும் ரைஃபிள் சார்ந்த தொழில்நுட்பங்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் $50,000 மதிப்புடைய துப்பாக்கி தான் போல்ட் ஆக்ஷன் டிபி ரைஃபிள்

சியாப்பா ரைனோ

Chiappa Rhino

இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட இந்த கைத்துப்பாக்கி இலக்குகளை மிக கச்சிதமாக தாக்க வழி செய்யும் படி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

KRISS வெக்டார்

KRISS Vector

இது வரை சப்மெஷின் துப்பாக்கி வகை ஆகும். 95 சதவீதம் பேரல் ரைடிங் அளவை குறைத்து 60 சதவீதம் ரீகாயில் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.

FN Five-seven

FN Five-seven

இது மிகவும் சக்தி வாயந்த பிஸ்டல் ஆகும். பல்வேறு புல்லட் ப்ரூஃப் தடைகளை தகர்க்கும் திறன் கொண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

பெர்சனல் ஹால்டிங் சிமுலேஷன் ரபெஸ்பான்ஸ்

personnel halting and stimulation response

இது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தயாரிப்பில் உருவானதாகும். இந்த துப்பாக்கி எதிரிகளின் கண் பார்வையை பாதிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்யூரசி இன்டர்நேஷனல்

Accuracy International

அக்யூரசி இன்டர்நேஷனல் என்பது துப்பாக்கிகளை தயாரிக்கும் ஒரு ப்ரிட்டன் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் துப்பாக்கிள் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கும் படி வடிவமைக்கப்படுகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
most high-tech guns in the world Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்