கல்வரி : 16 ஆண்டுகள் கழித்து களமிறங்கும் இந்தியாவின் 'டைகர் சுறா'..!

|

கல்வரி - கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் வழக்கமான நீர்மூழ்கியாக ( conventional submarine) களம் காண இருக்கிறது. இறுதியாக கல்வரி சார்ந்த கடல் சோதனைகள் ஆனது கடந்த ஞாயிறு அன்று மும்பையில் அரங்கேற தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான நீருக்கடி போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவின் நிலைபாட்டை தக்கவைத்து கொள்ள இது மிகவும் அவசியாமான ஒன்றாகிறது. கல்வரி பற்றி நாம் தெரிந்து கொள்ள 10 விஷயங்கள் உள்ளன, அவைகளை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முதல் நீர்மூழ்கி கப்பல் :

முதல் நீர்மூழ்கி கப்பல் :

ப்ராஜக்ட் 75-இன் (Project 75) கீழ் மிக தாமதாமாக கட்டமைக்கப்பபடும் 6 ஸ்கார்ப்பின்-கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்களில் (Scorpene-class submarines) இது இந்தியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.

நிறுவனம்:

நிறுவனம்:

இவ்வகை நீர்மூழ்கி கப்பல்கள் பிரஞ்சு நிறுவனமான டிசிஎன்எஸ் (DCNS) இணைந்து மசகோன் கப்பல்துறை லிமிடெட் ( MDL) நிறுவனம் மூலம் கட்டப்படுகின்றன.

சோதனை :

சோதனை :

அடுத்த சில மாதங்களில் , கல்வரி நீர்மூழ்கி கப்பல் ஆனது தேவையான மற்றும் கடுமையான நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில் சோதனை செய்யப்பட உள்ளது. அதாவது கடல் மேற்பரப்பில்,கடல் ஆழத்தில், ஆயுதங்கள் மற்றும் சத்தம் சார்ந்த சோதனைகளை நிகழ்த்த இருக்கறது.

செப்டம்பர் :

செப்டம்பர் :

கல்வரி நீர்மூழ்கி ஆனது இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைவெளி :

இடைவெளி :

மீதமுள்ள 5 ஸ்கார்ப்பின்-கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்களும் 9 மாத இடைவெளிக்குள் கட்டமைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மை ஆயுதங்கள் :

முதன்மை ஆயுதங்கள் :

டீசல் எலெக்ட்ரிக் ஐஎன்எஸ் கல்வரி ஆனது பல் இல்லாத சுறா போன்றும் தோட்டா இல்லாத துப்பாக்கி போலவும் தான் கடலில் சுற்ற இருக்கிறது ஏனெனில், இதன் முதன்மை ஆயுதங்கள் அதன் ஹெவிவெயிட் டார்பிடோக்கள் என்று, அகஸ்டாவெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளது. வழக்கு முடிந்தால் கல்வரி, பெயருக்கு ஏற்றது போலவே 'டைகர் சுறா'வாக இந்திய கடல் பகுதிகளில் திரியும்..!

அவசியம் :

அவசியம் :

தற்போது இந்திய கடற்படையிடம் 13 வழக்கமான நீர்மூழ்கிகள் தான் (9 ரஷ்ய வகை, 4 ஜெர்மன் வகை) உள்ளன. அதில் 10 நீர்மூழ்கிகள் அதன் குறிப்பிடப்பட்ட சேவை காலத்தை தாண்டி விட்டன. ஆகையால். கல்வரி மிகவும் அவசியப்படுகிறது..!

அணு சக்தி :

அணு சக்தி :

ரூ 30,000 கோடி ரூபாய் செலவில் அணுகுண்டு ஏவுகணைகள் தாங்கிய அணு சக்தியில் இயங்கும் மூன்று நீர்மூழ்கி கப்பல்கள், வைசாக்கில் கட்டுமானத்தில் உள்ளது. ரூ .50,000 கோடிக்கும் மேலான செலவில் அணு சக்தியில் இயங்கும் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவில் கட்டமைக்கப்பட இருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!


'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Kalvari Indias first new submarine in 16 years begins trial. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X