ஏர்வயர் உடன் இணைகிறது ஜியோ. இந்தியாவின் கார் ஆப்ஸ் தரம் அதிகரிக்குமா?

ரிலையன்ஸ் ஜியோ - ஏர் வயர் டெக்னாலஜி கார் ஆப்ஸ் என்னென்ன செய்யும் தெரியுமா?

இந்தியாவில் கார் உள்ள வாடிக்கையாளர்கை கவர்ந்திழுக்க ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ஏர்வயர் டெக்னால்ஜி நிறுவனமும் கைகோர்க்க உள்ளது.

ஏர்வயர் உடன் இணைகிறது ஜியோ. இந்தியாவின் கார் ஆப்ஸ் தரம் அதிகரிக்குமா?

ஏர்வயர் கனெக்ட்டட் கார் நிறுவனம் இந்தியாவில் ஜியோ நிறுவனத்துடன் கைகோர்த்து 4G/LTE நெட்வொர்க் மூலம் கார் ஆப்ஸ் மற்றும் சர்வீஸ் உள்பட பல சிறந்த சேவைகளை கார் வைத்திருப்பவர்களுக்கு அளிக்க உள்ளது. இதனால் காரின் பாதுகாப்பு, மெயிண்டனஸ் ஆகியவை மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்வயர் டெக்னாலஜிஸ் தலைவர் மற்றும் சி.இ.ஓ டெபாஷிஷ் பாக்சி என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'நாங்கள் ஜியோவுடன் இணைந்து சேவை செய்ய உள்ளதை பிரபல கார் நிறுவனங்களிடம் தெரிவித்து இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டு கொண்டிருக்கின்றோம்' என்று கூறியுள்ளார்.

ஏர்வயர் உடன் இணைகிறது ஜியோ. இந்தியாவின் கார் ஆப்ஸ் தரம் அதிகரிக்குமா?

ஜியோ மற்றும் ஏர்வயர் டெக்னாலஜி இணைந்து நாடு முழுவதும் தரவுள்ள சேவை உலகின் மிகப்பெரிய நாடு முழுவதும் தரும் சேவைகளில் முதன்மையக இருக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் வகையிலும் கார் உரிமையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடனும் இந்த சேவை இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

வைஃபை வழியாக மேக்புக் இண்டர்நெட்டை ஸ்மார்ட்போனுக்கு மாற்றும் எளிய வழிகள்

ஜியோ மற்றும் ஏர்வயர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த புதுவித ஆப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இதுவரை அவர்கள் பார்த்திராத சேவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ டெக்னாலஜி, மற்றும் ஏர் வயர் டெக்னாலஜியுடன் கூடிய இந்த ஆப் காரில் பொருத்தப்படும்போது காரின் முழு கட்டுப்பாடும் இந்த ஆப் மூலம் டிரைவருக்கோ அல்லது காரின் உரிமையாளருக்கோ தெரிய வரும் வகையில் அமைக்கப்பட்டுவிடும்.

கார் டிரைவிங் செய்யும்போது, பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கும்போது இந்த ஆப், தேவையான தகவல்களை டிரைவருக்கும், காரின் உரிமையாளருக்கும் கொடுத்து கொண்டே இருக்கும்

மேலும் காரின் அருகே ஒரு வாட்ச்மேனை வேலைக்கு போட்டால் எந்த அளவுக்கு கார் பாதுகாப்பாக இருக்குமோ அந்த அளவுக்கு இந்த ஆப் காரின் உரிமையாளருக்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும்.

கார் திருடப்பட்டால் உடனடியாக டிரைவருக்கும், காரின் உரிமையாளருக்கும் அலர்ட் கொடுக்கும். அதையும் மீறி திருடப்பட்டால் அந்த கார் எங்கே சென்று கொண்டிருக்கின்றது, எந்த நிலையில் இருக்கின்றது என்பதை மிக எளிதாக அறிந்து மீட்டுவிடலாம்.

ரூ.148, ரூ.248, ரூ.345/-க்கு ஐடியாவின் அதிரடி அன்லிமிடெட் திட்டங்கள்.!

மேலும் காரில் உள்ள ஆயில் நிலை, டயரில் உள்ள காற்றழுத்தம், காரில் உள்ள தண்ணீரின் அளவு, எரிபொருள் அளவும், பேட்டரி மாற்ற வேண்டிய தேதி போன்ற பல விபரங்களை இந்த ஆப் கார் உரிமையாளருக்கு தரும்

மேலும் கார் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் டிரைவிங் செய்யும்போது டிரைவருக்கு தேவையான டிப்ஸ், எவ்வளவு ஸ்பீடில் எந்த இடத்தில் போக வேண்டும் என்ற விபரம், பிரேக் எந்த இடத்தில் போட வேண்டும், எந்தெந்த இடங்களில் மெதுவாக செல்ல வேண்டும் என்று ஒரு கைடு போல இந்த ஆப் உதவும் தன்மை உடையடு

இவ்வளவு சிறப்பு அம்சங்கள் உள்ள இந்த ஆப் தற்போது சோதனை வடிவில் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் இந்திய கார் உரிமையாளர்கள் இந்த ஆப்-ஐ பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
The product is currently in field trial and will be available in quantity soon.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்