கூகுள் I/O மாநாட்டில் உங்களுக்காக அறிவிக்கபட்ட முக்கிய அறிவிப்புகள்

கூகுளின் புதிய வசதிகள்

By Siva
|

கூகுள் நிறுவனத்தின் I/O டெவலப்பர்கள் மாநாடு மே மாதம் 17 முதல் 19 வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆச்சரியத்தக்க அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டுள்ளது.

கூகுள் I/O மாநாட்டில் உங்களுக்காக அறிவிக்கபட்ட முக்கிய அறிவிப்புகள்

கூகுள் நிறுவனத்தின் I/O மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் ஹார்ட்வேரில் மட்டுமின்றி இந்த வருடம் முதல் சாப்ட்வேரிலும் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த மாநாட்டில் இந்நிறுவனம் பல ஆச்சரியத்தக்க சாப்ட்வேர் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை அசத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்கும் ஒருசில மிகச்சிறந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு தற்போது முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை தற்போது பார்ப்போம்

ஆண்ட்ராய்டு O:

ஆண்ட்ராய்டு O:

ஆண்ட்ராய்டு O என்பது கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஓஎஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஓஎஸ்-இன் பிரிவியூ சமீபத்தில் வெளியானது. நெக்ஸஸ் மற்றும் பிக்சல் மாடல் உபகரணங்களுக்காக பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு O பிரிவியூ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான இந்த ஓஎஸ்-இல் பல அரிய சிறப்பான அம்சங்கள் அடங்கியுள்ளது குறிப்பாக நோட்டிபிகேசன் டாட்ஸ், பிக்சர் இன் பிக்சர் மற்றும் பல அரிய விஷயங்கள் இந்த ஓஎஸ்-இல் உள்ளது

ஆண்ட்ராய்டு GO:

ஆண்ட்ராய்டு GO:

ஆண்ட்ராய்டு GO என்பது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் வரவுள்ள ஒரு கேம்ஸ் சாப்ட்வேர். ஆண்ட்ராய்டு ஓஎஸ் உள்ள போன்களில் ஒருசில ஹார்ட்வேர்களை பொருத்தினால் போதும் இந்த ஆண்ட்ராய்டு GOவை பெற்று கொள்ளலாம்.

மேலும் இது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் செயல்படுவது மட்டுமின்றி 1GB ரேம் அளவுக்கு உட்பட்ட இடத்தையே ஆக்கிரமித்து கொள்கிறது என்பது கூடுதல் சிறப்பு

கூகுள் அசிஸ்டெண்ட் பெறும் கூடுதல் வசதி:

கூகுள் அசிஸ்டெண்ட் பெறும் கூடுதல் வசதி:

ஐஒஎஸ் போன் பயன்பாட்டாளர்கள் இதுவரை சிறி அசிஸ்டெண்ட் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இனிவரும் காலங்களில் கூகுள் அசிஸ்டேண்ட் வாய்ஸ் கமாண்ட் சாப்ட்வேரையும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு அமெரிக்காவில் உள்ள ஐஒஎஸ் பயன்பாட்டாளர்கள் மட்டும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியை பெற்று கொள்ளலாம்

ஐஒஎஸ் போன்களில் செயல்படும் வகையில் மட்டுமின்றி மேலும் சில குறிப்பிட்ட வசதிகளை இந்த கூகுள் அசிஸ்டெண்ட் பெற்றுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செயலி தற்போது பல ரீஜினல் மொழிகளிலும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மொழிகளை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இருவித பயன்பாட்டாளர்களும் பெற்று கொள்ளலாம். மேலும் கூகுள் அசிஸ்டேண்ட் மூலம் பணத்தை அனுப்பவோ அல்லது பெறும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

தொலைந்துபோன ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிப்பது எப்படி (ஆண்ட்ராய்டு).?தொலைந்துபோன ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிப்பது எப்படி (ஆண்ட்ராய்டு).?

கூகுள் ஹோம் பக்கத்திலும் புதிய வசதி:

கூகுள் ஹோம் பக்கத்திலும் புதிய வசதி:

கடந்த 2016ஆம் ஆண்டு கூகுள் ஹோம் பக்கம் மேம்படுத்தப்பட்டு புதிய வசதிகளை அள்ளி கொடுத்த நிலையில் தற்போது மேலும் ஒருசில வசதிகளை இணைக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

இதன்படி இனிமேல் கூகுள் ஹோம் பக்கத்தில் இருந்து நம்பரை டயல் செய்யாமலே போன் செய்யவும், காலண்டர் செட்யூல் செய்யவும், ஞாபகப்படுத்தும் விஷயங்களை பதிவு செய்யவும், ஹோம் பக்கத்தில் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கவும் உள்ள வசதிகள் வரப்போகின்றன

கூகுள் ஜாப்ஸ்:

கூகுள் ஜாப்ஸ்:

கூகுள் நிறுவனம் வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் ஒருசில முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளது.

குறிப்பாக மான்ஸ்டார், லிங்க்ட் இன், கேரியர் பில்டர், ஃபேஸ்புக் மற்றும் கிளாஸ்டோர் ஆகியவற்றுடன் இணைந்து வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அளிக்க உள்ளது. இதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய உதவியை கூகுள் செய்ய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிமெயில் ஏற்படும் புதிய மாற்றம்

ஜிமெயில் ஏற்படும் புதிய மாற்றம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு ஜிமெயில் வசதியை அளித்துள்ள கூகுள், இந்த செயலியில் மேலும் மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உங்களுக்கு வரும் இமெயிலுக்கு பதிலளிக்க ஸ்மார்ட் வழி ஒன்று அறிமுகம் செய்கிறது.

இந்து ஜிமெயில் மற்ரும் அலோ ஆப்ஸில் இருக்கும். இந்த புதிய வசதி ஜிமெயிலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி

கூகுள் போட்டோக்கள்:

கூகுள் போட்டோக்கள்:

கூகுள் நிறுவனத்தின் புதிய வசதியான இந்த போட்டோ செக்சனில் வருடத்திற்கு 500 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது. ஆண்ட்ராய்ட், ஐஒஎஸ் மற்றும் வெப் வெர்ஷன் ஆகியவற்றில் வரவுள்ள இந்த வசதியில் மூன்று புதிய வசதிகளான ஷேர்டு லைப்ரரிஸ், போட்டோ ஆல்பம்ஸ், மற்றும் சஜஸ்ட்டட் ஷேரிங் ஆகியவை அறிமுகம் செய்யப்படவுள்ளது

VR ஹெட்செட்டுகள்:

VR ஹெட்செட்டுகள்:

கூகுள் நிறுவனம் HTC மற்றும் லெனோவா நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளதால் இதில் VR ஹெட்செட்டுகள் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த ஹெட்செட்டை பயன்படுத்த கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் அருகில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வயர்லெஸ் டெக்னாலஜியில் செயல்படும் இந்த VR ஹெட்செட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அபரீதமான அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி

கூகுள் லென்ஸ்:

கூகுள் லென்ஸ்:

இந்த புதிய வசதியை ஸ்மார்ட்போன் கேமிராவில் பயன்படுத்தி வெறும் கண்களுக்கு தெரியாத மிகச்சிறிய பொருட்களையும் படமெடுக்கலாம். சாம்சங் போன்களில் உள்ள பிக்ஸ்பி வெர்ஷனுக்கு நிகரானது இந்த புதிய வசதி. மேலும் கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் பார்க்கும் ஒரு பொருள் என்ன என்பதையும் அறிந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Here are all the major announcements those have happened at the Google I/O conference including Android O, Android Go, Google Photos new features, Google Assistant for iOS, etc.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X