ஏலியன்களை மறைக்கும் கூகுள்.!!

Written By:

உலகின் மிகச்சிறந்த தேடுபொறி நிறுவனமாக கூகுள் விளங்குகின்றது. தினமும் உலக மக்களின் பல கோடி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பணியினை கூகுள் தேடுபொறி மேற்கொண்டு வருகின்றது. அத்தகைய கூகுள் நிறுவனத்தின் மற்றொரு சேவை தான் கூகுள் மேப்ஸ்.

கூகுள் மேப்ஸ் சேவையானது ஒவ்வொரு வாரமும் சுமார் 200 கோடி மேப்பிங் கோரிக்கைகளை கையாள்கின்றது. இதற்கென விண்கலங்களில் இருந்து எடுக்கப்பட்ட அதிக தெளிவுடைய புகைப்படங்களை பயன்படுத்தி அந்நிறுவனம் தெருவாரியாக மேப்பிங் தகவல்களை கச்சிதமாக வழங்குகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சேவை

வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்த படியே உலகினை வலம் வர கூகுள் மேப்ஸ் வழி செய்கின்றது. இந்த சேவையை கொண்டு உலகின் மூலை முடுக்குகளையும் அலசி ஆராய முடியும்.

மறைத்தல்

இத்தகைய சேவையை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் டிஜிட்டல் எர்த் சேவையில் அதிகப்படியான மழுப்பப்பட்ட புகைப்படங்கள் இருக்கின்றன.

பார்க்க கூடாது

உலகெங்கிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான பகுதிகளில் சிலவற்றை பார்க்க கூகுள் நம்மை அனுமதிப்பதில்லை என்பது தான் உண்மை.

என்ன

அப்படி கூகுள் நிறுவனம் நம்மிடம் இருந்து எதை தான் மறைக்கின்றது. 2005 ஆம் ஆண்டு கூகுள் மேப்ஸ் சேவை துவங்கப்பட்ட போது பலரும் சில பகுதிகள் மறைக்கப்பட்டிருப்பதை கவனித்தனர்.

காரணம்

புகைப்படங்கள் மறைக்கப்பட்டிருப்பது குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பிய சந்தேகத்திற்கு கூகுள் நிறுவனம் பதில் அளித்தது.

புகைப்படம்

அவ்வாறு கூகுள் நிறுவனம் அளித்த பதிலில், கூகுள் மேப்ஸ் சேவையில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள், தனியார் மூலம் வாங்கப்பட்டதாகும். இவர்கள் வழங்கும் புகைப்படங்கள் ஒவ்வொரு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படவைகள் ஆகும்.

மறைத்தல்

இவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களில் ஒவ்வொரு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மறைக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு சார்பில் உத்தரவிடப்படும்.

பாதுகாப்பு

பெரும்பாலும் இவை தீவிரவாத அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே மறைக்கப்படுகின்றன. ஆனால் இது தான் உண்மை காரணமா.??

டாக்டர் ரிச்சார்டு போய்லன்

2005 ஆம் ஆண்டு டாக்டர் ரிச்சார்டு போய்லன் என்பவர் கூகுள் மேப்ஸ் சேவையில் உலகின் மூன்று இடங்களில் மர்மமான முறையில் செவ்வகங்களை கண்டறிந்தார்.

பகுதிகள்

இந்த மூன்று பகுதிகளும் மத்திய கிரீன்லாந்து, கனடாவின் நுனாவுட் மற்றும் மூன்றாவது இடம் அலாஸ்காவின் ஆர்க்டிக் ராணுவ சோதனை மையத்தின் அருகே இருந்தது.

ஏலியன் பீகான்

மறைக்கப்பட்ட இப்பகுதிளானது ஏலியன் பீகான்களாக இருக்கலாம் என ரிச்சார்டு போய்லன் கருதுகின்றார்.

ஏலியன் பீகான்

ஏலியன் பீகான் என்பது, ஏலியன்களுக்கு வழிகாட்டும் சிக்னல்கள் ஆகும்.

நட்சத்திர மண்டலம்

உலகளாவிய பயணத்தை மேற்கொள்ள நட்சத்திர மண்டலத்தில் யாரோ அதிநவீன அமைப்புகளை விண்வெளியில் கட்டமைத்துள்ளனர் என்றும் அவர் நம்புகின்றார்.

ஒப்புதல்

இவரது கருத்துகள் அப்போலோ மற்றும் சோவியத் விண்வெளி வீரர்களின் அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏலியன் விண்கலம்

இந்த விண்வெளி வீரர்கள் தங்களது பயணத்தின் போது ஏலியன் விண்கலம் போன்றவைகளை கண்டிருப்பதாகவும் தெரிவித்துன்ளனர்.

பயணம்

1969 ஆம் ஆண்டு மே மாதம் டாம் ஸ்டஃப்போர்டு, ஜான் யுங் மற்றும் எக்யூன் செர்மன் நிலவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

புகைப்படம்

அப்போலோ 10 பயணம் மேற்கொண்ட வீரர்கள் அசாதாரண கைத்திறன் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றினை புகைப்படம் எடுத்ததாக சதி கோட்பாட்டு ஆய்வாளர் தாம் பர்நெட் கூறுகின்றார்.

மோனோலித்

இந்த உருவமானது 2001 : ஏ ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தில் வருவதை போன்று மோனோலித் என அழைக்கப்பட்டது.

இடையூறு

அப்போலோ 10 விண்கலம் தனது பயணத்தின் போது பல்வேறு இடையூறுகளை சந்தித்தாக சில அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைகளில் தகவல் பரிமாற்ற தோல்வி, கமாண்ட் மாட்யூல் ஹேட்ச் போன்றவை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

விபத்து

இப்பிரச்சனைகள் தற்செயலாக ஏற்பட்ட விபத்து இல்லை, மாறாக இவை மோனோலித் மூலம் ஏற்பட்ட இடையூறு தான் என்றும் கூறப்படுகின்றது.

அப்போலோ 10

உண்மையில் ஏலியன் பீகான்களில் இருந்து வெளியான சக்திவாய்ந்த சிக்னல்கள் தான் அப்போலோ தற்காலிக பிரச்சனைகளுக்கு காரணமா.??

ஆய்வாளர்

அமெரிக்க ஆய்வாளர் டாக்டர். மைக்கேல் வொல்ஃப் ஏலியன் பீக்கான்கள் நிச்சயம் வெளிச்சம் மற்றும் ஒலி மூலம் சிக்னல்களை வெளிப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

ரிச்சார்டு போய்லன்

1972 ஆம் ஆண்டு மூன்று பீக்கான்கள் ரகசிய ராணுவ விண்வெளி வீரர்கள் மீட்டெடுத்து, அவைகளை பனி சூழ்ந்த தொலை இடத்தில் வைத்து சோதனை செய்ததாக ரிச்சார்டு போய்லன் தெரிவித்துள்ளார். இவைகளை தான் கூகுள் மறைத்ததா.?

எடுத்தல்

இவை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவை கூகுள் மேப்ஸ் சேவையில் இருந்து எவ்வித தகவல்களும் இல்லாமல் எடுக்கப்பட்டு விட்டது.

அனுப்புதல்

மேலும் இந்த பீகான்கள் நாசா மூலம் விண்வெளிக்கு திரும்ப அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது.

சான்று

இதற்கு போதிய சான்றுகள் இருந்தாலும் சிலர் இவை தொழில்நுட்ப கோளாறு அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

தொழில்நுட்பம்

மோனோலித் கூகுள் மேப்ஸ்களில் மறைக்கப்பட்ட வடிவத்திலேயே இருக்கலாம், ஆனால் விண்வெளியில் இத்தகைய பெரிய பொருட்களை மீட்கும் தொழில்நுட்பம் 1972 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்தது.

காரணம்

உலகில் நமக்கு தெரியாமல் மறைக்கப்பட்ட விஷயங்களில் இது ஒரு சதவீதம் மட்டுமே ஆகும்.

மேலும் படிக்க

ஏரியா 51 : மர்மமும், வெளியான பதில்களும்.!!

குட்டையை குழப்பிய கூகுள் : சிதறமால் சிக்கிய வினோதங்கள்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Google Earth Hiding Alien Objects Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்