இரசாயன ஆயுதம் தயாரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் : சர்வதேச நிறுவனம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!!

By Meganathan
|

இரசாயன ஆயுதங்களுக்கு தடை கோரும் நிறுவனமான குளோபல் கெமிக்கல் வெப்பன்ஸ் வாட்ச்டாக் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களை கொண்டு ஏற்கனவே பல்வேறு அச்சுறுத்தல்களில் ஈடுப்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் சொந்தமாக ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

1

1

அதன் படி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் சொந்தமாக இரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதாக இந்த அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினர் இதற்கான ஆதாரங்களை கண்டறிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

2

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இந்த இரசாயன ஆயுதங்களை ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்தக்கூடும் என இந்த அமைப்பின் தலைவர் அஹமத் அசம்கு தெரிவித்துள்ளார்.

3

3

யுத்தத்தால் சீரழிந்து வரும் இரு நாடுகளின் தாக்குதல்களில் சல்ஃபர் மஸ்டர்டு பயன்படுத்தியதற்கான ஆதாரத்தை இந்த அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினர் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4

4

ஐஎஸ்ஐஎஸ் மீது நேரடியாக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்றாலும் ஐஎஸ்ஐஎஸ் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கு உறுதியான சந்தேக கூறுகள் இருப்பதாக அஹமத் மேலும் தெரிவித்துள்ளார்.

5

5

ஐஎஸ்ஐஎஸ் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதோடு இதனினை அவர்களே தயாரித்திருப்பது மிகுந்த கவலைக்குரியது என்றும் அஹமத் தெரிவித்துள்ளார்.

6

6

மேலும் இரசயான ஆயுதங்களை தயாரிக்க போதுமான தொழில்நுட்பம் மற்றும் அதற்கான கரு பொருட்களையும் அவர்கள் வைத்திருப்பதை இது உணர்த்துகின்றது.

7

7

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறிய அளவிலான குளோரைன் மற்றும் மஸ்டர்டு கேஸ் தயாரிக்கும் திறன் இருப்பதாக பிப்ரவரி மாதம் அளித்த பேட்டியில் சிஐஏ தலைவர் ஜான் ப்ரெனான் தெரிவித்திருந்தார்.

8

8

சிரிய ராணவத்திற்கு எதிராக கடந்த மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொடிய வாயு பயன்படுத்தப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

9

9

மாரச் 9 ஆம் தேதி ஈராக் நாட்டின் டாஸா பகுதியில் நடத்தப்பட்ட கொடிய வாயு தாக்குதலில் சுமார் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததோடு 1500க்கும் அதிகமானோர் காயமுற்றதோடு சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

10

10

இத்தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து சுமார் 25,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

11

11

எதிரிகளை திணறடிக்கும் அமெரிக்காவின் ஸ்டெல்த் கில்லர்.!!

அணு ஆயுத போர் : தயார் நிலையில் ரஷ்ய தொழில்நுட்பம்.!!

12

12

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Global Weapons Watchdog Says ISIS May Be Making Chemical Weapons Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X