ரஷ்யா உருவாக்கிய நரகம் : 'டோபோல்-எம்'..!

Written By:

டோபோல்-எம் பல்லிஸ்டிக் மிசைல் - மனித இனம் உருவக்கியதிலேயே மிகவும் அச்சுறுத்தலான ஒரு ஆயுதம் எனலாம். அதுமட்டுமின்றி டபோல்-எம் பல்லிஸ்டிக் மிசைல், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்பு ரஷ்யா உருவாக்கிய முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (intercontinental ballistic missile - ICBM) ஆகும்.

டோபோல்-எம் பல்லிஸ்டிக் மிசைல் ஆனது நரகத்தை விடவும் மிக கொடியது என்று ரஷ்யர்கள் வர்ணிக்கிறார்கள், ஆனால், வர்ணிக்க இதொன்றும் கவிதை இல்லை அதிநவீன தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் விபரீதங்களில் ஒன்று. அதுவும் ரஷ்யாவிடம் இருக்கும் ஒரு ஆயுதம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பதுங்கு குழி :

டோபோல்-எம் பல்லிஸ்டிக் மிசைல் தனை நகரங்கள், காடுகள் அல்லது அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தும் பதுங்கு குழிகளில் கூட மறைத்து வைத்துக் கொள்ள முடியும்.

சிதைத்து நொறுக்கி :

இலக்கை நோக்கி மணிக்கு சுமார் 1500 மைல் வேகத்தில் செல்லும் இதன் குறுக்கே எது வந்தாலும் அதனை சிதைத்து நொறுக்கி முன்னேறும் சக்தி கொண்டது.

ரஷ்ய பெயர் :

டோபோல் (TOPOL) என்பது வெள்ளை பாப்லர் மரத்தின் ரஷ்ய பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீள் வடிவமைப்பு :

அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு கவசத்தை மனதிற் கொண்டு, 1980-களில் தான் இதன் வடிவமைப்பு தொடங்கப்பட்டது, பின்பு 1980களின் இடையே நவீனத்துவம் புகுத்தி மீள் வடிவமைப்பு செய்யப்பட்டது.

கான்கிரீட் குழிகளுக்குள் :

இதுவரை உருவாக்கப்பட்ட 80 டோபோல் யூனிட்களில் சேவைகளிலும் ஈடுபடுகிறது அதுமட்டுமின்றி ஏனைய யூனிட்கள் மிகவும் பலமான கான்கிரீட் குழிகளுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

உருவாக்கம் :

அதிவேகம், அகசிவப்பு அளவீடான பூஸ்ட் என டோபோல் ஏவுகணைகள் முழுக்க முழுக்க அமெரிக்க பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு கவசத்தை கருத்தில் கொண்டே உருவாக்கம் பெற்றுள்ளது.

திறன் :

அதுமட்டுமின்றி குறுக்கே வருபவைகளை தானாகவே எதிர்கொள்ளும் திறனும், நடுபாதையை தேர்வு செய்யும் திறனும் இதற்கு உண்டு.

ட்ராக் :

அமெரிக்க விண்வெளி சார்ந்த அகச்சிவப்பு கண்டறிதல் செயற்கைக்கோள்களால் கண்டுப்பிடிக்கவும் முடியாத மற்றும் ட்ராக் செய்ய முடியாத அளவிலான ராக்கெட் மோட்டார்களை கொண்டு ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தூரம் :

சுமார் 6500 மைல்கள் தூரம் பயணிக்கும் இதன் ஏவுகணையானது சுமார் 70 அடி நீளமும், முழுக்க முழுக்க கார்பன் பைபரால் உருவானதால் வெறும் 10,000 பவுண்ட் எடை மட்டுமே கொண்டிருக்கும்.

கள்ளத்தனமாக :

எதிரி நாடுகளின் முடிவை நிர்ணயம் செய்யும் நூற்றுக்கணக்கான டோபோல்கள் ரஷ்யாவின் நகர்புறம் அல்லாத பகுதிகளில் கள்ளத்தனமாக திரிந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Russia's Fast And Elusive TOPOL M Ballistic Missile Is Scary As Hell - Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்