மீண்டும் மீண்டும் உங்களை யோசிக்க தூண்டும் 'அப்பட்டமான' உண்மைகள்..!

Written By:

சிறிய சிறிய விடயங்களின் மீது போதுமான கவனம் செலுத்தாத வரையில் அது சார்ந்த பெரிய பெரிய உன்மைகளை நம்மால் அறிந்துகொள்ளவே முடியாது. சில சின்னச்சின்ன விடயங்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும் இருப்பினும் கூட அதில் உள்ளடக்கமாய் இருக்கும் சில உண்மைகள் பற்றி தெரிந்துகொள்ளும் போது "அட... நிஜமாகவா..?" என்ற ஆச்சரியம் கிளம்பத்தான் செய்கிறது.

அப்படியாக, மீண்டும் மீண்டும் உங்களை யோசிக்க தூண்டும் 'அப்பட்டமான' அறிவியல் உண்மைகள் பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சூரிய ஒளி :

நாம் உண்ணும் அனைத்துமே சூரிய ஒளியால் பதப்படுத்தப்பட்ட ஒன்றாகும்..!

டைனோசர்கள் :

பூமியில் இருந்து சுமார் 65 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் பூமி போன்றே கிரகம் ஒன்று இருந்தால் அங்கு டைனோசர்கள் இருக்கலாம்.

ஏலியன் :

சரியாக ஜூலை 20 ஆம் தேதி, 1969 ஆம் ஆண்டு நிலவிற்கு ஏலியன்கள் நுழைந்தனர், அதாவது வேற்று கிரகம் சென்றால் மனிதர்களும் வேற்றுகிரகவாசிகள் தான்..!

கடல் :

பூமியின் 71% மேற்பரப்பும் கடல் தான் என்கிற போதிலும் மனித கண்களால் காணப்பட்ட கடலின் அளவு வெறும் 5% மட்டுமே..!

அணுக்கள் :

பூமியின் மக்கள் தொகை மொத்தம் 7 பில்லியன் ஆகும். இதில் ஒவ்வொருவருக்குள்ளும் சுமார் 7 அக்டோலியன் அணுக்கள் உள்ளடங்கியுள்ளது.

எல்லை :

நாம் வாழும் பிரபஞ்சத்திற்கு எல்லையே கிடையாது. மீறி இருந்தாலும் அதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

சூரிய உதயம் :

நீங்கள் சூரிய உதயத்தை காணும் அதே நேரம் வேறொருவர் சூரிய அஸ்தமனத்தை கண்டுக்கொண்டிருப்பார்.!

இணைப்பு பணி :

விண்வெளியில் இருக்கும் எல்லா நட்சத்திரங்களும் ஒரே வயது கொண்டவைகள் அல்ல. சில நட்சத்திரங்கள் உருவாகி மில்லியன் ஆண்டுகள் ஆகலாம், இன்னும் சில பில்லியன் ஆண்டுகள். இரவு பொழுதில் அவைகள் எல்லாமுமே நம் கண்களுக்கு ஒரே நேரத்தில் நிகழ்வது போல் தோன்றினாலும் கூட அது விண்வெளியின் ஒரு பில்லியன் ஆண்டுகள் அளவிலான இணைப்பு பணியாகும்..!

மேலும் படிக்க :

பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!


ஒட்டுமொத்த சூரிய குடும்பத்துக்கே 'ஆப்பு' வைக்கும் 10 வன்முறை நிகழ்வுகள்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Facts That’ll Make You Rethink Your Existence In The Universe. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்