படிக்கவே கூடாத 'மிகவும் அதிர்ச்சியான' விக்கிப்பீடியா பக்கங்கள்..!

Written By:

விக்கிப்பீடியா - உலகின் சிறந்த, அறியப்பட்ட ஆன்லைன் கலைக்களஞ்சியமாக திகழ்கிறது, ஏனெனில், தன்னுள் சீரற்ற ஒரு நிலைப்பாட்டில் பல வகையான தகவல்களின் மிகுதியாக விக்கிப்பீடியா இருக்கிறது. சொல்லப்போனால் விக்கிப்பீடியாவின் தகவல்கள் 'மிகவும் மிகுதி'யாகத்தான் இருக்கிறது. விக்கிப்பீடியாவின் பெரும்பாலான பக்கங்கள் யாரவது எதேச்சையாக கிளிக் செய்வார்களா என்று காத்துக்கிடக்கின்றன..!

அப்படியாக, 'இந்த' விக்கிப்பீடியா பக்கங்கள் எல்லாம் இணையத்தில் தேவைதானா.? என்று இன்றுவரை விவாதிக்கப்படும் மிகவும் மோசமான சில விக்கிப்பீடியா பக்கங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

டயட்லோவ் பாஸ் சம்பவம் ( The Dyatlov Pass Incident)

#2

பிப்ரவரி 2-ஆம் தேதி, 1959-ஆம் ஆண்டு உரால் மலைத்தொடரில் நிகழ்ந்த இந்த மர்மமான சம்பவத்தில் ஒன்பது அனுபவம் வாய்ந்த மலையேறும் வீரர்கள் உயிரிழந்தனர், 9 வீரர்களும் தங்கி இருந்த கூடாரங்கள் கிழிக்கப்பட்டிருந்தன, அதுமட்டுமின்றி இறந்து கிடந்தவர்கள் சிலர் வெறும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்திருந்தனர்.

#3

அவர்கள் அனைவரும் தாழ்வெப்பநிலையால் தான் இறந்துள்ளனர் என்றாலும்கூட, சிலருக்கு கடுமையான மார்பு எலும்பு முறிவுகள் மற்றும் மண்டையோட்டில் பெரிய சேதம் ஆகியவைகள் இருந்தது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது

#4

அதிலும், குறிப்பாக பெண் வீராங்கனையான டுபினியாவின் உடல் ஆனது நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது இந்த சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒன்றாகும்.

#5

லினா மதினா (Lina Medina)

#6

1933-ல், பெருவில் பிறந்த லினா மதினா தான் மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் இளம் வயது தாய் ஆவார். அவர் தனது ஐந்தாம் வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் என்று நம்பப்படுகிறது.

#7

மதினாவை ஆய்வுக்கு உட்படுத்திய மருத்துவர்கள் ஐந்து வயதிலேயே அவளுக்கு முதிர்ந்த பாலியல் உறுப்புக்கள் இருப்பதை கண்டறிந்தனர், உடன் இன்று வரையிலாக மதினாவின் உயிரியலுக்குரிய தந்தை யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

#8

தி ப்லூப் (The Bloop)

#9

'ப்லூப்' என்ற வார்த்தை கேட்பதற்கு மிகவும் நகைப்பாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் அது மிகவும் திகிலான ஒரு உயிரினத்தின் ஒலியை குறிப்பிடுகிறது.

#10

1997-ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தினால் (NOAA - National Oceanic and Atmospheric ) பசிபிக் பெருங்கடலில் ஒரு குறைந்த அதிர்வெண் ஒலி கண்டறியப்பட்டது.

#11

அது ஒரு நீள திமிங்கலத்தின் வீச்சை விட பெரியதாக இருந்ததால் இதுவரை மனித இனம் பதிவு செய்ததிலேயே மிகப்பெரிய விலங்கு இதுதான் என்று நம்பப்படுகிறது. அது எழுப்பிய ஒலியை தான் 'ப்லூப்' என குறிப்பிடப்படுகிறது.

#12

பின்பு, 2008-ஆம் ஆண்டு அந்த ப்லூப் ஒலியானது கடலின் உள்ளே இருக்கும் பனிபாறைகளில் ஏற்படும் பனிநடுக்கத்தினால் ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தாலும் ப்லூப் மர்மம் நீடிக்கிறது தான்.

#13

தங்கான்யிகா சிரிப்பு தொற்றுநோய் (The Tanganyika Laughter Epidemic)

#14

1962-ஆம் ஆண்டில், தங்கான்யிகாவில் (தற்போது தன்சானியா) உள்ள கிராமத்தில் ஒரு வெகுஜன இசிவு நோய் பரவியது அது ஒரு சிரிப்பு தொற்றுநோய்..!

#15

சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை பாதித்த இந்த சிரிப்பு தொற்றுநோய் பெரும்பாலும் பள்ளி வயது குழந்தைகள் மற்றும் பெரியவர்களையும் தாக்கியது.

#16

வாய்வு அதிகரிப்பு, மயக்கம், வலி, சொறி, அழுகை, வலிப்பு போன்ற வித்தியாசமான பாதிப்புகளை கொண்ட அந்த தோற்று சில மணி நேரத்தில் இருந்து 16 நாட்கள் வரை தொடர்ந்தது. மற்றும் அதன் காரணம் இன்றுவரை அறியப்படவில்லை.

#17

டர்ரார் (Tarrare)

#18

17-ஆம் நூற்றாண்டைசேர்ந்த மிகவும் விசித்திரமான தீராப்பசியை கொண்ட மனிதர் தான் - டர்ரார். அவரின் பசியை தீர்க்க இயலாத அவரின் பெற்றோர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர்.

#19

அவர் கற்கள், கூடை நிறைய பழங்கள் மற்றும்  உயிருள்ள விலங்குகளையும் உணவாக உட்கொண்டார் என்று கூறப்படுகிறது..!

#20

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நோயாளியின் இரத்தத்தை குடிக்க முயற்சி செய்துள்ளார் மற்றும் சவக்கிடங்கில் உள்ள சடலங்களையும் சாப்பிட முயற்சித்துள்ளார். பின்பு மருத்துவமனையில் இருந்தும் வெளியேற்றப்பட்ட அவர் 1798-ஆம் ஆண்டு காசநோய் பாதிப்பால் உயிர் இழந்தார்.

#21

பாய்மர கற்கள் (Sailing Stones)

#22

பாய்மர கற்கள் - மக்களை பல தசாப்தங்களாக குழப்பிக் கொண்டிருக்கும் ஒரு வசீகரமான புவியியல் நிகழ்வாகும். கலிபோர்னியாவில் உள்ள ஏரி ஒன்றில் உள்ள இந்த கற்கள், விலங்கு அல்லது மனித தொடர்பின்றி தானாக நகர்ந்து செல்கின்றன.

#23

இந்த கற்கள் ஒவ்வொரு முறையும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே நகர்கின்றது என்றும், அவைகள் நகர்ந்த தடங்களை உருவாக்க சுமார் 3-4 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

#24

2014-ஆம் ஆண்டு தான் விஞ்ஞானிகள், அவைகள் பனி ஆர்ப்பரிப்பு பாறைகள் மூலம் தள்ளுவதற்கு போதுமான சக்தி பெற்று நகர்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

#25

க்ளோரியா ராமிரெஸ் - நச்சு பெண்மணி (Gloria Ramirez-The Toxic Lady)

#26

1994-ஆம் ஆண்டு க்ளோரியா ராமிரெஸ், மேம்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் கடுமையான வலி காரணமாக கலிபோர்னியா ரிவர்சைடு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

#27

மருத்துவமனையில் அவரின் உடல் முழுவதும் எண்ணெய் போல பளபளப்பான பிரகாசம் தெரிந்துள்ளது பின்பு அவர் வாயில் இருந்து பூண்டு நாற்றம் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவரின் இரத்த குழாயில் இருந்து அம்மோனியா போன்ற வாசனை வெளியாகியுள்ளது, அவரின் இரத்த மாதிரியில் மணிலா- வண்ண துகள்கள் மிதந்துள்ளன.

#28

இவரை ஆய்வு செய்த 3 செவிலியர்கள் மரணம் அடைந்தனர். அதனை தொடர்ந்து அவரும் மரணம் அடைந்தார், ஊடகம் க்ளோரியா ராமிரெஸை "டாக்சிக் லேடி" அதாவது நச்சு பெண்மணி என்று செய்திகள் பரப்பியது, தனது வலிக்கு வீட்டு மருந்து ஒன்றை அவர் பயன்படுத்தி வந்தார் அதுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

#29

விக்கிப்பீடியாவின் லோகோ உட்பட பிரபல 'லோகோ'க்களுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்களைப் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

#30

ஆவி அறிவியல் : இன்று இரவு 'கொஞ்சம்' ஜாக்கிரதையாக இருங்கள்..!


இதெல்லாம் தெரிந்தால், நீங்கள் கூகுள் செய்யவே மாட்டீர்கள்..!

#31

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Don't Read These Creepy Wikipedia Pages Unless You Want To Have Nightmares Tonight. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்