மேலுமொரு டா வின்சி இரகசியம், கிலி கிளப்பும் கலிசியா..!

Written By:

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)ஒரு பல்துறை மேதையாவர். இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், சிற்பி, ஓவியர் என் அப்பள முகங்கள் கொண்ட டா வின்சியின் "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற உலகப்புகழ் பெற்ற ஒவியங்களை பெரும்பாலும் நமக்கு தெரியும், உலக அழிவு சார்ந்த டா வின்சி கணிப்பு ஒன்று இருக்கிறது அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..??

உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் சார்ந்த விடயங்களிலும், தனிக்க முடியாத ஆர்வம் கொண்டவராகவும், தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் அறியப்படும் டா வின்சி உடற்கூற்றியல், குடிசார் பொறியியல் துறைகளுடன் சேர்த்து வானியல் துறை வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மேற்பட்ட புரிதல் :

தீவிரமான ஆய்விற்கு உட்ப்படுத்தப்படும் டா வின்சியின் கருத்துக்களும், எழுத்துக்களும், ஓவியங்களும் அனுதினமும் ஒவ்வொரு வகையான மேற்பட்ட புரிதலை பெற்றுக்கொண்டே இருக்கிறது.

முன்னறிந்துள்ளார் :

அப்படியாக, டா வின்சி சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும் வாட்டிகன் ஆராய்ச்சியாளரான சப்ரினா ஃபோர்ஜா கலிசியாவின் புரிதல்படி டா வின்சி உலகின் இறுதி நாளை முன்னறிந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

உலகளாவிய வெள்ளம் :

அதாவது உலகமானது ஒரு மாபெரும் 'உலகளாவிய வெள்ளம்' ஒன்றின் மூலமாக முடிவுக்கு வரும் என்று டா வின்சி கணித்துளார்.

4006-ஆம் ஆண்டு நவம்பர் :

4006-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி அன்று உலகளாவிய வெள்ளம் ஆரம்பிக்கப்பட்டு அதே 4006-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முடிவுக்கு வரும் என்று டா வின்சி முன்னறிந்துள்ளதாக கலிசியா கண்டறிந்துள்ளார்.

சிகரங்களுக்கு மேல் எழும்பி :

அதற்கு சான்றாய் "கடல் நீர் வானத்தை நோக்கி ஏறி, சிகரங்களுக்கு மேல் எழும்பி ஆண்கள் குடியிருப்புகளின் மீது கீழே விழும்" என்று டா வின்சி குறிப்பெழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொடக்கம் :

"அந்த அழிவு மனித இனத்தின் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் என்றுஎன்று டா வின்சி நம்பியுள்ளார்" என்று கலிசியா கூறியுள்ளார்.

துப்பு :

லியோனார்டோ டாவின்சி யின் மிகப்பிரளமான ஓவியமான 'லாஸ்ட் சப்பர் ' (கடைசி விருந்து) ஓவியத்தின் சுவரில் இருந்து கிடைத்த 'துப்பு'கள் நிறைந்த தொகுப்பின் மூலம் கலிசியா உலக அழிவு சார்ந்த இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

1498 :

கடைசி விருந்து ஓவியத்தை 1495-ல் தொடங்கிய லியோனார்டோ டாவின்சி அதை 1498-இல் வரைந்து முடித்துள்ளார் என்பதும், அது பெரிதும் சீரழிந்து பின்னர் 1978 மற்றும் 1999 இடையே நடந்த ஒரு பெரிய மறுசீரமைப்பு பணிக்கு பின்பு மீட்டெடுக்கப்பட்டது.

மனித இனத்தின் கதை :

'எல்லாவற்றின் தொகை, ஒரு கணம் இறுதியான கணக்குத் தீர்ப்பு' என்பதை நோக்கியது தான் மனித இனத்தின் கதை என்று நம்பியுளார் டா வின்சி..!

உக்கிரமான காற்று :

அதற்கு ஆதாரமாய் "உக்கிரமான காற்றின் மூலம் மரங்கள் பறிக்கப்பட்டு பிடிங்கி எறியப்படும், ஆறுகள் வீக்கமாகி வழிந்து பரந்த தாழ்நில மற்றும் அங்கு வசிக்கும் மக்களை மூழ்கடிக்கும்" - என்ற டா வின்சியின் குறிப்பே மிகப்பெரிய ஆதாரம்.

மறைக்கப்பட்ட செய்தி :

டா வின்சி ஒரு விஞ்ஞானி மட்டுமின்றி கடுமையான காலகட்டத்தில் வாழ்ந்த நம்பிக்கை மிகுந்த மானிட்டின் என்றும் அதனால் தான் 'தன் வேலைப்பாடுகளில்' மறைக்கப்பட்ட செய்திகளை விட்டு சென்றுளார் என்றும் கலிசியா கூறியுள்ளார்.

சுவடு கூட கிடையாது :

சுவாரஸ்யமாக, 1476 -1478 என்ற காலத்திற்கு இடையே டா வின்சி வாழ்க்கையில் ஒரு 'இடைவெளி' இருந்தது. அந்த நேரத்தில் டா வின்சி பற்றிய ஒரு சுவடு கூட கிடையாது அவரைப்பற்றிய எழுதப்பட்ட பதிவுகளும் வரலாற்றில் கிடையாது.

எல்லைக்கு அப்பால் :

பின்பு 1478-ல் புளோரன்ஸில் மீண்டும் டா வின்சி தோன்றியப் பின் அவரது படைப்புகள் ஒரு முழுமையான புதிய நிலையை அடைந்தன. அவைகள் கலை என்ற எல்லைக்கு அப்பால் சென்று மற்ற துறைகளிலும் பல விவரங்களை அளித்தன.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Da Vinci Predicted The World Would End In 4006. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்