அடிக்கடி பூமிக்கு 'போக்கு வரத்து', ஏலியன் டூரிசம் துவங்கிவிட்டதா.??

Written By:

பூமியில் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டதை விளக்கும் தெளிவில்லா புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தை ஆக்கிரமிப்பது வாடிக்கையான ஒன்று தான். இன்று வரை அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சார்ந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் எந்த நாட்டு அரசங்கமும் அறிவித்ததில்லை.

அரசாங்கத்தின் மௌனம் தான் இது போன்ற குழப்பங்கள் தொடர முக்கிய காரணமாக இருக்கின்றது. அப்படியாக ஏலியன் சார்ந்து யாரும் கற்பனை செய்யாத புதிய குழப்பம் ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சுற்றுலா

அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்ட சிலர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் யுஎஃப்ஒ பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

எம்பையர் ஸ்டேட்

அமெரிக்காவின் எம்பையர் ஸ்டேட் கட்டிடம் அமைந்திருக்கும் 5வது மார்க்கத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எர்த் சஃபாரி

இந்த புகைப்படம் வெளியானதை தொடர்ந்து ஏலியன்கள் பூமிக்கு சுற்றுலா வந்து செல்லும் வழக்கம் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

பதிவு

இந்நிகழ்வினை நேரில் பார்த்ததாக அறியப்படும் டி என்பவர் இந்த காட்சியை மியூச்சுவல் யுஎஃப்ஒ நெட்வர்க் காப்பகத்தில் 75586 என்ற எண்ணில் பதிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்படம்

இந்த புகைப்படத்தினை எடுத்த டி என்பவர் தனது காதலியுடன் நியூ யார்க் நகரில் சுற்றுலா சென்ற போது இந்த காட்சியை கண்டதாக தெரிவித்துள்ளார்.

சாம்சங்

அச்சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்த டி இந்த புகைப்படத்தினை தனது சாம்சங் கேலக்ஸி எஸ் 6 கருவியை கொண்டு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்வம்

நம்மை போன்றே வேற்றுகிரக வாசிகளும் பழைய கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டிருக்கலாம் என யுஎஃப்ஒ ஆய்வாளர் ஸ்காட் வாரிங் தெரிவித்துள்ளார்.

நினைவு

இச்சம்பவம் 'விடுமுறை நாட்களில் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதாக 1990களில் கூறப்பட்டதை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது' என இது குறித்து வெளியான கருத்துகளில் தெரிய வந்திருக்கின்றது.

நம்பிக்கை

ப்ராஜக்ட் கான்டின் என அழைக்கப்படும் தரவுகளில் பல்வேறு உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் யுஎஃப்ஒ'க்கள் பூமிக்கு சுற்றுலா வருவதை நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து

பூமியில் மனிதர்களை ஆய்வு செய்யும் போது யாரிடமும் சிக்காமல் இருக்க மறையும் தொழில்நுட்பம் பயன்படுத்துவதாக சில ஏலியன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Claims snap shows a UFO flying by Empire State building Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்