விலகாத மர்மம் : அமிலியா எர்ஹர்ட்டின் கடைசி டிரான்ஸ்மிஷன்..!

|

சில புதிர்களும், மர்மங்களும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் சூடான விவாதத்திற்கு உள்ளாகி கொண்டே தான் இருக்கும். அப்படியான ஒரு மர்மம் தான் - அமிலியா எர்ஹர்ட்டின் கடைசி டிரான்ஸ்மிஷன் (Amelia Earhart's last transmission)..!

பசிபிக் தீவான நிகுமரோரோவில் (Nikumaroro) மாயமாய் போன அமிலியா எர்ஹார்ட்டின் விமானத்தின் அறிகுறிகள் கிடைக்கிறதா என்று தேட 500,000 டாலர்கள் செலவில் திட்டம் ஒன்று தயாராக இருக்கிறது..!

#1

#1

அட்லாண்டிக் கடலை தனியாக விமானத்தில் பறந்து கடந்த முதல் பெண் - அமிலியா எர்ஹார்ட்..!

#2

#2

ஒரு இரட்டை என்ஜின் லாக்ஹீட் எலெக்ட்ரா விமானம் மூலம் உலகை சுற்றிவரும் தனது முயற்சியின் போது மாலுமி ஃபிரெட் நூனன் உடன் ஜூலை 2 , 1937-ஆம் ஆண்டு மாயமானார்.

#3

#3

பெரும்பாலானோர்கள் பரந்த பசிபிக் பெருங்கடலை கடக்கும் அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்கின்றனர்.

#4

#4

ஆனால், உயர்நிலை பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஒருவர் எர்ஹர்ட்டின் விமானம், மார்ஷல் எனும் தீவின் மிலி என்ற பவழப்பாறை மீது விழுந்து நொறுங்கியது என்று தனது சொந்த கோட்பாட்டை முன்வைக்கிறார்.

#5

#5

பார்க்கர் வான்வெளி குழுவின் ஆராய்ச்சியாளர்கள் மிலி பவழப்பாறைக்கு பயணித்து நடத்திய ஆய்வில், அங்கு சிறு அலுமினிய கவர் மற்றும் தரை இறங்க உதவும் கியரின் பகுதி ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

#6

#6

அமிலியா எர்ஹர்ட்டின் துரதிஷ்டமான பயணத்தின் போது, விமானத்தின் ரேடியோ தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் அவரை பெரும்பாலும் தொடர்பு கொள்ள முடியாது போனது.

#7

#7

சரியாக 19 மணி நேரம் கழித்து அவரை கடலோர காவல்படையால் தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கு காரணமாக விமானத்தின் டேக்-ஆப்பின் போது ரேடியோ ஆண்டெனாவில் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

#8

#8

"நாங்கள் சுற்றி வருகிறோம் ஆனால் தீவை பார்க்க முடியவில்லை, நீங்கள் சொல்வதும் கேட்கவில்லை" என்று அவர் கூறிய கடைசி ட்ரான்ஸ்மிஷன் பதிவாகியுள்ளது.

#9

#9

எர்ஹாட், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் தான் பறந்துள்ளார் என்பதும், கடைசி டிரான்ஸ்மிஷன் கிடைக்கபெற்ற இடத்தை சுற்றிலும் எவ்வளவு தேடல் மேற்கொள்ளப்பட்டும் விமானம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#10

#10

விமானத்தில் அவருடன் பயணித்த ஃபிரெட் நூனனின் தவறான நேவிகேஷன் தான் விமானம் மாயமானதிற்கு காரணம் என்றும் சில கோட்பாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

#11

#11

சில கோட்பாடுகள் அவர் ஜப்பானியர்கள் மூலம் கைப்பற்றப்பட்டு, உளவாளியாக்கப்பட்டு இறக்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டார் என்கிறது.

#12

#12

மனித இனம் தெரிந்துக்கொள்ள விரும்பாத 'கொடூரமான' சோதனைகள்..!


பெர்முடா முக்கோணத்திற்குள்ளே : புதிய சர்ச்சை கிளப்பும் ஜெர்மன் கடல் ஆய்வாளர்..!

#13

#13

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Amelia Earhart’s last transmission. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X