வடகொரியாவின் முகத்திரையை கிழிக்கும் 'தடை செய்யப்பட்ட பகுதிகள்'..!

|

படுபயங்கரமான முறையில் நிகழ்ந்த, நிகழும் மற்றும் நிகழப்போகும் விடயங்களை திட்டம் போட்டு மறைக்கும் தேசங்களில் ஒன்று தான் - சர்வாதிகாரத்தனம் நிறைந்த வடகொரியா. வடகொரியாவிற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் என்றால் உங்கள் செல்போன், கேமிராக்கள், மெமரி கார்டுகள் என எந்தவொரு டிஜிட்டல் கருவிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் தப்பிக்காது.

அதுமட்டுமின்றி எங்கெல்லாம் புகைப்படங்கள் எடுக்கலாம், எங்கெல்லாம் கூடாது என்ற சட்ட திட்டமும் வடகொரியாவில் நடைமுறையில் உள்ளது. ஒரு விடயம் தடை செய்யபப்டுகிறது என்றால் அதன் மீது தூண்டல் ஏற்படும் - அது மனித இயல்பு. அப்படியான தூண்டலில் தடைகளை மீறி தனது மொபைல் கேமிரா மூலம் வடகொரியாவின் நிஜ முகத்தை பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளார், கெட்டி புகைபடக்காரர் சைலு சூ (Xiaolu Chu).

இப்புகைப்படங்கள் புகைப்படக்காரர் சூ, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரயில்வழியாக வடகொரியாவில் பயணித்த போது எடுக்கப்பட்டவைகள் என்பதும் அவர் எடுத்த பல புகைப்படங்கள் வடகொரிய காவலர்களால் அழிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, எஞ்சிய புகைப்படங்கள் வடகொரியாவின் நிலையை அப்பட்டமாக காட்டுகிறது..!

ரஷ்யா வழியாக :

ரஷ்யா வழியாக :

பெரும்பாலான சீன பயணிகள் ரயில் மூலம் சிஞ்சிஜூவை அடைகின்றன, அல்லது யாங்யோங்கை விமானம் மூலம் அடைவர். ஆனால், இவரோ ரஷ்யா வழியாக சென்றுள்ளார் அதனால் இவரால் டுமன்காங்க் துறைமுகத்தை அணுக முடிந்துள்ளது.

சுங்க அதிகாரிகள் :

சுங்க அதிகாரிகள் :

டுமன்காங்க் ரயில் நிலையத்தில் வடகொரிய சுங்க அதிகாரிகள்.

தடை :

தடை :

தென் கொரியா மற்றும் வடகொரியா பிரச்சனையால் தடை செய்யப்பட்ட 'டுமன்காங்க் - யாங்யோங் ' ரயில்.

நாள் முழுக்க :

நாள் முழுக்க :

வடகொரியாவின் டுமன்காங்க் பகுதியுலுள்ள ஒரு கிராமத்தில் நாள் முழுக்க சுற்றித்திருந்துக்ள்ளார் புகைப்படக்காரர் சூ.

ஏழ்மை :

ஏழ்மை :

அங்கு பெரும்பாலும் மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்வதை பார்த்துள்ளார். பலர் அவரிடம் பிச்சை கேட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைப்பு :

இளைப்பு :

அது மட்டுமின்றி அங்கு யாருமே பருமனான உடல் கொண்டிருக்கவில்லை, அனைவருமே இளைப்புடன் தான் இருக்கிறார்களாம்.

சீர் :

சீர் :

பெரும்பாலான கட்டிடங்கள் மிக பழைமையானதாகவும் ஏகப்பட்ட சீர்களை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 நீண்ட நாள் வாழ வேண்டும் :

நீண்ட நாள் வாழ வேண்டும் :

வடகொரிய ரயில் நிலையத்தில், அந்நாட்டு தலைவர்கள் புகைப்படத்தோடு அவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற வாசகமும் அடங்கியுள்ளது.

விளக்கு :

விளக்கு :

கிராமம் முழுக்க இருளில் மூழ்கி கிடக்கும் அதே சமயம் அந்நாட்டு தலைவர்களின் புகைப்படங்களில் மட்டும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளனவாம்.

ரயில் நிலையம் :

ரயில் நிலையம் :

வடகொரியாவின் டுமன்காங்க் ரயில் நிலையம்.

பள்ளி :

பள்ளி :

வடகொரியாவின் டுமன்காங்க் பகுதியில் உள்ள பள்ளிக்கு குழந்தைகள் செல்கிறார்கள்.

சிக்னல்கள் ஜாம் :

சிக்னல்கள் ஜாம் :

தனது டேப்ளெட்டில் ஜிபிஎஸ் வசதி இல்லை என்பதை உறுதி செய்யும் சுங்கத்துறை அதிகாரி ஒருவர். சில சமயம் பாதுகாப்புக்காக சிக்னல்கள் முற்றிலுமாக ஜாம் செய்யப்படுமாம்.

பரிசோதனை :

பரிசோதனை :

ரயிலிலும் பயணிகளின் லாப்டாப் மற்றும் கேமிராக்கள் பரிசோதிக்கப்படுகிறதாம்.

இயல்பு வாழ்க்கை :

இயல்பு வாழ்க்கை :

ரயில் தண்டவாளத்தின் அருகில் சோளங்களை மூட்டை கட்டும் சிறுவன்.

சைக்கிளில் தான் சவாரி :

சைக்கிளில் தான் சவாரி :

ரயில் பாதையிலேயே இருந்தாலும் பெரும்பாலான மக்கள் சைக்கிளில் தான் சவாரி செய்கின்றனர்.

நீச்சல் :

நீச்சல் :

குழந்தைகள் ஆறு ஒன்றில் கூட்டாக நீச்சல் அடித்து குளிக்கும் காட்சி.

பிச்சை :

பிச்சை :

ஒவ்வொரு ரயில் நிறுத்தலும் மோசமான வாழ்க்கை நிலைமைகளை காட்டின என்று சூ குறிப்பிடுகிறார், பிச்சை எடுக்கும் சிறுவன் ஒருவன்.

ராணுவ வீரர்கள் :

ராணுவ வீரர்கள் :

ரயில் தண்டவாளங்களில் ஓய்வெடுக்கும் வடகொரிய ராணுவ வீரர்கள்.

விழிப்பு :

விழிப்பு :

புகைப்படங்கள் எடுக்கும்போது உஷாராக இருந்ததாகவும், கிராமத்து மக்கள் மிகவும் விழிப்பாக இருந்ததாகவும் சூ தெரிவித்துள்ளார்.

புகார் :

புகார் :

பெரும்பாலான வடகொரிய மக்கள், சூ பற்றி காவலாளிகளிடம் புகார் அளித்து அவர் பல முறை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பணி :

பாதுகாப்பு பணி :

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பெண் காவலாளி.

கண்காணிப்பு :

கண்காணிப்பு :

இரயிலில் பயணித்தப்படியே கண்காணிப்பில் ஈடுபடும் வடகொரிய ராணுவ வீரர்கள்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

போர்வெறியில் வடகொரியா : "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்..!"


'சாத்தான் முக்கோணத்தில்' இருந்து தானாக திரும்பி வந்த கப்பல்..?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
A photographer captured these dismal photos of life in North Korea on his phone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X