சூப்பர்நோவா வெடிப்பு : பூமி மீது கதிரியக்க உலோகத்தை 'கொட்டும்'..!

Written By:

பெரிய விண்மீன்கள் உள்ளிருக்கும் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின், மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி, பேரொளியுடன் வெடித்து சிதறும் அதை தான் மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova explosion) என்பார்கள்..!

அப்படியான, ஒரு சூப்பர்நோவா வெடிப்பானது பூமியின் அருகாமையில் நிகழ்ந்துள்ளது மேலும் அந்த வெடிப்பின் மூலம் பூமி மீது கதிரியக்க உலோகம் பொழியப்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்கள் நமது கடல்களின் அடிப்பகுதியில் இருந்து, தொடர்ச்சியான கதிரியக்க குப்பைகளை கண்டறிந்துள்ளனர்.

#2

அந்த கதிரியக்க குப்பைகள், ஒரு பெரிய சூப்பர்நோவா விண்மீன் வெடிப்பில் இருந்து வெளியானவை என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

#3

நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு துண்டுகளாகி இன்று வரையிலாக பூமியில் மழையாய் பொழிகிறது என்பதற்கான புதிய சான்றாக இது கருதப்படுகிறது.

#4

வெடிப்புக்கு உள்ளான நட்சத்திரம் ஆனது 1.7 - 3.2 மில்லியன் ஆண்டுகள் முன்பே உருவாகி இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

#5

இந்த சூப்பர்நோவா வெடிப்பானது பூமியின் மிக அருகாமையில் நிகழ்ந்துள்ளது என்பதை நாசாவின் எசிஇ விண்கலத்தின் (NASA's ACE spacecraft) உதவிடன் ஆராச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

#6

மேலும் வெடிப்பில் இருந்து பூமி மீது பொழியப்படும் உலோகம் ஆனது இரும்பு -60 (Iron-60) எனப்படும் அரிய வகை கதிரியக்க உலோகம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

#7

இரண்டாவதாக நிகழ்ந்த நட்சத்திர வெடிப்பானது, முதல் வெடிப்பில் இருந்து சிதைந்த குப்பைகளை துரிதப்படுத்தி பூமி மேல் பொழிய வைத்துள்ளதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

#8

அரிய வகை உலோகமான இரும்பு-60ஆனது பூமியின் கடல் நிலத்தடி பரப்பில் மட்டுமின்றி நிலவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#9

இரும்பு-60 மூலம், சுமார் 1.7 மில்லியன் ஆண்டுகள் முதல் 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான விண்வெளி ஆய்வுகளில் ஈடுபட உதவும்.

#10

பூமியில் இருந்து சுமார் 380 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஸ்கார்பியஸ்-சென்டௌரஸ் நட்சத்திர கொத்தில் (Scorpius-Centaurus Association star cluster) இருக்கும் நட்சத்திரங்கள் இந்த சூப்பர்நோவா வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

#11

கடந்த சில மில்லியன் ஆண்டுகளில், பூமி கிரகத்தின் அருகே பல சூப்பர்நோவா வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன அதனால் இதை நினைத்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர்.

#12

மேலும் நமது பூமியில் காலநிலையை குழப்பக்கூடிய நிலையான 'குண்டு' வீச்சுத் தாக்குதலில் சூப்பர்நோவா ஈடுபடும். சூப்பர்நோவா வெடிப்பை தவிர நாம் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

#13

பூமி கிரகத்தை போலவே விண்வெளியில் இருக்கும் அத்துணை பொருட்களுக்கும் மரணம் உண்டு, முதன்மையாக நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும் எரிபந்துகள்.

#14

அம்மாதிரியான எரிபந்துகளின் வெடிப்பை தான் சூப்பர் நோவா என்கிறர்கள். சூப்பர்நோவா வெடிப்பு - இரண்டு வகைப்படும், அருகாமை நட்சத்திரங்களை ஈர்ப்பதால் நிகழும் அல்லது ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்கலாம் முடிவின்போது நிகழும்.

#16

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
A nearby supernova explosion is dumping radioactive metal on Earth. Read more about this is in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்