ஆப்பிள் ஸ்டோர் குறித்து வாடிக்கையாளர்களின் 9 குற்றச்சாட்டுக்கள்

Written By:

ஆப்பிள் ஐபோன் ஒன்றை நமக்கு சொந்தமாக்க வேண்டும் என்பது உலகில் வாழும் ஒவ்வொரு இளைஞரின் கனவாக இருக்கின்றது. அந்த அளவுக்கு ஆப்பிள் ஐபோன் புகழ் பெற்றுள்ளது.

ஆப்பிள் ஸ்டோர் குறித்து வாடிக்கையாளர்களின் 9 குற்றச்சாட்டுக்கள்

ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல் வெளிவரும் நாளன்று அதிகாலையிலேயே ஆப்பிள் நிறுவனத்தின் ஷோரூமில் தவமாய் தவமிருக்கும் ஆயிரக்கணக்கானோர்களிடம் இருந்தே இதை உணரலாம்.

செப்டம்பர் வெளியீடு உறுதியானது : ஐபோன் 7'இல் என்ன எதிர்பார்க்கலாம்.??

ஆப்பிள் ஐபோன் மீது வெறியராக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிரியத்துடன் நடந்து கொள்கிறதா? என்று கேட்டால் கனத்த மனதுடன் இல்லை என்றுதான் கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல ஆப்பிள் ஐபோனின் ஷோரூம், வாடிக்கையாளர்களின் நண்பனாக இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை

இலவச ஜியோ 4ஜி சிம் பெற, நீங்கள் செய்ய வேண்டிய 2 விடயங்கள்..!

இந்நிலையில் வாடிக்கையாளர்களை எந்தெந்த வழிகளில் ஆப்பிள் அதிருப்தி அடைய செய்கிறது என்பதை பார்ப்போமா!!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வெயிட் பண்ண வைத்தே கொல்றாங்கப்பா

ஆப்பிள் நிறுவனத்தின் மீது பலர் கூறும் புகார் மிக நீண்ட நேரம் காக்க வைக்கின்றார்கள் என்பது தான். அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த நேரத்தில் அழைக்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் பலருக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்து நமது பொறுமையை சோதிப்பார்கள்.

சிறந்த ஐபோன் ஒப்பந்தங்கள் இங்கே கிளிக் செய்யவும்

உடனே மாற்றி தருவாங்களா? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை

நாம் ஆசை ஆசையாய் வாங்கிய ஆப்பிள் ஐபோன் ரிப்பேர் ஆகிவிட்டா ல்எளிதில் மாற்றி தரவோ, அல்லது ரிப்பேர் செய்தோ கொடுக்க மாட்டார்கள். எப்போது ரிப்பேருக்கு போகும், எப்போது ரிப்பேர் செய்து வரும் என்பதை அவர்கள் இஷ்டத்திற்கு நேரம் எடுத்து கொண்டு அதை மெயில் செய்வார்கள்

காசை புடுங்குறதிலே குறியா இருக்காங்களே!

தப்பித்தவறி நீங்கள் ஆப்பிள் ஐபோனை கீழே போட்டு ரிப்பேர் ஆகிவிட்டால் அதற்கெல்லாம் வாரண்டியே கிடையாது. உங்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை தயவு தாட்சணம் இன்றி வசூல் செய்துவிடுவார்கள்.

தேடு தேடுன்னு தேடனும்:

சரி போனோமா, ரிப்பேருக்கு கொடுத்துட்டு வந்தோமான்னு இருக்காது. நீங்கள் பெரிய சிட்டியில் இருந்தால் தப்பித்தீர்கள். இல்லையென்றால் ஆப்பிள் ஐபோன் சர்வீஸ் செண்டரை தேடு தேடுன்னு தேடனும். அதிக இடங்களில் சர்வீஸ் செண்டர் இல்லை என்பது ஒரு பெரிய குறை

அப்கிரேடிலும் தொல்லைதான்

ஒருசில வாடிக்கையாளர்கள் பழைய மாடல் ஐபோனை மிகவும் விரும்புவார்கள். ஆனால் அப்கிரேட் செய்யும்போது அதே மாடலில் அப்கிரேட் செய்யாமல் புதிய மாடலை தருவது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்கிறது.

சிறந்த ஐபோன் ஒப்பந்தங்கள் இங்கே கிளிக் செய்யவும்.

இதை தெரிஞ்சுக்கிறதுக்குள்ளே விடிஞ்சிடும்

ஆப்பிள் ஐபோனின் வாரண்டி எவ்வளவு காலம், எந்தெந்த பார்ட்டுக்கு எத்தனை வருடம் என்பதை கண்டுபிடிப்பதற்கு சிபிசிஐடிதான் வரணும். வாரண்டி கார்டில் ஒரே குழப்பமாக இருக்கும். அதிலும் ஆப்பிள் ஐபோன் ஸ்டோரில் இல்லாமல் வேறு கடைகளில் வாங்கினால் ரொம்ப சுத்தம்!!

டேட்டாவுக்கு வேட்டு வச்சிருவாங்க

ஆப்பிள் ஐபோனை ரிப்பேருக்கு எடுத்து செல்வதற்கு முன்னர் அதிலுள்ள முக்கியமான டேட்டாக்களை பேக்-அப் செய்ய வேண்டும் என்று பலருக்கு தெரிந்திருக்காது. அல்லது மறந்திருப்பார்கள். ஆனால் ஆப்பிள் ஐபோன் டெக்னீஷியன்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்ச்சியை தருவதில்லை. ரிப்பேருக்கு வரும் பெரும்பாலான ஐபோன்களின் டேட்டாக்கள் அழிந்துவிடும் என்பதுதான் இன்னொரு சோகம்

ஐடியும் லாகின் -யும் தேவையா?

ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டு இல்லாமல் இதை நீங்கள் உபயோகிக்க முடியாது. தப்பித்தவறி நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அவ்வளவுதான். ரொம்ப கஷ்டப்படவேண்டிய நிலை வரும்

டிஸ்கவுண்ட்டா? அதுக்கெல்லாம் பேச்சே கிடையாது

டிஸ்கவுண்ட் கேட்டு வாங்கவில்லை என்றால் நமக்கு தூக்கமே வராது. ஆனால் ஆப்பிள் ஐபோன் ஷோரூமில் இதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. புதிய போன் வாங்கினாலும், அப்கிரேட் செய்ய சென்றாலும் அவர்கள் சொன்ன விலையை கொடுத்து வாங்க வேண்டும் என்பதுதான் தலைவிதி.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Apple customers experience a lot of issues with the Apple store. They experience frustrating experiences such as long waits, delayed appointments, and more. Read more...
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்