அம்பலமான அமானுட புகைப்படங்களும், அதன் போலித்தனமும்..!

Written By:

கேமிரா பொய் சொல்லாது என்ற பழமொழி வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் ஆனால் ஒளி, கண்கள் மற்றும் கற்பனைகள் போன்றவைகள் மிக நிச்சயமாக பொய் சொல்லும்..!

அப்படியாக, எங்கோ எப்போதோ எடுக்கப்பட்ட ஒரு சாதாரண புகைடபம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றது, குழப்பத்தை உண்டாக்கியது என்றால் அப்புகைப்படங்கள் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி, அந்த புகைப்படத்தில் என்ன பார்க்க வேண்டும், எதை அனுமானிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவு சக்தி கொண்டதாய் இருந்துள்ளன..!

அதெல்லாம் சரி, அவைகள் எல்லாம் போலியானது என்று சொன்னால் நம்புவீர்களா..? நம்பித்தான் ஆக வேண்டும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படத்தில் சிக்கிய டைம் டிராவலர் (time traveller)

1941-ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் உள்ள ஒருவர் சன்கிளாசஸ், அச்சிடப்பட்ட டி-ஷர்ட் , சிறிய கேமராவுடன் காட்சியளிக்க இவர் ஒரு டைம் டிராவலர், காலத்தின் பின்னோக்கி பயந்து வந்தவர் என்று நம்பப்பட்டது.

கோடாக் 35 ரேஞ்ச்ஃபைண்டர் :

ஆனால் உண்மை என்னவென்றால் அவர் அணிந்திருக்கும் ஷர்ட் அவர் மாண்ட்ரீல் மரூன்ஸ் ஹாக்கி அணியின் ஆதரவாளர் என்பதையும் மற்றும் அவரது கேமரா 1938-ல் வெளியான கோடாக் 35 ரேஞ்ச்ஃபைண்டர் என்பது தான் நிதர்சனம்.

காலவரிசை :

உடன் அந்த நவநாகரீக நண்பரை சுற்றி பெரும்பாலும் வயதானவர்கள் இருப்பதால் அவர் காலவரிசையில் சம்பந்தமில்லாத தோற்றத்தை வழங்கியுள்ளார் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

சோல்வே ஸ்பேஸ்மேன் (Solway Spaceman)

1964-ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சிறுமிக்கு பின்னால் இருந்து வெளியே எழும் தலைக்கவசம் அணிந்த விண்வெளி வீரர் போன்ற உருவம் பதிவாகியது.

கதைகள் :

இதுவொரு கேமிரா தொழில்நுட்ப கோளாறு என்றும், புகைப்படமாக்கப்பட்ட பின்பு இணைக்கப்பட்ட உருவம் என்றும், அந்த உருவம் அந்த சிறுமியும் தாய் தான் என்றும் பல கதைகளுக்குள் சிக்கிய இப்புகைப்படம் போலியானது என்ற இறுதி முடிவை எட்டியது.

மிதக்கும் மனிதன் (The Levitating Man)

1930-ல் ஒரு ஆன்மீக ஊடகமாக இருந்த கொலின் எவன்ஸ் அதன் ஒரு பகுதியாக ஒரு கூட்டத்தில் மத்தியில் ககண்களுக்கு புலப்படாத கைகள் தன்னை அந்தரத்தில் தூக்குவது போன்ற காட்சியை உருவாக்கினார்.

நாற்காலியின் மேல் :

ஆனால் உண்மையில் அவர் தெளிவாக தன் நாற்காலியின் மேல் இருந்து குதித்துள்ளார் என்பது பின்னர் கண்டறியப்பட்டது. இருப்பினும் இருவரையிலாக இது விவாதத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாஸ் ஏஞ்சல்ஸ் யுத்தம் (The Battle Of Los Angeles)

24 பிப்ரவரி, 1942-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பறக்கும் தட்டு தோன்றியதாகவும் புகைப்படத்தில் பதிவானதாகவும் இன்று வரையிலான அனைவராலும் நம்பப்படும் பிரபல புகைப்படம் தான் இது.

உண்மை :

ஆனால் இது பத்திரிகையில் அச்சிடப்படுவதற்கு முன்பு ஒரு பெரிய தட்டு போன்ற பொருள் காட்சிப்படும் வண்ணம் மறுசெப்பனிடப்பட்டது என்பதே உண்மை

இராட்சத எலும்புக்கூடுகள் (Giant Skeletons)

இராட்சத பூதங்கள் இருந்தது உண்மைதான் என்ற நம்பிக்கையை கிளப்பிய இந்த இராட்சத எலும்புக்கூடு புகைப்படமும் முழுக்க முழுக்க ஒரு போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம் தான்..!

வெம் டவுன் ஹாலின் சிறுமி ஆத்மா (The Wem Ghost Girl)

1995-ல் தீ விபத்தல் முழுமையாய் சேதமான வெம் டவுன் ஹாலில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் 1677-ஆம் ஆண்டை சேர்ந்த ஒரு சிறுமியின் ஆவி பதிவாகியதாக செய்திகள் கிளம்பின.

போலி :

1922-ஆம் ஆண்டில் அதே டவுன் ஹாலில் கிடைத்த போஸ்ட் கார்டில் அதே சிறுமியின் புகைப்படம் கிடைக்க, ஆய்விற்கு பின்னர் அது ஒரு போலி என்று அறிவிக்கப்பட்டது.

லோச் நெஸ் மான்ஸ்டர் (Loch Ness Monster)

லோச் நெஸ் மான்ஸ்டர் என்பது ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் வாழும் ஒரு ராட்சத நீர்வாழ் உயிரினம் என்று நம்பப்படுகிறது. ஆப்பிள் மேப் புகைப்படத்தில் லோச் நெஸ் சிக்கியது என்ற செய்தி தீயாய் உலகம் முழுக்க பரவியது.

போலி :

ஆனால், அது முழுக்க முழுக்க ஒரு போலியான புகைப்படம், அது படகு பயணித்த பாதை என்று என்று நிரூபணமானது.

தி என்பீல்ட் போல்டர்ஜிஸ்ட் (The Enfield Poltergeist)

ஒரு 11 வயது பெண் கண்களுக்கு புலப்படாத கைக்ளில் அகப்பட்டு அவள் படுக்கையில் இருந்து தூக்கி அறியப்படுவது போன்ற புகைப்படம் வெளியாகி போல்டர்ஜிஸ்ட் வகை தீய சக்திகள் மீதான பீதியை கிளப்பியது.

ஆத்ம சக்தி :

போல்டர்ஜிஸ்ட் என்றால் சத்தங்கள் எழுப்புதல், பொருட்களை அழித்தல், உடல் ரீதியான தொந்தரவுகள் கொடுப்பது போன்ற காரியங்களை நிகழ்த்தும் ஆத்ம சக்தி அல்லது தீய சக்தியாகும்.

குரல் பதிவு :

70-களில் பெரிய அளவிலான பீதியை கிளப்பிய இந்த போல்டர்ஜிஸ்ட் புகைப்படம் மற்றும் குரல் பதிவு முழுக்க முழுக்க ஒரு நாடகம் என்று பின்னர் கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க :

ஆவி அறிவியல் : இன்று இரவு 'கொஞ்சம்' ஜாக்கிரதையாக இருங்கள்..!


கேமிராவிற்க்கும், ஆவிகளுக்கும் என்ன தொடர்பு..!?

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
8 Famous Paranormal Photographs Debunked. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்