'இவைகளெல்லாம்' கணிப்புகள் இல்லை, எச்சரிக்கைகள்..!

Written By:

'எர்த் எண்ட் பிலிவர்ஸ்' (Earth End Believers) என்ற ஒரு கூட்டமே இருக்கிறது, அதாவது உலகம் மற்றும் அதன் உயிர் இனங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அல்லது முழுமையாக அழியும் என்று நம்புபவர்கள்.

'இவைகளெல்லாம்' கணிப்புகள் இல்லை, எச்சரிக்கைகள்..!

இதெல்லாம் சயின்ஸ் ஃபிக்ஷன் (அறிவியல் புனைகதை) திரைப்படத்தில் தான் நடக்கும் என்றும், உலகம் அழியும் கதைகள் எல்லாம் பொழுதுபோகாதவன் கிளப்பிவிட்ட புரளிகள் என்றும் நம்பப்படும் அதே வேளையில், உலகத்தையும் அதன் உயிரினங்களையும் அழிக்க வல்லமை பெற்ற சில 'உண்மையான' சக்திகள் அறிவியல் கோட்பாடுகளின் கீழ் இருக்கின்றன என்பதும் நிதர்சனமே. அக்கோட்பாடுகள் எல்லாம் வெறும் கணிப்புகள் இல்லை ஒருவகையான எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியாக, உலகின் இறுதிநாளை நிர்ணயிக்கும் 7 மாபெரும் அச்சுறுத்தல்களை பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

07. க்ளோபல் பேன்டிமிக் :

பேன்டிமிக் (pandemic) எனப்படுவது கிட்டத்தட்ட பூமி கிரகம் முழுக்க தொற்றி பரவக்கூடிய கொள்ளை நோயாகும்.

வல்லமை :

முக்கியமாக, தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதைக்கூட அறியாத வண்ணம் தாக்கி கொல்லும் தொற்று நோய்கள் தான் மனித இனத்தை அழிக்கும் வல்லமை பெற்றவைகள் என்று நம்பப்படுகின்றது.

06. காமா கதிர் வெடிப்பு :

காமா கதிர் வெடிப்புகள்தான் அண்டத்தில் நடக்கும் பிரகாசமான விண்வெளி நிகழ்வாகும்.

நட்சத்திர வெடிப்பு :

மாபெரும் நட்சத்திர வெடிப்புகளால் நிகழும் இந்த காமா கதிர் வெடிப்புகள் ஆனது பூமியம் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி கொண்டவைகள் ஆகும்.

புற ஊதா கதிர்வீச்சு :

அப்படியாக, பலமான காமா கதிர் வெடிப்பு ஓசோன் படலத்தை இல்லாமல் ஆக்கி விட்டால் கொடிய புற ஊதா கதிர்வீச்சு ஆனது பூமியை மெல்ல மெல்ல கொல்லும்.

05. சூரிய மரணம் :

கிட்டத்தட்ட அனைத்து வகையான உயிர்களுக்கும் தேவையான ஆற்றலை வழங்கி கொண்டிருப்பது சூரியன் தான். அப்படியான சூரிய பலன்களுக்கும் ஒரு முடிவு காலம் உண்டு என்பது தான் நிதர்சனம்.

5 பில்லியன் ஆண்டு :

இன்று தொடங்கி இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரிய மரணம் நிகழும் என்கின்றனர் வல்லுநர்கள்.

04. பைங்குடில் விளைவு நிகழாமை :

பைங்குடில் விளைவு (Green house Effect) அல்லது பசுமை இல்ல விளைவு எனப்படும் இயற்கை விளைவுதான் உயிர்களின் ஆதாரம் ஆகும்.

வெப்பநிலை :

பைங்குடில் விளைவு குறைபாடானாது, பூமியை சுற்றி ஒரு தடித்த போர்வையை உருவாக்கும் அதிகப்படியான வெப்பத்தையும், உலக வெப்பநிலையையும் கவலைக்கிடமான விகிதத்தில் உயர்த்தும்.

03. சிறுகோள் தாக்குதல்கள் :

10 ஹிரோஷிமா அணுகுண்டுகள் சக்திக்கு இணையான குறுங்கோள் மோதல் பூமி கிரகத்தோடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

பாதிப்புகள் :

அப்படியான மோதல் நிகழ்ந்தால் சுமார் 300 கிலோ மீட்டர் சுற்றளவில் பாதிப்புகள் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

02. நுக்லியர் வெடிகுண்டுகள் :

உலகின் மாபெரும் விபரீதமான ஆயுதங்களில் முதல் இடத்தில் இருப்பது அணு ஆயுதங்கள் தான், நொடியில் பல நகரங்களை அழிக்க கூடிய சக்தி கொண்டவைகள்.

சேதம் :

வெடிப்பு சேதம், அணு தாக்கம், நீண்ட கால கதிர்வீச்சு விளைவு, தாவர மரணம், கருப்பு மழை, சாம்பல் மூட்டம், ஓசோன் படலம் குறைவு என பெரும் பாதிப்புகளை அணுகுண்டுகள் ஏற்படுத்தும்.

01. சூப்பர் வல்கனோ வெடிப்புகள் :

ஒரு சூப்பர் எரிமலை (Super valcano) வெடிப்பானது தட்பவெப்ப நிலையில் தீவிர உறுதியற்ற நிலையை உருவாக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

அழிவு :

அதாவது சாம்பல் மூட்டம், அதிகப் படியான மேகம் உருவாகுதால், அமில மழைப்பொழிவு, ஓசோன் படலம் குறைவு, தாவர அழிவு, கடல் சார்ந்த சுற்றோட்ட குழப்பம், கடல்வாழ் உயிரின அழிவு போன்றவைகளை சூப்பர் வல்கனோ வெடிப்புகள் ஏற்படுத்தும்.

27 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் :

முன்பு, சுமார் 27 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் சூப்பர் வல்கனோ வெடிப்பு ஏற்பட்டது என்பதும் அடுத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
7 Scientific explanations for the violent ways of earth end. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்