பூமியை இரக்கமின்றி 'கொல்லப்போகும்' 7 கொடூரங்கள்..!

Written By:

பூமி கிரகமானது சாத்தியமற்ற சமநிலை தள்ளாடுகிறது. அந்தவொரு நிலைதான், பூமி கிரகம் உயிர்கள் வாழ ஏதுவாக இருப்பதற்கான முக்கிய காரணமாகும். உடன் நமது வளிமண்டலம், சூரியனின் அருகாமை, மற்றும் எண்ணற்ற பிற அழகான நிகழ்வுகள் உயிர்கள் உருவாகி செழித்து வளர அனுமதித்துக்கொண்டே இருகின்றன.

இதெல்லாம் புரியாமல், நாம் உயிர் வாழ ஏகப்பட்ட அசாத்தியமான மற்றும் அசாதாரணமான நிகழ்வுகள் அனுதினமும் நடந்து கொண்டே இருக்கிறது என்பது தெரியாமல் தான் நாம் இங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் நிதர்சனம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

காரணம் #1 :

பூமியின் உருகிய மையப்பகுதியானது குளிர்ந்து போகக்கூடும்..!

காந்தப்பரிசை :

பூமியானது பாதுகாப்பு காந்தப்பரிசையால் (protective magnetic shield) சூழப்பட்டுள்ளது அதைதான் காந்தக்கோளம் (magnetosphere) என்கிறார்கள்.

ஆற்றல் துகள் :

காந்தக்கோளம் ஆனது சூரியனிடம் இருந்து வெளிவரும் ஆற்றல் துகள்களை தடுப்பது மட்டுமின்றி அதன் அளவு மற்றும் வடிவம்தனை மாறி விலகி செல்லவும் செய்கிறது.

செயலிழந்து விடும் :

இப்படியிருக்க பூமியின் மையப்பகுதி குளிர்ந்திருக்கிறது என்றால் காந்தக்கோளம் ஆனது செயலிழந்து விடும் பின்பு சூரியக் காற்றில் இருந்து பூமியை பாதுகாக்க இயலாது.

சூரிய காற்று :

செவ்வாய் கிரகம் வறண்டு போன நிலமாக இருக்க மிகவும் பலமான சூரிய காற்று தான் காரணம் என்பதும் குறிபிடத்தக்கது .

காரணம் #2 :

சூரிய மரணம் ஏற்பட்டு சூரியன் விரிவடையக் கூடும்..!

மரணிக்கும் :

சூரியன் ஒரு கிரகம் அல்ல, சூரியன் ஒரு நட்சத்திரம் ஆகும். அப்படியாக நட்சத்திரம் என்பது நிச்சயம் ஒருநாள் மரணிக்கும், ஆக சூரிய மரணம் என்பது உறுதி.

இணைவு :

சூரிய நட்சத்திரம் தனது பாதி வாழ்நாளை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. சீரான இணைவு (Fusion) மூலம் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

மெல்ல மெல்ல :

இன்று தொடங்கி பல பில்லியன் ஆண்டுகளுக்கு பின்பு இணைவு மூலம் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றுவது மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டே போகும்.

இழுக்கப்பட தொடங்கும் :

பின்பு மிகவும் சுறுசுறுப்பான எதிர்வினையானது சூரிய அடுக்குகளை வெளிப்புறமாக தள்ளும் மற்றும் சாத்தியமான முறையில் சூரியனை நோக்கி பூமி இழுக்கப்பட தொடங்கும்.

உயிர் வாழவே முடியாத :

அது நிகழும் போது பூமி கிரகம் சாம்பலாகி ஆவியாகும் அல்லது பூமி யானது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து வெளிய தள்ளபபட்டு உயிர் வாழவே முடியாத அளவிலான ஒரு குளிர்ந்த கிரகமாக மாற்றப்படலாம்.

காரணம் #3 :

பூமி கிரகம் ஒரு முரட்டுத்தனமான கிரகம் மீது மோதல் நிகழ்த்துதல்..!

வெளியே தள்ளப்படும் :

ரஃப் பிளான்ட் (Rough planet) எனப்படும் முரட்டுத்தனமான கிரகங்கள் பெரும்பாலும் சூரிய அமைப்புகளில் இருந்து வெளியே தள்ளப்படும் கிரகங்களாக தான் இருக்கும். இவ்வாறான முரட்டு கிரகங்கள் ஆனது பூமி கிரகம் மீது மோதல் நிகழ்த்தினால், அதன் அளவை பொருத்து பூமிக்கு சேதம் ஏற்படும்.!

காரணம் #4 :

பெரிய அளவிலான விண்கற்கள் பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்துதல்..!

மழையாக பொழிந்தால் :

டைனோசர் இனம் அழியக் காரணமாக இருந்தது ஒரு விண்கல் மோதல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பூமி மேல சராமாரியாக மழையாக பொழிந்தால் தான் விண்வெளி கற்களால் பூமி கிரகத்தின் அழிவை சாத்தியப்படுத்த முடியும்.

சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் :

விண்கல் மழையாக பொழியும் சாத்தியமும் உண்டு. எடுத்துகாட்டுக்கு பூமி கிரகம் உருவாகி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் இருக்கும்போது ஏகப்பட்ட விண்கற்கள் பூமியை சரமாரியாக தாக்கியுள்ளது.

காரணம் #5 :

விண்வெளிகளில் அலைந்து கொண்டிருக்கும் பிளாக் ஹோலுக்குள் பூமி கிரகம் ஈர்க்கப்படுதல்..!

நிலை :

கருங்குழி பற்றிய பெரிய அளவிலான தெளிவு எதுவுமில்லை என்கிற போதிலும், பிளாக் ஹோல்கள் ஒளி கூட வெளிய மீண்டு வராத மிகவும் மர்மமான கிரக்பொருள் என்பதால் பூமி கிரகம் உள்ளே ஈர்க்கப்பட்டாலும் அதே நிலைதான்..!

அருகாமை :

பிளாக் ஹோலுக்குள் பூமி கிரகம் நுழைந்தால் மட்டுமில்லை மிக அருகாமையில் சென்றால் கூட பூமி கிரகம் நிலநடுக்கம் மற்றும் பிற பேரழிவுகளை சந்திக்கும், அல்லது சூரிய மண்டலத்தைவிட்டு வெளியே தள்ளப்படும் அல்லது சூரிய சூழலுக்குள் நம்மை சிக்க வைக்கும்.

நுழைந்து கடக்கும் :

விண்வெளியில் கண்களுக்கு புலப்படாமல் உலாவிக் கொண்டிருக்கும் பிளாக் ஹோல்கள் நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத வகையில் சூரிய மண்டலத்திற்குள் நுழைந்து கடக்கும் என்று அறிவியலார்கள் நம்புகிறார்கள்.

புதியதொரு விண்வெளி :

மறுபக்கம் சில விஞ்ஞானிகள் பிளாக் ஹோலுக்குள் நுழைந்தால் நாம் முற்றிலும் புதியதொரு விண்வெளி மண்டலத்திற்கு செல்வோம் என்றும் நம்புகிறார்கள்.

காரணம் #6 :

விண்வெளியில் ஏற்படும் ஒரு காமா கதிர் வெடிப்பு மூலம் பூமி கிரகம் அழிதல்..!

சக்தி :

பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த கோட்பாடுகளில் ஜிஆர்பி எனப்படும் காம்மா கதிர் வெடிப்புகளும் ஒன்றாகும்.

வெளிக்கிடும் சக்தி :

மாபெரும் நட்சத்திரங்களின் மோதலில் ஏற்படும் இந்த வெடிப்பானது சூரியன் வாழ்நாள் முழுக்க வெளிக்கிடும் சக்தியை மிக குறுகிய ஒரு வெடிப்பில் நிகழ்த்தும்.

தூண்டும் :

அப்பெரும் ஆற்றல் ஆனது ஓசோன் அடுக்கை அழித்து புற ஊதா ஒளியை பூமியின் மேல் வெள்ளம் போல் பாய்க்க செய்யும் மற்றும் விரைவான முறையில் பூமியை குளிர்ச்சியடைய தூண்டும்.

காரணம் #7 :

'பிக் ரிப்' (Big Rip)எனப்படும் இறுதி நிகழ்வில் பிரபஞ்சம் துண்டு துண்டாக உடையும்..!

பிரபஞ்சத்தின் முடிவு :

'பிக் ரிப்' என்பது வெறும் பூமி கிரகத்தின் முடிவு மட்டுமில்லை, உண்மையில் இது முழு பிரபஞ்சத்தின் முடிவாகும்.

மேலும் படிக்க :

பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!


பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
7 horrifying ways the Earth could die. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்