மக்களே.. நம்மையெல்லாம் 'ரொம்ப அருமையா' ஏமாத்திருக்காங்க மக்களே..!

Written By:

திரைப்படக்காட்சி ஒன்றில்.. ஒரு நபர் கூர்மையான கத்தியால் குத்தப்பட்டாலோ.. அல்லது ஒரு உயரமான மலையில் இருந்து கீழே விழுந்தாலோ.. அல்லது மிகவும் கொடுமையான விஷப்பாம்பு ஒன்றிடம் கடி வாங்கினாலோ... அடுத்தது என்ன நடக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும் - மரணம் தான்..!

சினிமாவில் ஏற்படும் மரணம் என்றாலே அது போலி தான் பொய் தான் அதுக்காக அறிவியலின் கீழ் சாத்தியமே இல்லாத ஒன்றை சாத்தியம் தான் என்பது போல் திரைப்படக் காட்சி அமைப்பது எவ்வளவு பெரிய ஏமாத்து வேலை..!? அப்படியாக, நம்மையெல்லாம் 'ரொம்ப அருமையா' அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஏமாத்து வேலை நம்பர் #5 :

கொதிக்கும் எரிமலை குழம்பிற்குள் மூழ்கி சாவது..!

அறிவியல் உண்மை :

எரிமலை குழம்பு மரணம் தர வல்லமை யானது தான் அதில் சந்தேகமில்லை. அதற்காக நீச்சல் குளத்திற்குள் மூழ்குவது போல எரிமலை குழம்பிற்க்குள் எதுவும் மூழ்கிடாது என்பது தான் அறிவியல்..!

முதல் வேலை :

1,295 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து 2,282 டிகிரி வரை கொதிக்கும் எரிமலை லாவாவின் மேற்பரப்பானது எந்த விதமான மேற்ப்பரப்பையும் உடைக்கும் வெப்பநிலை கொண்டது. அதன் முதல் வேலை கொலை தான்..!

நடக்காத காரியம் :

எரிமலைக்குழம்பு குறைந்தது 100,000 மடங்கு பிசுபிசுப்புள்ள, தண்ணீரை விட மூன்று மடங்கு கனமானதாக மற்றும் அடர்த்தியானதாக இருக்கும். ஆகையால் அதுனுள் மனிதர் ஒருவர் மூழ்கி சாவது என்பது நடக்காத காரியம் ஆகும்.!

ஏமாத்து வேலை நம்பர் #4 :

மூச்சுதிணறவைத்து கொலை செய்யும் முறை..!

அறிவியல் உண்மை :

ஒரு நபரை மூச்சுதிணறவைக்கும் முறையானது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறை ஆகும். திரைப்பட காட்சிகளில் வருவது போல தலையணை ஒன்றை வைத்து-அழுத்தி ஒருவரை கொலை செய்து விட இயலாது.

எதிர்வினை :

அறிவியலின்கீழ் மூச்சடைக்கப்பட்ட பின்பு மனித உடல் ஆனது ஒரு எதிர்வினை போல தானாகவே நிர்பந்தமாக சுவாசிக்க தொடங்கும்.

மூளை :

இரத்தத்தில் ஆக்சிஜனை பயன்படுத்த மனித உடல் ஆனது 15 நொடிகள் எடுத்துக்கொள்ளும், பின்பு ஒரு நிமிடம் சுவாசம் தடை செய்யப்பட்டால் மூளை செல்கள் பாதிப்படையும், பின்பு மூளை மிகவும் மோசமாக பாதிப்படைய 3 நிமிடங்கள் தேவைப்படும்..!

அரிய நிகழ்வுகள் :

சுவாசம் இல்லாது 40 முதல் 60 நிமிடங்களுக்கு பின்பு கூட உயிர் பிழைத்த அரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளது.

ஏமாத்து வேலை நம்பர் #3 :

சுறா ஒரு மனித வேட்டையாடி, சுறா மனிதர்களை தேடித்தேடி கடித்து கொல்லும்..!

அறிவியல் உண்மை :

நம்பினால் நம்புங்கள், உண்மையில் சுறாக்கள் மிகவும் கூச்சப் பிராணிகள் ஆகும். சொல்லப்போனால் மனிதர்களை சுறாக்கள் பின் தொடர்ந்து வந்து தாக்கி கடித்துக் கொல்லும் பிராணிகள் அல்ல..!

தொடர்பு :

பெரும்பாலான சுறா தாக்குதல் எல்லாம் சுறாக்கள் மக்களால் தூண்டப்படுவதாலேயே நிகழ்ந்துள்ளன. பிற பிராணிகளை போலவே தான் சுறாக்களும் மனிதர்களோடு தொடர்பு கொள்ள விழைகிறது என்ற கருத்தும் உண்டு..!

ஏமாத்து வேலை நம்பர் #2 :

கிரேனடுகள் அதாவது கையெறி குண்டுகள் உடனடி மரணத்தை ஏற்படுத்தும்..!

அறிவியல் உண்மை :

கையெறி குண்டுகள் அதன் கில்லிங் ரேடியஸ் (Kiling Radius) என்ற எல்லைக்குள் இல்லாத வரையிலாக அது ஒன்றும் உங்களை உடனடியாக துண்டு துண்டாக சிதற வைத்து கொன்று விடாது. நூற்றுக்கணக்கான கிரேனட் வகைகளும் ஒவ்வொன்றிக்கும் தனிப்பட்ட கில்லிங் ரேடியஸ் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏமாத்து வேலை நம்பர் #1 :

புதை மணல் ஆனது மனிதர்களை உள்ளே இழுத்து கொள்ளும்.!

அறிவியல் உண்மை :

நீச்சல் குளத்திற்குள் குதிப்பது போல நேராக தலையை முதலில் திணிக்காத பட்சத்தில் புதை மணலில் உங்களால் மூழ்கவே முடியாது.

அடர்த்தி :

எரிமைலை குழம்பை போலவே புதை மணலும் மனித உடலை விட மிகவும் அடர்த்தியாக இருப்பதால் மிஞ்சி மிஞ்சிப்போனால் அது உங்கள் இடுப்பு வரை உள்ளே இழுக்கும் அவ்வளவு தான்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
5 Ways Movies Say You Can Die That Science Says Are Wrong. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்