இதுநாள் வரை உண்மை என்று நாம் அனைவரும் நம்பிய 13 பிரமைகள்..!

Written By:

உங்கள் மனதை கொஞ்சம் திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், உண்மை எப்போதுமே கசக்கும் தான். பள்ளி, கல்லூரி தொடங்கி இதுநாள் வரையிலாக நாம் கற்று வைத்திருக்கும் சில விடயங்கள் வெறும் பிரமைகள், பொய்யான கட்டுக்கதைகள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?

நம்பித்தான் ஆக வேண்டும் வேறு வழியிலை. ஏனெனில் உண்மை கடைசி வரை வெளிபாடாமல் இருக்காது..! அப்படியாக, இதுநாள் வரை உண்மை என்று நாம் அனைவரும் நம்பிய 12 பிரமைகளும் அது சார்ந்த தெளிவுகளும்க் பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பிரமை 01 :

சூரியனின் நிறம் மஞ்சள்.

உண்மை :

ஆனால், அதன் நிஜமான நிறமோ வெள்ளை. உங்கள் கண்கள் மற்றும் சூரியன் இடையே உள்ள பூமியின் வளிமண்டலம் தான் சூரியனை மஞ்சள் நிறத்தில் காட்டுகிறது.

பிரமை 02 :

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாரா தான்.

உண்மை :

பாலைவனம் என்றால் மணல் நிரம்பிய ஒரு பிரதேசமாக த்தான் இருக்க வேண்டும் என்றில்லை, வறண்ட உயிர்வாழ கடினமான பிரதேசமாக இருக்க வேண்டும்.

அண்டார்ட்டிக்கா :

அப்படி பார்க்கும்போது, 5.4 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் நீண்டு கிடக்கும் அண்டார்ட்டிக்கா தான் பூமி கிரகத்தின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும். சாஹாரா பாலைவனம் (3.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள்)

பிரமை 03 :

ஜோதிட ஆளுமை மூலம் உங்களது எதிர்காலத்தை கணிக்க முடியும்.

உண்மை :

ராசி அல்லது ஜாதக கணிப்புகளை முதன்மையாய் கொண்டு நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்துள்ளன.

பிரமை 04 :

நீங்கள் யாரையேனும் தொலைபேசியில் அழைத்தால், அந்த சிக்னல் செயற்கைக்கோளுக்கு செல்லும்..!

உண்மை :

இந்த முறையானது ராணுவத்தில் பயன்படுத்தும் சாட்டிலைட் போன்களில் மட்டுமே சாத்தியம் நாம் பயன்படுத்தும் சாதாரண அலை பேசிகளுக்கு அல்ல..!

பிரமை 05 :

மனிதனால் கட்டமைக்கப்பட்ட சீனபெருஞ்சுவர் ஆனது விண்வெளியில் இருந்துகூட தெரியும்.

உண்மை :

உண்மையில் பூமியில் உள்ள பல மனித கட்டமைப்புகள் விண்ணில் இருந்து தெரியும். ஆனால் அது விண்வெளியில் எஎவ்வளவு தூரத்தில் இருந்து காணுகிறோம் என்பதை பொருத்தது.

விளக்கு ஒலி :

நிலவில் இருந்து பார்த்தல் மங்கலான விளக்கு ஒலிகளை தவிர்த்து பூமியில் உள்ள எந்த விதமான அமைப்பும் தெரியாது என்பது தான் உண்மை.

பிரமை 06 :

நிலவின் ஈர்ப்ப்பு சக்திதான் பூமியில் உள்ள கடல்களில் அலைகளை ஏற்படுத்துகிறது.

உண்மை :

பெரும் கடல் அலைகள் ஏற்படக் காரணம் பூமியின் சுழற்சி வேகமே ஆகும் (மணிக்கு 1040 மீட்டர்கள்).

பிரமை 07 :

மின்னல் ஒருமுறை ஒரு இடத்தை தாக்கினால் மீண்டும் அந்த இடத்தை தாக்கவே தாக்காது.

உண்மை :

இது ஒரு மாபெரும் அறிவியல் மூடநம்பிக்கையாகும். எம்பையர் ஸ்டேட் பில்டிங்கை 100 முறைக்கு மேல் மின்னல் தாக்கியுள்ளது.

பிரமை 08 :

மவுண்ட் எவரஸ்ட் தான் உலகின் உயரமான சிகரம்.

உண்மை :

எவரெஸ்ட் சிகரமானது கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான மலை ஆகும். நிஜத்தில் ஹவாய் தீவில் உள்ள மொனா கே (Mauna Kea) தான் மிக உயரமான மலையாகும்.

பிரமை 09 :

'டார்க் சைட் ஆப் மூன்' (Dark Side of Moon) அதாவது நிலவின் இருண்ட பகுதி அல்லது நிலவின் முதுகு எனப்படும் சந்தேகம்..!

உண்மை :

சூரியனை நோக்கி இருக்கும் போது பூமியின் மறுபாதி எப்படி இருளில் சூழ்கிறதோ அபப்டியேதான் நிலவிற்கும் இருண்ட பகுதி இருக்ககிறது சில சமயம் அப்பகுதியானது பூமியை நோக்கியும் இருக்கும்.

பிரமை 10 :

வைரம் நிலக்கரியில் இருந்து உருவாகின்றன.

உண்மை :

பெரும்பாலான வைரங்கள் அழுத்தப்பட்ட நிலக்கரியில் இருந்து உருவாவதில்லை. பூமியின் மேற்பரப்பில் கீழே சூடான அழுத்தப்பட்ட கார்பனில் இருந்து உருவாகின்றன.

பிரமை 11 :

ஒரு அணு ஆயுதம் கொண்டு சிறுகோள் ஒன்றை அழிக்க முடியும்.

உண்மை :

அணு ஆயுதம் கொண்டு தகர்க்கப்படும் சிறுகோள் ஆனது ஒன்றும் முழுமையாக ஆவியாகி விடாது. ஒரு சிறுகோள் பல பகுதியாக பிரிந்து தாக்கும்.

பிரமை 12 :

ஒளிதான் மிகவும் வேகமானது.

உண்மை :

உண்மை என்னவெனில் ஒளியின் வேகமானது நீரில் 25%, வைரத்தில் 59% குறையும். ஆனால், நியுட்ரான் எலெக்ட்ரான் அல்லது நியுட்ரினோஸ் ஆனது சில சமயங்களில் ஒளியின் வேகத்தை மிஞ்சும்..!

பிரமை 13 :

பொருள்கள் மொத்தம் 3 வகைபப்டும் அவை திட , திரவ, வாயு பொருட்கள்..!

உண்மை :

நான்காவதாக ஒரு பொருள் உண்டு அது பிளாஸ்மா (Plasma).

மேலும் படிக்க :

பிரபல 'லோகோ'க்களுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்கள்..!


வானில் காட்சியளித்த கடவுள், உலகின் முதல் புகைப்படம் வெளியீடு.?

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
13 silly myths about Earth, space, and physics that drive me crazy. Read more about this is Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்