வாட்ஸ் அப் APK ஃபைலை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி?

By Siva
|

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஆப்ஸ்களில் ஒன்று வாட்ஸ் அப். ஊடகங்களை விட வெகுவேகமாக நமக்கு செய்திகளை அள்ளி தருவதும், எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஒருவருடன் சேட் செய்வதற்கும் உதவுவது வாட்ஸ் அப் மட்டுமே.

வாட்ஸ் அப் APK ஃபைலை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி?

வாட்ஸ் அப்-க்கு பின்னர் எத்தனையோ சேட்டிங் ஆப்ஸ் வந்தாலும் இன்னும் இந்த அளவுக்கு பயனாளிகளிடம் எந்த செயலியும் ஃபேமஸ் ஆகவில்லை. இன்றைக்கு காதலர்கள், அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினர்களும் வாட்ஸ் அப்-ஐ அலுவல் நிமித்தமாகவும், சொந்த விஷயங்களுக்காகவும் பயன்படுத்த்தி வருகின்றனர்.

நொடிக்கு 24 எம்பி வேகமளிக்கும் டாப் 10 அன்லிமிட்டெட் பிஎஸ்என்எல் திட்டங்கள்..

இந்த வாட்ஸ் அப்பில் லேட்டஸ்ட் வெர்ஷனான APK ஃபைலை இன்ஸ்டால் செய்வதில் பலர் சிரமப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த APK ஃபைலை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ரூ.25/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, ஜியோவிற்கு வோடாபோன் குறி..!

வாட்ஸ் அப் APK ஃபைலை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் அந்த ஃபைல் ஒரிஜினல் ஃபைல்தானா என்பதை கன்பர்ம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருசில APK ஃபைல்களில் மால்வேர் ஒளிந்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் அது உங்கள் கம்ப்யூட்டரை பதம் பார்த்துவிடும்

இனி APK ஃபைலை எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும், எங்கிருந்து டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் அப் APK ஃபைலை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: நம்பகமான இணையதளத்தில் இருந்து முதலில் வாட்ஸ் அப் APK ஃபைலை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் டவுன்லோடு செய்யுங்கள். எது நம்பகமான இணையதளம் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் வாட்ஸ் அப் ஆப்ஸின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து டவுன் லோடு செய்து கொள்ளலாம். இதில் இருந்து எவ்வித மால்வேர் அச்சுறுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெப் 2: அதன் பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் கம்ப்யூட்டருடன் டேட்டாகேபிள் மூலம் இணைத்து டவுன்லோடு செய்த வாட்ஸ் அப் APK ஃபைலை காப்பி செய்து ஸ்மார்ட்போனில் உள்ள இண்டர்னல் மெமரியிலோ அல்லது மெமரி கார்டிலோ பேஸ்ட் செய்யுங்கள்

சியோமி மி நோட் 2 - லீக் தகவல்கள்..!

ஸ்டெப் 3: அதே நேரத்தில் வாட்ஸ் அப் APK ஃபைலை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் உங்கள் ஸ்மார்ட்போன் தேர்டு பார்ட்டி ஆப்ஸ்களை அனுமதிக்கும் ஆப்சன்களை தேர்வு செய்யுங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங் சென்று செக்யூரிட்டி செல்ல வேண்டும்

ஸ்டெப் 4: இதன் பின்னர் வாட்ஸ் அப் APK ஃபைலை நீங்கள் எங்கு சேவ் செய்து வைத்திருக்கின்றீர்களோ அங்கு சென்று அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவ்வளவுதாம் இப்பொழுது நீங்கள் வாட்ஸ் அப் APK மெசெஞ்சரை பயன்படுத்தலாம்.

பின்குறிப்பு: கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல் வாட்ஸ் அப் APK ஃபைலை நீங்கள் நேரடியாக ஸ்மார்ட்போனிலும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யலாம். வெப் பிரெளசர் மூலம் நேரடியாக டவுன்லோடு செய்துவிட்டு பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள ஸ்டெப் 2 மற்றும் ஸ்டெப் 4ஐ பின்பற்ற வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
The exciting new features in the latest WhatsApp beta version has created enough talk among all the WhatsApp users to grab the version ahead of the official public launch. Here is a way, you can do that by downloading the APK.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X