வீடியோ அழைப்பு, போட்டோ எடிட்டிங். வாட்ஸ் அப்-இல் உள்ள புதிய வசதிகள் குறித்த தகவல்

By Siva
|

சமூக இணையதளங்களின் போட்டி அதிகமாக அதிகமாக தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் சமூக இணையதள நிறுவனங்கள் புதுப்புது வசதிகளை போட்டி போட்டு வழங்கி வருகின்றன.

வீடியோ அழைப்பு, போட்டோ எடிட்டிங். வாட்ஸ் அப்-இல் உள்ள புதிய வசதிகள்

வீடியோ காலிங், போட்டோ எடிட்டிங், என வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் வாட்ஸ் அப் முன்னணியில் உள்ளது.

கோடாக் நிறுவனத்தின் 21 MP கேமிரா ஸ்மார்ட்போன் ஏக்ட்ராவின் 5 சிறப்பு அம்சங்கள்

வாட்ஸ் அப்-இன் அபார வளர்ச்சிக்கு அதன் புதுப்புது அறிமுகங்களே காரணம். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து குறிப்பாக இளையதலைமுறையினர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் வாட்ஸ் அப் உள்ளது.

சேட்டிங் ஆப்ஸ் தரும் வருமானம். டெங்கி (Tengi) ஆப்ஸ் குறித்த ஆச்சரியமான தகவல்கள்

இருப்பினும் வாட்ஸ் அப் தரும் வசதிகளை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் ஒருசிலர் அந்த வசதியை புரிந்து கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்காக வாட்ஸ் அப்பில் உள்ள புதுப்புது வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்

வாட்ஸ்-அப்-இல் வீடியோ அழைப்பை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்-அப்-இல் வீடியோ அழைப்பை பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன்களில் சப்போர்ட் செய்யும் இந்த வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளை பெறுவதும் அனுப்புவதும் எப்படி என்பதை பார்ப்போம்.

ஸ்டெப் 1: வாட்ஸ் அப் வீடியோ காலிங் பீட்டா வெர்ஷனை பயன்படுத்த விரும்பும் வாட்ஸ் அப் பயனாளிகள் முதலில் இந்த ஆப்-ஐ தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: வாய்ஸ் அழைப்பை போலவே காண்டாக்டில் உள்ள நம்பரை தேர்வு செய்து அதன் பின்னர் வீடியோ கால் ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் இப்போது வீடியோ காலை பெறலாம்.

GIF இமேஜை அனுப்புவது எப்படி?

GIF இமேஜை அனுப்புவது எப்படி?

ஸ்டெப் 1: நாம் எடுக்கும் வீடியோக்களை GIF இமேஜாக மாற்றி அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்-இல் GIFஐ அனுப்ப முதலில் மேலே உள்ள GIF ஐகானை செலக்ட்ச் செய்ய வேண்டும். பின்னர் ஆறு நொடிகளுக்கும் குறைவான வீடியோ ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும்

ஸ்டெப் 2: GIF வீடியோவை அனுப்புவதற்கு முன்னர் டிரிம்மிங் பக்கம் உங்களுக்கு தோன்றும். இதன் மூலம் வீடியோவை டிரிம் செய்து கொள்ளலாம்.

ஸ்டெப் 3: ஐகானை தேர்வு செய்தவுடன் உங்கள் 6 செகண்ட் வீடியோ GIF இமேஜாக மாறி நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டுமோ, அவர்களுக்கு சென்றுவிடும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் அப்-இல் போட்டோ எடிட்டிங் செய்வது எப்படி?

வாட்ஸ் அப்-இல் போட்டோ எடிட்டிங் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: வாட்ஸ் அப் இருந்து கொண்டே நீங்கள் கேமிராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தால், புகைப்படம் எடுக்கப்பட்டவுடன் அதில் எடிட்டிங், க்ராப்பிங், பென்சி டிராயிங் உள்பட பல ஆப்ஷன்கள் தோன்றும். டூடுல் உபயோகப்படுத்த இந்த ஆப்சன்கள் உங்களுக்கு உதவும்

ஸ்டெப் 2: உங்கள் புகைப்படத்தின் தரத்தை உயர்த்தவோ அல்லது நகைச்சுவை அம்சமாக மாற்றவோ இந்த இமோஜிஸ் (emojis) உங்களுக்கு உதவும்

ஸ்டெப் 3: மேலே உள்ள T என்ற அடையாளத்தை க்ளிக் செய்தால் உங்கள் போட்டோவுடன் பல கேப்ஷன்களை இணைக்கலாம்

ஸ்டெப் 4: மேலும் விதவிதமான வண்ணங்கள் இணைத்து உங்கள் புகைப்படத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டலாம்

வாட்ஸ் அப் பப்ளிக் குரூப்பில் சேர என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ் அப் பப்ளிக் குரூப்பில் சேர என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்குள் குரூப் ஆரம்பித்து எண்ணங்களை பகிர்ந்து கொள்வது போன்றே பப்ளிக் குரூப்பில் சேர்ந்து நம்முடைய கருத்துக்களை சமூகத்திற்கு தெரிவிக்கலாம்.

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள பப்ளிக் குரூப்பில் இருந்து உங்களை சேரும்படி அழைப்பு லிங்க் வரும் போது நீங்கள் அந்த குரூப் யாருடையது, அந்த குரூப்பில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அதில் நீங்கள் சேருவதா? அல்லது நிராகரிப்பதா? என்பதை முடிவு செய்யலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here is a complete guide for all the WhatsApp new features.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X