பொது இடங்களில் வை-பை பயன்பாடு, கவனமாய்ச் செயல்பட டிப்ஸ்.!

பொது இடங்களில் கிடைக்கும் வைபை பயன்படுத்துவோர் எவ்வித பிரச்சனைகளிலும் சிக்காமல் இருக்கச் சில டிப்ஸ்...

Written By:

ஸ்மார்ட்போனிற்கு டேட்டா பேக் ரீசார்ஜ் எல்லோரும் செய்தாலும், வை-பை இல்லாத இடங்களில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

ஃப்ரீயா வைபை கிடைக்கும் போது ஏன் மொபைல் டேட்டா யூஸ் பண்ணனும் என்பதே இவர்களின் கேள்வி.? எங்குச் சென்றாலும் இலவசமாக வைபை பயன்படுத்திக் கொள்வது பலரின் பழக்க வழக்கமாகி விட்டது.

பணத்தை மிச்சப்படுத்த பொது இடங்களில் வைபை பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்பவர்களுக்கு இந்தத் தொகுப்பு பயன் தரும். பொது வைபை பயன்படுத்தும் போது பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்துள்ளன. இங்கு இந்த ஆபத்துக்களில் சிக்காமல் இருக்கச் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

HTTPS என்க்ரிப்ட்டெட் தளங்கள்

பொது இடங்களில் வைபை பயன்படுத்தும் போது நீங்கள் என்னென்ன பிரவுஸ் செய்கின்றீர்கள் என்பதை மற்றவர்களும் பார்க்க முடியும்.ய இதனைத் தவிர்க்க HTTPS மூலம் என்க்ரிப்ட் செய்யப்பட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் பிரவுஸ் செய்வதை யாராலும் பார்க்க இயலாது.

ஹாட்ஸ்பாட்

சிறிதளவு வன்பொருள் மூலம் ஹேக்கர்களால் போலி வைபை ஹாட்ஸ்பாட் உருவாக்க முடியும். இதனால் வைபை ஆன் செய்ததும் உங்களின் திரையில் இருக்கும் வைபை பயன்படுத்த வேண்டாம். போலி வைபை பயன்படுத்தும் போது மறுமுனையில் இருப்பவர்களால் உங்களின் அனைத்துத் தகவல்களையும் மிக எளிமையாகத் திருட முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

VPN பயன்பாடு

விர்ச்சுவல் பிரைவேட் நெட்வர்க் தான் VPN ஆகும். இது தனிப்பட்ட பாதுகாப்பான கனெக்ஷன் வழங்கும். இதனால் பொது இடங்களில் கிடைக்கும் வைபை என்றாலும் உங்களின் நடவடிக்கைகளை டிராக் செய்ய முடியாது.

வைபை ஆப் செய்தல்

மொபைலில் டேட்டா பயன்படுத்தாத போது வைபை ஆஃப் செய்ய வேண்டும். இதனால் போகஸ் ரவுட்டர் மூலம் ஹேக்கர் உங்களின் கருவியை இயக்க முயற்சித்தாலும் முடியாது. மேலும் வைபை ஆஃப் செய்து வைப்பதால் கருவியின் பேட்டரி பேக்கப் அதிகம் கிடைக்கும்.

பாஸ்வேர்டு

ஒரே பாஸ்வேர்டினை பல அக்கவுண்ட்களுக்குப் பயன்படுத்துவது மிகவும் தவறான செயல் ஆகும். இது ஹேக்கர்களின் பணியினை எளிமையாக்கி உங்களது தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இதனால் கடினமான பாஸ்வேர்டு பயன்படுத்த வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Using public WiFi, here are simple ways to stay safe from hackers
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்