நம்மில் எத்தனை பேர் நாம் பயன்படுத்தும் லேப்டாப் அல்லது டெக்ஸ்டாப் கீபோர்டை ரெகுலராக சுத்தம் செய்வோம் என்பதை உங்கள் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளுங்கள்

Written By:

உங்கள் கீபோர்டை சரியாக சுத்தம் செய்ய வேண்டுமா? 6 எளிய வழிகள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது ஸ்னாக்ஸ் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது. அது தவறல்ல.

நம்மில் எத்தனை பேர் நாம் பயன்படுத்தும் லேப்டாப் அல்லது டெக்ஸ்டாப் கீபோ

ஆனால் நீங்கள் சாப்பிடும் ஸ்னாக்ஸின் துகள் கீபோர்டு இடைவெளியில் விழுந்துவிட்டால் தொல்லைதான். எனவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கீபோர்டை சுத்தம் செய்வது நல்லது.

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் போன்கள் குறித்து லீக் ஆன புதிய தகவல்கள்

கீபோர்டுகளை மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் இருந்தால் டைப் செய்யும்போது சில பிரச்சனைகள் வரும். ஒருவேளை கிபோர்டையே மாற்ற வேண்டிய நிலையும் வரலாம்.

ரிலையன்ஸ் ஜியோ கட்டண திட்டங்கள், நாளை வெளியாகுமா..?

இந்நிலையில் கீபோர்டை சரியாக சுத்தம் செய்வதே ஒரு கலைதான். எப்படி முறையாக கீ போர்டை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்,

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

முன்னெச்சரிக்கை முதலில் வேண்டும்.

கீபோர்டை சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் கண்டிப்பாக கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கும்போது கீபோர்டை சுத்தம் செய்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும்

சுத்தம் செய்வதற்கு இதுதான் சரியான வழி:

கீபோர்டை சுத்தம் செய்ய ஒரு நல்ல பிரஷ்-ஐ எடுத்து கொண்டு மேலும் கீழுமாக சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் மேலும் கீழும் பிரஷ்ஷால் சுத்தம் செய்தால் கிட்டத்தட்ட அனைத்து குப்பைகளும் வெளியே வந்துவிடும். ஒருவேளை இன்னும் சில சிறிய துகள்கள் இடுக்கில் இருந்தால் இடது, வலதுபுறமாக சுத்தம் எய்யவும்.

காட்டன் உபகரணத்தை பயன்படுத்துங்கள்

சுத்தம் செய்வதற்கு காட்டன் துணி அல்லது காட்டன் உபகரணம்தான் சிறந்தது. அதனால்தான் இடுக்குகளில் உள்ள டஸ்ட்டை வெளியே எடுத்து வர முடியும். முடிந்தால் காட்டன் உபகரணத்தில் கொஞ்சம் ஐசோபுரொபைல் ஆல்கஹால் பயன்படுத்துங்கள். ஆனால் அதே நேரத்தில் ஆல்கல்ஹால் எந்த காரணத்தை முன்னிட்டும் கீபோர்டு உள்ளே போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

இதையும் நீங்கள் யூஸ் பண்ணலாம்:

கீபோர்டை சுத்தம் செய்வதற்காகவே க்ளீனிங் putty என்ற சாதனம் கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் தற்போது விற்பனையாகிறது. இதை வாங்கி சுத்தம் செய்யலாம். ஆனால் அதே நேரத்தில் இதை நீங்கள் கவனமாக உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் கீபோர்டு உடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

கன்னி பெண்ணின் கன்னம் போல் மின்ன வேண்டுமா?

கீபோர்டை முழுமையாக திருப்தியாக சுத்தம் செய்ய வேண்டுமானால் மெதுவாக அனைத்து கீ'களையும் தனியாக வெளியே எடுத்து ஏர் கம்ப்ரஸரின் உதவியால் சுத்தம் செய்யுங்கள். அதன் பின்னர் பாருங்கள் கன்னிப்பெண்ணின் கன்னம் போல் உங்கள் கீபோர்டு மினுமினுக்கும்

குச்சியையும் பயன்படுத்தலாம்

ஒருசிறு குச்சியால் கீபோர்டில் இடுக்குகளில் உள்ள குப்பைகளை லாவகமாக வெளியே எடுக்கலாம். முடிந்தால் குச்சியின் அடியில் கொஞ்சம் பசையை அப்ளை செய்து சுத்தம் செய்யுங்கள்

மேற்கண்ட வழிகளை பின்பற்றி உங்கள் கீபோர்டை குறிப்பிட்ட இடைவெளியில் கீபோர்டை சுத்தப்படுத்தி உங்கள் கீபோர்டின் வாழ்நாளை அதிகரிக்க செய்யுங்கள்

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
You can clean the space under the keys of your keyboard by following these simple tricks. You can use cotton swabs, sponge, and other cleaning materials to do the same. Read more...
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்