ரிலையன்ஸ் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையா? இதோ எளிய வழிகள்

சிக்னல் குறையை போக்க ரிலையன்ஸ் செய்து வரும் நிலையில் ஒருசில எளிய வழிகளை தற்போது பார்ப்போம்..

Written By:

கிட்டத்தட்ட இந்தியர்கள் அனைவரும் சமீபத்தில் பயன்படுத்திய ஒரு வார்த்தை ரிலையன்ஸ் ஜியோ என்பதுதான். குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான இந்த ஜியோ சிம்-இல் ஒருசில குறைகளும் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையா?

அவற்றில் ஒன்று சிக்னல் பிராப்ளம். வெளியில் சிக்னல் கிடைப்பது போன்று வீட்டின் உள்ளே மற்றும் ரிமோட் பகுதிகளில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை அல்லது சுத்தமாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பலரிடம் உள்ளது.

எந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.?

இந்த குறையை போக்க ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முயற்சி செய்து வரும் நிலையில் ஒருசில எளிய வழிகள் மூலம் நாமே இந்த சிக்னலை சரி செய்யலாம். அது எப்படி என்று தற்போது பார்ப்போம்

ரிலையன்ஸ் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையா?

வைஃபை பயன்படுத்துங்கள்:

பொதுவாக வீட்டின் உள்ளே சிக்னல் சரியாக கிடைக்க வைஃபை பயன்படுத்தினால் இந்த குறை நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டின் உள்ளேயும், ரிமோட் ஏரியாவிலும் போன் சிக்னல் பிரச்சனை இல்லாமல் இருக்க வைஃபை மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையா?

ஃபெம்டோசெல் பயன்படுத்துங்கள்

பொதுவாக செல்போன் டவரில் பயன்படுத்தப்படும் ஃபெம்டோசெல், பெரிய வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட்களில் பயன்படுத்தும் வகையில் சிறிய அளவிலும் கிடைக்கின்றது. இதை வாங்கி உங்களுடைய வீட்டில் பிக்ஸ் செய்து கொண்டால் சிக்னல் பிராப்ளம் என்பதே இருக்காது.

ரிலையன்ஸ் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையா?

சிக்னல் பூஸ்டரும் ஒரு நல்ல தீர்வு

சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் மற்றொரு டிவைஸ் சிக்னல் பூஸ்டர். ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிக்னல் சரியில்லை என்றாலும் நீங்கள் இந்த சிக்னல் பூஸ்டரை வாங்கி உங்கள் வீட்டில் பிக்ஸ் செய்து கொண்டால்,ம் சிக்னல் பிரச்சனையை நீங்கள் எளிதாக மறந்துவிடலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Follow these 3 ways to boost up Reliance Jio signal issue when at home.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்