ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் வேகம் அதிகரிக்க வேண்டுமா? இதோ 5 சுலப வழிகள்

Written By:

இண்டர்நெட் என்பது நமது உடலில் உள்ள உறுப்புகளில் ஒன்று போல இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இண்டர்நெட் இல்லாமல் இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் வேகம் அதிகரிக்க வேண்டுமா?

அதே நேரத்தில் 3ஜி, 4ஜி என இண்டர்நெட் வேகங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் நமது மொபைலில் மட்டும் இண்டர்நெட் வேகமாக இல்லையென்றால் நமக்கு வரும் எரிச்சலின் அளவை சொல்லி முடியாது. குறிப்பாக 'உங்கள் மொபைலில் இண்டர்நெட் கனெக்ஷனை செக் செய்யுங்கள்' என்று ஒரு மெசேஜ் வந்தால் எரிச்சலின் உச்சக்கட்டத்தை அடைவோம்.

பேஸ்புக் மெஸேன்ஜர் வழியாக கேப் புக் செய்வது எப்படி.?

சரியான இண்டர்நெட் கனெக்ஷன் இருந்தும் உங்கள் மொபைலில் நெட் வேகம் அதிகரிக்கவில்லையா? கவலை வேண்டாம். இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இதோ ஐந்து எளிய வழிகளை நாங்கள் சொல்லி தருகிறோம்,

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கேச்சியை (Cache) க்ளீன் செய்யவும்

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் கேச்சி மெமரி நிரம்பிவிட்டால், கண்டிப்பாக இண்டர்நெட்டின் ஸ்பீடு குறைந்துவிடும். எனவே அவ்வப்போது கேச்சி மெமரியை க்ளீன் செய்ய வேண்டும்.

பயன்படுத்தாத ஆப்ஸ்களை அன் - இன்ஸ்டால் செய்யவும்:

ஒரு ஆர்வத்தில் ஒருசில ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துவிட்டு பின்னர் அதை உபயோகப்படுத்தாமல் மாதக்கணக்கில் விட்டுவிடுவோம். அதுபோன்ற அடிக்கடி பயன்படுத்தாத ஆப்ஸ்களை உடனே அன் -இன்ஸ்டால் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆப்ஸ்கள்:

இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க என்றே கூகுள் ப்ளேஸ்டோரில் ஏராளமான ஆப்ஸ்கள் கொட்டி கிடக்கின்றன. அதுபோன்ற ஆப்ஸ்களை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனின் இண்டர்நெட் வேகம் ஜெட் வேகத்தில் இருக்கும். உதாரணமாக இண்டர்நெட் பூஸ்டர், ஃபாஸ்டர் இண்டர்நெட் 2X, போன்ற ஆப்ஸ்கள் இண்டர்நெட்டின் வேகத்தை அதிகரிக்க உதவும் முக்கிய ஆப்ஸ்கள் ஆகும்

இப்படியும் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம்

உங்கள் ஸ்மார்ட்போனிலேயே இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு வழி உள்ளது. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் சென்று வயர்லெஸ் மற்றும் நெட்வொர் செட்டிங்ஸ் சென்று அதில் உள்ள GPRS transfer to Data Prefer என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள். பின்னர் பாருங்கள் உங்கள் போனின் வேகத்தை

சுவிட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யுங்கள்

மேற்கண்ட எல்லாவற்றையும் செய்தும் இண்டர்நெட் வேகம் இல்லையெனில் உடனே உங்கள் இண்டர்நெட் கனெக்ஷனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஒருசில நிமிடங்கள் கழித்து மீண்டும் சுவிட்ச் ஆன் செய்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்

மேற்கண்ட ஐந்து எளிய வழிகளை பயன்படுத்துவதின் மூலம் அதிவேக இண்டர்நெட் கனெக்ஷனை பெறுவது மட்டுமின்றி தங்கு தடை இல்லாத வகையில் நீங்கள் பணிபுரியலாம். என்ன பாஸ் இப்போது உங்களுக்கு திருப்தி தானே....

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Tired and irritated with the slow internet connection on your android smartphone? Here's how to boost your internet speed
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்