விண்டோஸ் கம்ப்யூட்டரில் அழிந்து போனவற்றை மீட்பது எப்படி.??

Written By:

தப்பு செய்கிறது மனித இயல்பு தான், தப்பு செய்யாதவர் யாரும் கிடையாது. ஒரு முறை செய்த தப்பு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து தான் பாடம் கற்று கொள்ள முடியும், ஆனால் இதற்குத் தப்பு செய்ததை உண்மையாய் ஏற்றுக் கொள்வதும் அவசியம் ஆகும்.

கணினி, லேப்டாப் கருவி பயன்படுத்தும் போது ஏதேதோ ஞாபகத்தில் தரவுகளை அழித்து விட்டீர்களா. விண்டோஸ் கணினிகளில் அழிந்து போன தகவல்களை மீட்கப் பல வழிகள் இருக்கின்றது. அந்த வகையில் உங்களது தகவல்களை மீட்க வழி செய்யும் சில எளியத் தந்திரங்களை தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரீஸ்டோர்

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் ரீஸ்டோர் பிரீவியஸ் வெர்ஷன்ஸ் என்ற டூல் கொண்டுள்ளது. இந்த அம்சம் சீரான இடைவெளியில் கணினியில் இருக்கும் தரவுகளை தானாக ரீஸ்டோர் செய்யும். இந்த அம்சம் குறிப்பிட்ட ஃபைல் மட்டுமில்லாமல் அதன் ஃபோல்டரையும் டிராக் செய்ய உதவும். தரவுகளை ரீஸ்டோர் செய்ய குறிப்பிட்ட ஃபோல்டர் சென்று அவற்றை மீட்க முடியும்.

ரிகுவா

ரிகுவா என்பது அழிந்து போன தரவுகளை மீட்க வழி செய்யும் எளிய மற்றும் பிரபலமான மென்பொருள் (சாஃப்ட்வேர்) ஆகும். ஹார்டு டிரைவ் முழுக்க ஸ்கேன் செய்து நீங்கள் நினைவில் கொள்ளாத தரவுகளையும் மிகக் கச்சிதமாக மீட்டெடுக்கும் திறன் கொண்டதாகும்.

பண்டோரா ரிக்கவரி

இந்த மென்பொருள் பயன்படுத்தி அழிந்து போன குறிப்பிட்ட ஃபைல் அல்லது ஃபோல்டர் பெயரை வைத்து அவற்றைத் தேடி மீட்க முடியும். தரவுகளை வேகமாக மீட்கும் மென்பொருள் இது இல்லை என்றாலும், தரவுகளை மீட்கச் சிறப்பான மென்பொருளாக இது விளங்குகின்றது.

போட்டோ ரெக்

துவக்கத்தில் தவறுதலாக அழிந்து போன புகைப்படங்களை மட்டும் மீட்க வழி செய்யும் மென்பொருளாகப் போட்டோ ரெக் இருந்தது. தற்சமயம் பல்வேறு அப்டேட் மூலம் போட்டோக்களை தவிர்த்து மற்ற ஃபைல்களையும் மீட்கப் போட்டோ ரெக் உதவுகின்றது.

பேக்கப்

ஒரு முறை தவறுதலாக தரவுகளை அழித்து விட்டீர்கள். இனி உங்களது முக்கியமான தரவுகள் அனைத்தையும் தனியே ஒரு பிளாஷ் டிரைவ் அல்லது கிளவுட் சேவைகளில் பதிவு செய்து வைப்பது இது போன்ற தலைவலிகளைத் தவிர்க்க உதவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Tools That Restore Deleted Files on Windows Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்