புதிய ஆண்ட்ராய்டு போன் செய்ய கூடாதவை.!!

By Aruna Saravanan
|

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்திய சந்தையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம் எனலாம்.

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் வாங்கியவுடன் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி பல வழிகளில் அறிந்திருப்பீர்கள். ஆனால் முதன் முதலில் ஆண்ட்ராய்ட் போன் வாங்கும் போது என்ன செய்ய கூடாது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியம்.

ஆப்ஸ் நிறுவுதல்

ஆப்ஸ் நிறுவுதல்

கண்ணை மூடிகொண்டு ஆப்ஸ்களை நிறுவக் கூடாது. மிகவும் பிரசித்தி பெற்ற ஆப்ஸை மட்டும் நிறுவலாம். சில ஆப்ஸ்கள் பாதுகாப்பற்றது. ஆகையால் எப்போதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

 பேட்டரி பூஸ்டர் ஆப்

பேட்டரி பூஸ்டர் ஆப்

ஆரம்பத்தில் பேட்டரி பூஸ்டர் ஆப்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதை உங்கள் போன் ஹேங் ஆனால் மட்டும் பயன்படுத்தவும்.

தொடர்பு எண்

தொடர்பு எண்

உங்கள் தொடர்புகளை போனில் சேமிப்பதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் உங்கள் கூகுள் கணக்குக்கு எல்லா தொடர்புகளையும் பேக் அப் செய்வது நல்லது.

வேண்டாம்

வேண்டாம்

உங்கள் போனுக்கு எப்போதும் பாதுகாப்பு தேவை. போனுக்கு கடவுச்சொல் கொண்டு லாக் செய்து வைக்கவும். இதனால் மற்றவர்கள் உங்கள் போனை பயன்படுத்தாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

ரூட்

ரூட்

நீங்கள் ஆண்ட்ராய்ட் போனை முதன் முதலில் பயன்படுத்துகின்றீர்கள் என்பதால் போனை ரூட் செய்ய வேண்டாம். பொதுவாக கருவிகளை ரூட் செய்தால் கூடுதல் அம்சங்களை பயன்படுத்த முடியும், ஆனால் கருவியின் வாரண்டி வழங்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
things to not do with your first Android Phone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X