20க்கும் மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்பவரா நீங்கள்? அப்படியானால் இதை படியுங்கள்

கூகுள் குரோமில் உள்ள புதிய எக்ஸ்டென்ஷன் வசதிகள்

நீங்கள் அடிக்கடியோ அல்லது எப்பொழுதாவதோ இண்டர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் கண்டிப்பாக இந்த ஒரு பிரச்சனையை சந்தித்து இருப்பீர்கள். அதாவது பிரெளசரி அதிகமான டேப்கள் ஓப்பன் செய்தால் அதாவது 20க்கும் மேற்பட்ட டேப்கள் ஓப்பன் செய்தால் திடீரென பிரெளசரில் பிரச்சனையோ அல்லது ஹேங் ஆவதோ நடந்திருக்கும். அந்த நேரத்தில் பிரெளசரில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.

20க்கும் மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்பவரா நீங்கள்?

இந்த நிலையில் நீங்கள் கூகுள் குரோம் பிரெளசர் பயன்படுத்துவராக இருந்தால் இதற்கென குரோம் எக்ஸ்டென்ஷன்கள் இருக்கின்றது என்பதும், இந்த எக்ஸ்டென்ஷன்கள் கொண்டு நீங்கள் 20க்கும் மேற்பட்ட டேப்கள் ஓப்பன் செய்து பணி செய்யலாம் என்பதையும் நீங்கள் அறிவீர்களா? ஆன்லைனில் கொட்டிக் கிடக்கும் இந்த வகை எக்ஸ்டென்ஷன்கள் குறித்தும் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டூ மெனி டேப்ஸ் (ToomanyTabs):

டூ மெனி டேப்ஸ் என்ற இந்த எக்ஸ்டென்ஷன்கள் டேப் வடிவத்தை உங்களுக்கு தம்ப்நெய்ல்(thumbnail) வடிவத்தில் தரும். நீங்கள் ஓப்பன் செய்யும் அனைத்து டேப்களும் தம்ப்நெய்ல் வடிவத்தில் இருந்தால் அடையாளம் கண்டு கொள்வதும் எளிது, அதேபோல் பிரச்சனையும் வராது. அதுமட்டுமின்றி இது தேடுதல் என்ற ஆப்சனும் இருப்பதால் உடனடியாக எந்த டேப் வேண்டுமோ அதை தேர்வு செய்யும் வசதியும் உண்டு.

குவிக் டேப்ஸ் (Quick Tabs):

குவிக் டேப்ஸ் என்ற இந்த எக்ஸ்டென்ஷன் மேலே கூறிய டூ எனி டேப்ஸ் போலவேதான் வேலை செய்யும். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இந்த எக்ஸ்டென்ஷன் டேப்களை டிராப்டவுன் மெனு போன்று காண்பிக்கும். இதிலும் தேடுதல் என்ற சியர்ச் ஆப்சன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

செஷன் மேனேஜர் (Session Manager)

இந்த எக்ஸ்டென்ஷன் நமக்கு எப்படி உதவுகிறது என்றால் ஒருவேளை நாம் படிக்காத டேப்-ஐ தெரியாமல் மூடிவிட்டோம் என்றால் இந்த செஷன் மேனேஜர், அனைத்து டேப்களையும் சேவ் செய்திருக்கும். அந்த சேமிப்பில் இருந்து நாம் விடுபட்ட டேப்பில் உள்ளவற்றை அறிந்து கொள்ளலாம்.

ரீசெண்ட் ஹிஸ்ட்ரி: (Recent History)

இந்த எக்ஸ்டென்ஷன் சமீபத்தில் நீங்கள் பார்த்த அனைத்து டேப்களின் ஹிஸ்ட்ரியையும் சேமித்து வைத்திருக்கும். மீண்டும் அதே டேப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும் என்றால் ஹிஸ்ட்ரியில் சென்று அதை ஓப்பன் செய்து கொள்ளலாம்.

டேப் ஜம்ப்: (TabJump)

இந்த எக்ஸ்டென்ஷனில் மூன்று வித பிரிவுகள் இருக்கும். அவை அண்டூ (undo), ரிலேட்டட் (Related) மற்றும் ஜம்ப் (jump). இதில் அண்டூ ஆப்சனில் சமீபத்தில் மூடிய அனைத்து டேப்களையும் பார்க்கலாம்.

ரிலேட்டட் ஆப்சனில் இப்போது ஒப்பன் ஆகியுள்ள டேப்களை தவிர மீதி டேப்களை பார்க்கலாம் மற்றும் ஜம்ப் பகுதியில் மீதியுள்ள டேப்களை ஒப்பன் டேப்ஸ்களை பார்க்க உதவும்

மேற்கண்ட எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தி நீங்கள் மிக எளிதாக கூடுதலான டேப்களை ஓப்பன் செய்து பணி செய்யலாம்

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
If you use chrome for browsing, then managing tabs are super easy because lots of chrome extensions are available online.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்