இலவச வைஃபை அணுகலை பெற உதவும் பேஸ்புக், எப்படி.?

பேஸ்புக், உங்கள் அருகாமையில் உள்ள பொது மற்றும் இலவச வைஃபை அக்ஸஸ் புள்ளிகளை கண்டுபிடிக்க உதவும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

Written By:

மிக அதிகமாக பயன்படும் சமூக வலைப்பின்னல் தளமான பேஸ்புக், எப்போதும் நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் உலகம் முழுவதும் உள்ள பயனீட்டாளர்களை இணைக்க தவறியதில்லை. அப்படியான பேஸ்புக் எப்போதும் ஒரு நல்ல முறையில் மக்கள் இணைக்கும் பல சோதனை அம்சங்களை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அப்படியாக சமீபத்தில் பேஸ்புக் தங்கள் பயனர்கள் அவர்களின் மொபைல் தரவை நிறைய சேமிக்க, அதாவது அருகிலுள்ள இலவச மற்றும் பொது வைஃபை அணுகல் புள்ளிகள் கண்டுபிடிக்க அனுமதிக்கும் "வைஃபை டிஸ்கவர்" என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

திறந்த வைஃபை நெட்வொர்க்குகள்

இந்த அம்சம் அருகிலுள்ள இடங்களில் கிடைக்கும் திறந்த வைஃபை நெட்வொர்க்குகள் காண்பிப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் நண்பர்களுடன் மிகவும் இணைக்கப்பட்ட ஒரு நிலையில் இது இருக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை, சரி இதை பயன்படுத்துவது எப்படி.?

செயல்முறை #01

பயனர் செய்ய வேண்டும் என்று முதல் விடயம் என்னவென்றால் தங்கள் பேஸ்புக் ஆப்பை புதிய அம்சம் பெறும் நோக்கத்தில் அப்டேட் செய்ய வேண்டும்.

செயல்முறை #02

நீங்கள் பயன்பாட்டை வெற்றிகரமாக மேம்படுத்திய பிறகு, பயனர் செய்ய வேண்டியது எல்லாம் பேஸ்புக் ஆப்பை திறந்து செட்டிங்ஸ் சென்று, அந்த பட்டியலில் "வைஃபை டிஸ்கவர்" என்ற விருப்பத்தை கண்டறிந்து எனேபிள் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செயல்முறை #03

இந்த அம்சம் துல்லியமாக வேலை செய்ய, மற்றும் அருகிலுள்ள வைஃபை அணுகல் புள்ளிகளை கண்டுபிடித்து நல்ல தேடல் முடிவுகளை காண்பிக்க உங்கள் தொலைபேசி ஜிபிஎஸ் ஆன் செய்திருக்கப்பட்டு இருக்க வேண்டும்.

செயல்முறை #04

நீங்கள் இந்த விருப்பத்தை எனேபிள் செய்த பின்னர், பேஸ்புக் தூரம் மற்றும் புள்ளி வரைபட திசை உடன் இணைந்து வைஃபை அணுகல் புள்ளிகளின் பட்டியலை உங்களுக்கு காண்பிக்கும். இந்த வசதியை பயன்படுத்தி, மக்கள் இலவச வைப்பாய் அணுகலை பெற்று இன்னும் அதிக சமூகமாக மற்றும் மொபைல் தரவு சேமிப்பிலும் ஈடுபட முடியும்.

மேலும் படிக்க

நீங்க வைத்திருக்கும் ஐபோன் போலியா.? கண்டறிவது எப்படி.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Spot Nearby Free, Public WiFi Access Points Using Facebook and Save Data. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்