பயன்தரும் பலரும் அறிந்திராத சாம்சங் கேலக்ஸி ரகசியங்கள்!

சாம்சங் கருவிகளைப் பயன்படுத்துவோருக்கே அதிகம் தெரிந்திராத சில சீக்ரெட் அம்சங்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

Written By:

நம்ம ஊர்ல பெரும்பாலானவங்க கையில் புரளும் போன் என்றால் அது சாம்சங் தான் எனலாம். பீச்சர் போன்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தது நோக்கியா என்றால், ல்மார்ட்போன்களைப் பொருத்த வரையில் சாம்சங் தான் எப்போதும் கிங்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதைப் போல் நோட் 7 சற்றே அடி வாங்கினாலும், அந்நிறுவனத்தின் பல்வேறு மாடல்கள் இன்றும் பழையப்படி விற்பனையாகிக் கொண்டே தான் இருக்கின்றது.

எல்லோரும் எந்நேரமும் கையில் வைத்திருந்தாலும் சிலவற்றைக் குறித்து எப்போதும் யோசித்திருக்க மாட்டோம். அப்படியாக யாரும் கற்பனை செய்திராத அதே சமயம் பயன் தரும் சில சீக்ரெட் அம்சங்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

குவிக் செட்டிங்ஸ்

நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் பேனலில் தற்போதைய நேரம், பேட்டரி அளவு, நெட்வக்ர் ஸ்டேட்டஸ் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு விரல் மூலம் ஸ்வைப் செய்தால் குவிக் செட்டிங்ஸ் ஆப்ஷனினை பெற முடியும்.

கேலக்ஸி நோட் 7 கருவிகளைப் பத்திரமாக திரும்பப் பெற சாம்சங் வித்தியாச முயற்சி!

குவிக் செட்டிங்ஸ் நேரடி இயக்கம்

முந்தைய வழிமுறையில் குவிக் செட்டிங்ஸ் இயக்கும் வழிமுறையைத் தெரிந்து கொண்டீர்கள், இங்குக் குவிக் செட்டிங்ஸ் ஆப்ஷன்களை நேரடியாக இயக்க குறிப்பிட்ட ஆப்ஷனினை அழுத்திப் பிடித்தால் போதுமானது.

வாய்ஸ் அப்ளிகேஷன்

சாம்சங் கேலக்ஸி போன்களில் இன்பில்ட் ஆப்ஷன் தான் எஸ் வாய்ஸ், இது சாம்சங் நிறுவனத்தின் பெர்சனல் அசிஸ்டண்ட் அம்சம் ஆகும். இந்த ஆப்ஷனினே வேகமாக இயக்க ஹோம் பட்டனினை இரு முறை கிளிக் செய்தால் போதும்.

கூகுள் சர்ச்

சாம்சங் கேலக்ஸி கருவிகளில் மெனு பட்டனினை அழுத்திப் பிடித்தால் கூகுள் சர்ச் பக்கத்தனை திறக்க முடியும்.

டெவலப்பர் ஆப்ஷன்கள்

சாம்சங் கருவிகளில் டெவலப்பர் ஆப்ஷனினை இயக்க Settings -- About Device -- Build Number -- Software Info -- Developer Options -- Build Number ஆப்ஷனினை ஏழு முறை கிளிக் செய்தால் போதுமானது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Some Secret Features of Samsung Galaxy Mobile Phones
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்