சூடாகும் லாப்டாப்பை 'காப்பர்' நாணயங்கள் பயன்படுத்தி 'கூல்' ஆக்கலாம்..!

Written By:

நம்மில் பெரும்பாலும், அவரவர் லாப்டாப்களை அல்லது கம்ப்யூட்டர்களை அதிக அளவில் பயன் படுஹ்டும் பழக்கம் கொண்டவர்களாய் இருக்கிறோம். அவ்வளவு ஏன் நம்மில் பலர் டிவி பார்த்துக்கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே கூட லாப்டாப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவரகளாய் இருக்கிறோம்..!

மடிக்கணினிகளில் நீண்ட பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் குளிரூட்டும் முறைகள் அமைக்கப்பெற்று இருந்தாலும் கூட அவைகள் ஓவர்ஹீட் (Overheat) பிரச்சனைக்குள்ளாவதை தடுக்க முடிவதில்லை. இந்த பிரச்சனைக்கு மிகவும் எளிமையான ஒரு வழிமுறையை கண்டறிந்து நம்மோடு பகிர்ந்துள்ளார் சுசூகி அகிநோரி என்ற ஜப்பானிய ட்விட்டர் பயனர்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

லாப்டாப் அதிக சூடாகுவதை தவிர்க்க ஜப்பானிய ட்விட்டர் பயனரின் அறிவுரையின்கீழ் லாப்டாப்களில் செப்பு நாணயங்களை அடுக்கி/ குவித்து வைக்க வேண்டும்.

#2

செப்பு நாணயங்கள் ஒரு ரேடியேட்டர் ஆக செயல்பட்டு வெப்பக் கடத்துத்திறனை நிகழ்த்துகிறது, முக்கியமாக லாப்டாப் வடிவமைப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்களில்..!

#3

இந்த யோசனை, கேட்பதற்கு கொஞ்சம் கிறுக்குத்தனமாக தோன்றினாலும் நிறைய காப்பர் நாணயங்களை அடுக்கி வைத்து பயன்படுத்தி பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#4

எடுத்துக்காட்டுக்கு உங்கள் மேக்புக் மிகவும் சூடாகிவிட்டது என்றால் ஒரு 10 காப்பர் நாணயங்களை எடுத்து கீபோர்ட்க்கு மேல் பக்கம் அடுக்கி வைத்தால் வெப்பம் குறைக்கப்படும்.

#5

லாப்டாப்களில் மட்டுமின்றி கம்ப்யூட்டர்களிலும் இம்முறையை பயன்படுத்த முடியும், சிபியூ-வின் உள்ளே பொருத்தி வைக்கப்படும் காப்பர் நாணயங்கள் ஆனது வெப்ப காப்பான் என்பதால் எளிமையாக சூட்டை வெகுவாக குறைக்கும்.

#6

சரி, செப்பு நாணயங்களை தேட ஆரம்பியுங்கள். ஐடியாக்களை அள்ளி வழங்குவதோடு எங்கள் வேலை முடிந்தது, இப்போது நீங்கள் தான் முயற்சித்துப் பார்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற பல டிப்ஸ்களை பெற தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைத்தளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Solve Your Computer’s Overheating Problem by Stacking Copper Coins on It. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்