கணினியில் அழிந்து போனவைகளை மீட்க எளிய தந்திரங்கள்.!!

Written By:

'வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை' இது தான் உண்மையும் கூட. நேரமே ஒவ்வொரு நொடியும் மாறி கொண்டிருக்கும் போது, நிரந்தரம் என எதை கூறுவது..??! ஒன்றுமே நிரந்தரம் இல்லாத போது, கணினியில் நாம் சேமித்த தரவுகள் மட்டும் விதிவிலக்கா என்ன.??

கணினியில் அழிந்து போன தரவுகளை மீட்க ஐந்து எளிய வழிமுறைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..!!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ரிக்குவா

கரப்ட், உடைந்த, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள், பக் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை மீட்க சரியான மென்பொருள் தான் ரிக்குவா.

விண்டோஸ்

விண்டோஸ் மீட்பு மென்பொருளான ரிக்குவா பிரிஃபார்ம் மூலம் உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் அட்வான்ஸ்டு டீப் ஸ்கேன் மோடு அழிக்கப்பட்ட தரவுகளை மீட்பதில் கில்லாடி எனலாம்.

பான்டா ரிக்கவரி

எவ்வித தரவுகளையும் மீட்க உதவும் இலவச மென்பொருள் தான் பான்டா ரிக்கவரி. இதை கொண்டு புகைப்படங்கள், பாடல்கள், மற்றும் இதர தரவுகளை மீட்க முடியும். Shift+Del பட்டன்களை கொண்டு அழிக்கப்பட்ட தரவுகளையும் மீட்க முடியும்.

பன்டோரா ரிக்கவரி

பன்டோரா ரிக்கவரியானது கணினியை முழுமையாக ஸ்கேன் செய்து இருக்கும் ஃபைல் மற்றும் அழிந்து போன ஃபைல்களுக்கு தனியே இன்டெக்ஸ் ஒன்றை உருவாக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

டெஸ்ட் டிஸ்க்

இந்த மென்பொருள் கொண்டு அழிக்கப்பட்ட தரவுகளை மற்றொரு டிஸ்க் பார்டிஷன் அல்லது ஹார்டு டிஸ்க் போன்றவைகளில் பதிவு செய்ய முடியும்.

இயங்குதளம்

டெஸ்ட்டிஸ்க் கணினியின் BIOS அல்லது இயங்குதளம் போன்றவைகளை ஸ்கேன் செய்து அழிந்து பார்டிஷன்களை ரிக்கவர் செய்யும் திறன் கொண்டுள்ளது.

ரீஸ்டோரேஷன்

இந்த மென்பொருள் கொண்டு அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் ஃபைல் அமைப்புகளில் இருந்து அழிந்து போன தரவுகளை மீட்க முடியும்.

ஸ்கேன்

இதன் ஸ்கேன் மற்றும் ரிக்கவரி வேகம் பணியை எளிதாக முடித்து விடும். போர்டபிள் மென்பொருள் என்பதால் இதனை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தலாம்.

இரேஸ்அஸ்

தெரியாமல் தவறுதலாக அழிக்கப்பட்ட தரவுகளை மீட்க இந்த இலவச மென்பொருள் உகந்ததாக இருக்கின்றது. ஃபார்மேட், மென்பொருள் க்ராஷ் அல்லது வேறு காரணங்களினால் அழிந்து போன தரவுகளை மீட்கும் பணியை இந்த மென்பொருள் சிறப்பாக செய்து முடிக்கும்.

ஸ்கேன்

கணினியின் ஹார்டு டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ், யுஎஸ்பி டிரைவ், மெமரி கார்டு, டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், மியூசிக் பிளேயர் மற்றும் இதர ஸ்டோரேஜ் கருவிகளில் இருந்து தரவுகளை ஸ்கேன் செய்து மீட்கும்.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Simple Ways to Recover Deleted Files from PC Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்