ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்??

லைஃப் ஸ்மார்ட்போன் கருவி வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து லைஃ போன்களை வைத்திருப்போர் தங்களின் கருவிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ளச் சில டிப்ஸ்..

Written By:

கால் டிராப், குறைவான இண்டர்நெட் வேகம் என எல்லாக் குற்றச்சாட்டுகளுடன் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் கடினமான காலகட்டத்தில் இருக்கின்றது. இந்நிலையில் புதிய சிக்கல் ஒன்றும் ரிலையன்ஸ் ஜியோவை பாதித்திருக்கின்றது. லைஃ போன் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் அனைவரையும் பாதிப்படையச் செய்துள்ளது.

நேற்று ஜியோ லைஃப் வாட்டர் 1 மாடல் ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்துச் சிதறியது. விலை அதிகமான கருவிகளில் துவங்கி மலிவு விலை வரை அனைத்துக் கருவிகளும் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7, ஐபோன் 7 போன்ற கருவிகளும் வெடித்துச் சிதறியது. இம்முறை ரிலையன்ஸ் லைஃ போன்களும் வெடித்திருக்கின்றன.

இங்கு லைஃப் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களின் கருவிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சார்ஜிங்

சார்ஜரில் போட்டதும் சில ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியாகச் சூடாகக் கூடும், தாங்க முடியாதளவு சூடானதும் கருவி தானாக வெடிக்கின்றது.

இதனால் சார்ஜரில் இருக்கும் போது கருவி அதிகப்படியாகச் சூடானால் உடனே கருவியினைச் சார்ஜரில் இருந்து கழற்றி விடுவது நல்லது.

 

சார்ஜர்

ஸ்மார்ட்போன்களுடன் வழங்கப்பட்ட சார்ஜரை மட்டும் பயன்படுத்துவது நல்லது. மற்ற சார்ஜர் அல்லது குவிக் சார்ஜர் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லதல்ல.

மெத்தையில் சார்ஜ்

பெரும்பாலானோரும் தங்களது கருவிகளை மெத்தையில் வைத்துச் சார்ஜ் செய்வர், இது முற்றிலும் தவறான செயல் ஆகும். மெத்தையில் சார்ஜ் செய்யும் போது கருவி அதிகளவு சூடாகும், இது கருவிக்கு நல்லதல்ல.

பயன்பாடு

ஸ்மார்ட்போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது என மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதுண்டு. இதற்கு முக்கியக் காரணம், கருவி சார்ஜரில் இருக்கும் போது அதிகளவு சூடாகும், மேலும் இத்துடன் பயன்படுத்தும் போது சூடு அதிகமாகும் இதனால் கருவி வெடிக்கும் என்பதே ஆகும்.

பழைய பேட்டரி

மொபைல் பேட்டரி பாழடைந்து விட்டால் அதனினை பயன்படுத்தக் கூடாது. முடிந்த வரை ஒரிஜினல் பேட்டரி வகைகளைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மேலும் கருவியை எப்போதும் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Simple Ways to Prevent Your Reliance LYF Phones From Exploding
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்