ஜியோ டவுன்லோடு வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி.??

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ இலவச இண்டர்நெட் மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை. போட்டி நிறுவனங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றிருந்தாலும், ஜியோ சார்ந்த சில சந்தேகங்கள் கடந்த சில நாட்களாக இண்டர்நெட் முழுக்க தீயாய் பரவி வருகின்றது. இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலவச சேவையும் அதன் பின் மலிவு விலையிலும் ஜியோ தனது 4ஜி சேவையினை வழங்க இருக்கின்றது.

முன்பை விட அதிகளவு பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பயன்படுத்தத் துவங்கியிருப்பதால் ஜியோ இண்டர்நெட் வேகம் குறைந்திருப்பதாகவும் இணையத்தில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் டவுன்லோடு வேகத்தை நீட்டிக்கும் சில எளிய வழிமுறைகளைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

மொபைல் பேன்ட் லாக் செய்தல்

மொபைல் பேன்ட் லாக் செய்தல்

ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு பேன்ட்களிலும் ஒவ்வொரு விதமாக வேகத்தினை வழங்குகின்றது. அதன் படி பேன்ட் 40யை லாக் செய்தால் அதிகப்படியான வேகத்தினை பெற முடியும். குவால்காம் கருவிகளில் இதைச் செய்ய *#*#4636#*#* என டைப் செய்து எல்டிஇ பேன்டினை பேன்ட் 40க்கு மாற்ற முடியும்.

குறிப்பு : இந்த வழிமுறையானது சில குவால்காம் சிப்செட்களிலும், மீடியாடெக் சிப்செட் பயன்படுத்தும் ஒன்பிளஸ் 3 மற்றும் சியோமி எம்ஐ5 போன்ற கருவிகளில் வேலை செய்யும்.

எம்டிகே இன்ஜினியரிங் டூல்

எம்டிகே இன்ஜினியரிங் டூல்

மீடியாடெக் கருவிகள் அல்லாமல் வேறு கருவிகளை பயன்படுத்துவோர் எனில் MTK Engineering Tool டவுன்லோடு செய்து பேன்ட் 40க்கு மாற முடியும்.

ஏபின் செட்டிங்ஸ்

ஏபின் செட்டிங்ஸ்

அடுத்து கருவியின் ஏபிஎன் (APN) செட்டிங்ஸ்'களை மாற்றலாம். பொதுவாகக் கருவியில் ஏற்கனவே இருக்கும் ஏபிஎன் சீரான வேகத்தை வழங்கலாம், இருந்தும் ஏபிஎன் மாற்றுவதும் வேகத்தை அதிகரிக்க உதவலாம்.

Name - RJio
APN - jionet
APN Type - Default
Proxy - No changes
Port - No changes
Username - No changes
Password - No changes
Server - www.google.com
MMSC - No changes
MMS proxy - No changes
MMS port - No changes
MCC - 405
MNC - 857 or 863 or 874
Authentication type - No changes
APN Protocol - Ipv4/Ipv6

குறிப்பு : முந்தைய ஏபிஎன் சார்ந்த பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் இந்த செட்டிங்ஸ் வேலை செய்யாமலும் போகலாம்.

ஸ்வாப் விபிஎன்

ஸ்வாப் விபிஎன்

விபிஎன் செட்டிங்ஸ் மாற்றியதும், ஸ்னாப் விபிஎன் (Snap VPN) எனும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். இது ஒரு இலவசமாகக் கிடைக்கும் செயலியாகும்.

சர்வர்

சர்வர்

ஸ்னாப் விபிஎன் செயலியை டவுன்லோடு செய்ததும் பிரான்ஸ் அல்லது சிங்கப்பூர் சர்வர்களுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு செய்வது டவுன்லோடு வேகத்தை அதிகரிக்குமே தவிர பிரவுஸிங் வேகத்தை அதிகரிக்காது.

குறிப்பு : இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றும் போது ஏற்படும் தவறுகளுக்கு தமிழ் கிஸ்பாட் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

Best Mobiles in India

English summary
Simple Steps to Increase Reliance Jio 4G Download Speed up to 20mbps Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X