ஆன்லைன் ஷாப்பிங் சலுகை பெற எளிய டிப்ஸ்.!!

Written By:

படம் போர்க்கும் போதும், வீடியோ கேம் விளையாடும் போதும் அடிக்கடி கடைக்கு அனுப்பப்படும் பிள்ளைகளுக்கு ஆன்லைன் ஷாப்பிங் உற்ற நண்பனாக அமைந்துள்ளது. இன்று நேரடியாகக் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவோரை விட ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருட்களை வாங்குவோர் தான் அதிகம்.

இதனை இண்டர்நெட் மூலம் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவராக இருக்கலாம். அந்த வகையில் உங்ளுக்கு மிகவும் பயனுள்ள தொகுப்பாக இது அமைந்துள்ளது. அதிக சலுகையுடன் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய சில டிப்ஸ்களை ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கார்ட்

உங்களுக்குப் பிடித்த பொருட்களை கார்ட்'இல் சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து நீங்கள் கார்ட்'இல் வைத்திருக்கும் பொருட்களுக்கு அதிக சலுகைகளை பெற முடியும். இதில் உங்களுக்கு ஏற்ற விலையில் பொருட்களை வாங்க முடியும். இது முறையாக வேலை செய்ய உங்களது மின்னஞ்சல் முகவரியை இணையதளங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பரிந்துரை

ஆன்லைன் ஷாப்பிங்'இல் அதிக சலுகைகளை பெற கூப்பன்களை பனயன்படுத்தலாம். பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இலவச டெலிவரி

ரூ.500க்கும் குறைவாகப் பொருட்களை வாங்கும் போது இலவச டெலிவரி பெற இதை முயற்சிக்கலாம். முதலில் தேவையான பொருளைத் தேர்வு செய்து, உடன் ரூ.500 விலையில் ஒரு பொருளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் இலவசி டெலிவரி கிடைக்கும், பின் அதிக விலை கொண்ட பொருளை கேன்சல் செய்து விடவும்.

ஹிஸ்ட்ரி

அடிக்கடி பிரவுஸிங் ஹிஸ்ட்ரி மற்றும் குக்கிகளை அழிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறி விட்டு, பிரவுஸரின் இன்காக்னிட்டோ மோடில் ஷாப்பிங் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மாறுபட்ட விலையில் பொருட்களை வாங்க முடியும்.

கேஷ்பேக்

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது கேஷ்பேக் வழங்கும் சேவைகள் மற்றும் டிஜிட்டல் வாலட் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது அதிக பணம் மிச்சம் செய்ய முடியும்.

எக்ஸ்டென்ஷன்

ஹனி க்ரோம் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்தி எந்த இணையதளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நாள்

எந்தப் பொருள் எந்த நாள் வாங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தளமும் குறிப்பிட்ட ஒரு தினம் மட்டும் அதிக சலுகைகளை வழங்கும். குறிப்பிட்ட தேதியில் பொருட்களை வாங்கினால் அதிக சலுகைகளை பெற முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Simple Online Shopping Hacks That Will save your money Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்