ஸ்மார்ட்போன் பேட்டரி : மாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

Written By:

தொழில்நுட்ப சந்தையில் பயன்படுத்தப்படும் அனைத்து வித பேட்டரி குறித்தும் சரியான தகவல்களை வழங்கும் பேட்டரி யுனிவர்சிட்டி தகவல்களின் படி நாம் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட்போன் கருவிகளின் லித்தியம் அயன் பேட்டரியின் ஆயுள் 300-500 முறை சார்ஜ் செய்வது மட்டுமே ஆகும்.

ஸ்மார்ட்போன் பேட்டரி : மாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

ஸ்மார்ட்போன் பேட்டரி 70 சதவீதத்திற்கும் கீழ் இருக்கும் போது அதனை சார்ஜில் நுழைப்பது ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு சமமானதாகும். இந்தத் தகவல்களின் படி ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுள் அதிகபட்சம் 14 முதல் 18 மாதங்கள் வரை எனலாம். இந்தக் காலகட்டம் நிறைந்ததும் பேட்டரியின் பயன்பாடுகளில் தொய்வு நிலை ஏற்படத் துவங்கும்.

சில சமயங்களில் ஒவ்வொருத்தர் பயன்பாடுகளுக்கு ஏற்ப அவற்றின் வாழ்நாள் கூடுதலாகவும் நீடிக்கலாம். உங்களது ஸ்மார்ட்போன் பேட்டரியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை அறிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன, அவற்றில் சில ஸ்லைடர்களில்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வெப்பம்

சார்ஜ் செய்யும் போது பொதுவாகவே லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பம் ஆகக் கூடும். ஆனால் இதனைத் தாங்கும் திறன் கொண்டிருப்பதால் அதிக வெப்பத்தை உணர முடியாது. ஆனால் வெப்பம் இதுவரை இல்லாதளவு அதிகமாகும் போது பேட்டரியை மாற்றிட வேண்டும்.

அளவு

ஸ்மார்ட்போனின் பேட்டரியை கழற்ற முடியும் எனில், அதனைக் கழற்றி பேட்டரி வீங்கியுள்ளதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை பேட்டரி வீங்கியிருந்தால் அதனினை உடனே மாற்ற வேண்டும். பாழான பேட்டரியை பயன்படுத்தும் போது போனின் மற்ற பாகங்களும் பாழாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பேட்டரி

பேட்டரியின் சார்ஜ் எவ்வளவு சீக்கிரம் தீர்ந்து போகின்றது என்பதை கண்காணித்து பேட்டரியை மாற்ற வேண்டுமா என்பதைச் சரி பார்க்க முடியும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் எவ்வித பயன்பாடும் இல்லாமல் சில மணி நேரத்திலேயே சார்ஜ் குறைந்தால் பேட்டரியை மாற்ற வேண்டும்.

வாட்டர் ஸ்ட்ரிப்

பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரியில் இருக்கும் வாட்டர் ஸ்ட்ரிப் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒரு வேலை நீரில் விழுந்தால் வெள்ளை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறிடும். இவை அல்லாமல் வேறு நிறங்களில் வாட்டர் ஸ்ட்ரிப் மாறியிருந்தால் பேட்டரியை மாற்ற வேண்டும்.

ஸ்விட்ச் ஆன்

பேட்டரி முழுமையாகத் தீர்ந்த பின் சார்ஜரில் வைத்து ஸ்மார்ட்போனை ஆன் செய்ய வேண்டும், போதுமான பவர் சப்ளை இல்லாமல் ஆன் ஆகவில்லை எனில் பேட்டரியை மாற்ற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Signs That it’s Time to Replace Your Smartphone Battery Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்