தலைவர் ஸ்டைலில் ஐபோன் 6எஸ் பயன்படுத்த எளிய வழிகள்.!!

Written by: Aruna Saravanan

ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் உண்மையில் சிறந்த ஸ்மார்ட்போன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதில் எண்ணற்ற அம்சங்கள் உள்ளன. இந்த கருவியில் 3டி டச், ஏ9 சிப்செட், 2ஜிபி ரேம் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அப்படியாக ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் ரூ.62,000 மற்றும் ரூ. 72,000 விலையில் கிடைக்கின்றது. நீங்களும் இதை வாங்களாம் ஆனால் இதை மற்றவர்களை போன்றே சரலமாக கையாளும் சில வித்தைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பயன்பாடு

ஆப்பிள் ஐபோன் 6எஸ் கருவியில் உள்ள ஒரு மிக சிறந்த அம்சம் இதன் ஸ்விட்ச் கண்ட்ரோல் தான். இதனால் கைபேசியின் கேமராவை அசைவு சென்சாராக மாற்ற முடியும். இதை செயல்படுத்த Settings >> General >> Accessibility >> Switch Control என்பதை பின்பற்றவும். பிறகு switchஐ ஆன் செய்து scanning styleஐ தட்டி, manual என்பதை தேர்வு செய்யவும். பிறகு switchesஐ தட்டி Add New Switch >> Camera >>இடது அல்லது வலது பக்கம் head movement என்று செய்யவும்.

ஃபிளாஷ்

உங்கள் கேமராவின் ஃபிளாஷை எச்சரிக்கை அறிவிப்பாக மாற்ற Settings >> General >> Accessibility என்பதை பின்பற்றி கீழே சென்று LED Flash for Alerts என்பதை செயல்படுத்தவும்.

நைட் மோடு

நீங்கள் மூன்று முறை டேப் செய்து நைட் ரீடிங் மோடை செயல்படுத்த முடியும். அதற்கு go to Settings >> General >> Accessibility என்பதை பின்பற்றி கீழே சென்று Accessibility Shortcut என்பதை தேர்வு செய்து Invert Colors என்பதை தட்டவும். இப்பொழுது triple-tap செய்யும் போது உங்கள் திரையின் நிறத்தை தலைகீழாக மாற்ற முடியும்.

கீபோர்ட் ஷார்ட்கட்

ஒரு சில வாக்கியங்களை டைப் செய்ய ஷார்ட் கட்ஸ் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக அடிக்கடி பயன்படுத்தும் "I'll be there soon!" அல்லது "I'm in meeting" போன்ற வாக்கியங்களுக்கு ஷார்ட் கட்ஸ் பயன்படுத்த முடியும். இதனால் உங்கள் நேரம் சேமிக்க படலாம். இதை செயல்படுத்த Settings >> General >> Keyboard >> Text Replacement என்பதை பின்பற்றவும்.

custom vibration

உங்கள் ஒவ்வொரு தொடர்புக்கும் நீங்கள் தனி தனி ரிங் டோன் வைப்பது போல் தற்பொழுது custom vibration வந்துள்ளது. இதற்கு contact சென்று Edit >> Vibrations >> Create new Vibrations என்பதை பின்பற்றி குறிப்பிட்ட முறையை தேர்வு செய்யவும்.

கடவுச்சொல்

ஐஓஎஸ் இயங்குதளத்தில் இதுவரை உங்கள் கடவுச்சொல்லுக்கு 4 இலக்கு மட்டுமே இருந்தது ஆனால் தற்பொழுது ஐஓஎஸ்9 இயங்குதளத்தில் 6 இலக்கு கடவுச்சொல் வந்துள்ளது. அதிக எண்கள் இருப்பதால் வேறு ஒருவரால் உங்கள் கடவுச்சொல்லை விரைவில் கண்டு பிடித்து விட முடியாது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Secrets Of Smart Apple iPhone 6s Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்