கூட்டமில்லாத அருகாமை ஏடிஎம்-களை கண்டறிய ஒரு சின்ன தந்திரம்.!

இந்தியாவில் நடுத்தர வர்கத்தின் கைகளில் பண தட்டுப்பாடு நிகழ்வதை பற்றிய அறிமுகமே தேவையில்லை. அந்த விடயத்தில் உங்களுக்கு உதவும் நோக்கில் தமிழ் கிஸ்பாட் வழங்கும் ஒரு சூப்பர் டிப்ஸ்.

Written By:

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தாரோ அன்றில் இருந்து நாடு முழுவதும் ஏடிஎம்கள் மற்றும் வங்கி வாசல்களில் வெகுஜன மக்கள் தூக்கமில்லாத இரவுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன, எந்தவோடு வங்கியானாலும் சரி எந்தவொரு ஏடிஎம் ஆனாலும் சரி அங்கு நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதை கட்டாயம் பார்க்க முடியும்.

இந்த நிலைமை எளிதாக்க பேடிஎம், ப்ரீசார்ஜ் மற்றும் பிற வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் உட்பட வேலை செய்யும் அருகாமை ஏடிஎம்களை பயனர்கள் கண்டுபிடிக்க உதவும் அம்சங்களை வழங்கினாலும், கூட்ட நெரிசல் இல்லாத ஒரு ஏடிஎம் இயந்திரத்தை கண்டறிய அவைகள் உதவவில்லை என்றுதான் கூற வேண்டும்.

சரி சரி கவலைப்பட வேண்டாம். உங்கள் வருத்தம் எங்களுக்கு புரிகிறது. பணம் கொண்டுள்ள அதேசமயம் கூட்டம் அதிகமாக இல்லாத ஏடிஎம்களை கண்டுபிடிக்கும் ஒரு எளிய டிப்ஸ் இதோ உங்களுக்காக.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

கூகுள் தேடல் சென்று, தேடுபொறியில் http://atmsearch.in/ என்று டைப் செய்யவும். ஒரு பக்கம் உங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களின் தற்போதைய இடம் அல்லது நீங்கள் ஏடிஎம் டேதும் இடம் ஆகிய விடயங்கள் கேட்கப்படும். அதை தேவையான இடத்தில நுழைக்கவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வலைத்தளம் உங்களிடம் கேட்ட தரவுகளை நீங்கள் பூர்த்தி செய்ததும். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் ஒன்றுதான் அது - "சர்ச்ஏடிஎம்" என்ற விருப்பத்தை கிளிக் செய்வதுதான்.

வழிமுறை #03

இப்போது அந்த தளம் வங்கி பெயர், இடம், உடன் குறிப்பிட்ட ஏடிஎம்-ன் கூட்ட நெரிசல், பணம் இருப்பு ஆகிய தகவல்கள் பயனர்களுக்கு தெரிவிக்கபப்டும் பண கிடைக்கும் உட்பட காண்பிக்கும்.

வழிமுறை #04

தளத்தின் மூலம் பிற மக்கள் பயன்படும் நோக்கத்தில் யார் வேண்டுமானாலும் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை தளத்தின் தகவல் பட்டியலுடன் இணைக்கும் வண்ணம் "ஆட் ஏடிஎம்" என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் ஏடிஎம்-ன் நிலையை மேம்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தொலைந்த ஆண்ட்ராய்டை கூகுளின் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Quick Trick To Spot Nearby ATMs With Cash and Shorter Queues. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்