ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை இரண்டே நிமிடத்தில் பாதுகாப்பது எப்படி?

ஹேக்கர்களிடம் இருந்து நம்முடைய ஸ்மார்ட்போனை காப்பாற்றி கொள்ள இரண்டே நிமிடங்களில் என்ன செய்ய வேண்டும்

By Siva
|

நமது வாழ்வில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட நம்முடைய அனைத்து தேவைகளையும் நம்முடைய ஒரே ஒரு ஸ்மார்ட்போன் செய்து முடித்துவிடுகிறது.

ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி?

ஆனால் அதே நேரத்தில் நம்முடைய தனிப்பட்ட மற்றும் முக்கிய டேட்டாக்கள் ஹேக்கர்களின் கையில் சிக்கியது என்றால் அவ்வளவுதான். நாம் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்

கூட்டமில்லாத அருகாமை ஏடிஎம்-களை கண்டறிய ஒரு சின்ன தந்திரம்.!

மேலும் ஹேக்கர்கள் அதிக விலையுயர்ந்த போன்களை தாக்க முடியாது என்ற எண்ணம் ஒருசிலரிடம் உள்ளது. இது தவறானது. ஹேக்கர்கள் நுழைய போன் ஒரு தடையே இல்லை. எவ்வளவு விலையுயர்ந்த போனாக இருந்தாலும் ஹேக்கர்கள் அந்த போனுக்குள் நுழைந்து டேட்டாவை எடுக்க ஒருசில நொடிகள் போதும்.

ஆண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்கு கூகுள் தரும் 3 பயனுள்ள வசதிகள்

எனவே ஹேக்கர்களிடம் இருந்து நம்முடைய ஸ்மார்ட்போனை காப்பாற்றி கொள்ள இரண்டே நிமிடங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போமா.

வலுவான பாஸ்வேர்டு

வலுவான பாஸ்வேர்டு

உங்கள் மொபைல் போனில் வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்டு பயன்படுத்தாமல் நம்முடைய போன் பாதுகாப்பாக இருக்கும் என்று முட்டாள்கள் மட்டுமே எண்ணுவார்கள். உங்களுடைய போனை மிகப்பெரிய அளவில் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வலுவான பாஸ்வேர்டுதான் என்பதை அனைவரும் ஞாபகம் வைத்து கொள்ளவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இதுவும் ஒரு பாதுகாப்பு வழிதான்

இதுவும் ஒரு பாதுகாப்பு வழிதான்

உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். ஐபோன்கள் மற்றும் தற்போதைய லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு போன்களில் இந்த வசதி உள்ளது. ஆனால் பழைய மாடல் ஆண்ட்ராய்டு போன்களில் நாம் தான் இந்த வசதியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும்

சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும்

உங்களுடைய மொபைல் போன் ஆண்ட்ராய்டாக இருந்தாலும் சரி, ஐபோனாகவும் இருந்தாலும் சரி, அதில் உள்ள சாப்ட்வேர்களை கண்டிப்பாக அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். ஆட்டோமெட்டிக் அப்டேட் என்றால் இன்னும் வசதியாக இருக்கும். அப்டேட் செய்யப்பட்ட மொபைல் போன்களை ஹேக்கிங் செய்வது ஹேக்கர்களுக்கு ஒரு சவாலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது

டிவைஸ் ஃபைண்டரை செட் அப் செய்யுங்கள்

டிவைஸ் ஃபைண்டரை செட் அப் செய்யுங்கள்

டிவைஸ் ஃபைண்டர் என்பது உங்கள் மொபைல் போனின் பாதுகாப்பு அம்சங்களில் மேலும் ஒருவகை ஆகும். உங்களுடைய போனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த டிவைஸ் ஃபைண்டர் உங்களுக்கு உதவி செய்யும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Follow these 4 simple ways to save your smartphone from hackers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X