உங்களுக்கு பொருத்தமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது எப்படி.?

நீங்கள் ஆண்டுதோறும் உங்களின் ஸ்மார்ட்போனை மாற்றும் நிலை ஏற்படுகிறதா.? இதோ ஸ்மார்ட்போன் வாங்கும் முன் எது உங்களுக்கு பொருத்தமான ஸ்மார்ட்போன் என்பதை தேர்வு செய்யை டிப்ஸ்.!

|

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க ஆர்வமாக இருந்தால், நீங்கள் எப்போதுமே புதிதாக அறிமுகம் ஆன கருவியை அல்லது ஒரு விலையுயர்ந்த கருவியை வாங்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் சென்றால், நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் சிறந்த சாதனத்தை பெற முடியும்.

உங்களுக்கு பொருத்தமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது எப்படி.?

ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் வாங்குவதென்பது சாதாரணமான விடயமில்லை, அதற்கு நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அதை நிகழ்த்த தமிழ் கிஸ்பாட் வழங்கும் இந்த 'ஸ்மார்ட்போன் வாங்கும் கையேடு' உங்களுக்கு நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஸ்மார்ட்போனின் அளவு.!

ஸ்மார்ட்போனின் அளவு மிக முக்கியம். நீங்கள் எப்போதுமே ஸ்மார்ட்போனை கையில் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அதை செயல்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பெரிய திரை கருவிகள் எளிதாக உங்கள் பைகளில் அல்லது பணப்பையோடு பொருந்தாது. ஆனால் பிரவுஸிங் மற்றும் வீடியோக்கள், கேம்கள் ஆகிய விடயங்களில் நல்ல வசதியை ஏற்படுத்தி கொடுக்கும். மறுபக்கம் பெய்ய திரை கருவிகளை போல் இல்லாது சிறிய திரை கொண்ட கருவிகள் அதிக அளவிலான சக்தி (பவர்) சேமிப்புகளை நிகழ்த்த உதவும் அதாவது சிறிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் இன்னும் சிறிய மற்றும் குறைந்த பேட்டரி சக்தியை நுகரும். இரண்டில் உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.!

சேமிப்பு திறன் சார்ந்த முடிவு.!

ஆப்பிள் ஐபோன்கள் போன்று சில கருவிகள் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லாமல் அதாவது மெமரி நீட்டிப்பு ஆதரவு இல்லாமல் வெளிவருகின்றன. அம்மாதிரியான கருவிகள் பயனர்களின் வேறு சில தேவைகளை பூர்த்தி செய்யும் உள் சேமிப்பு திறன்களை கொண்டிருக்கும். மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ளடக்க சேமிப்பு ஒரு குறிப்பிட்ட அளவில் வழங்கப்பட்டு, மைக்ரோ எஸ்டி அட்டைகளின் ஆதரவுடன் மெமரி நீட்டிக்கப்படும் அம்சம் வழங்கப்படும். நீங்கள் உங்கள் பயன்பாடு அடிப்படையில் தான் இந்த விடயத்தில் தான் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் நிறைய புகைப்படங்கள், பாடல்கள், வீடியோக்கள் மற்றும் நிறைய ஆப்ஸ்களை நிறுவுவீர்கள் என்றால் அதிக அளவிலான மெமரி நீட்டிப்பு வசதி வழங்கும் கருவியை தேர்ந்தெடுக்கவும், நீங்கள் கருவியின் மெமரியை அவ்வளவு எளிதில் நிரப்ப மாட்டீர்கள் என்றால் குறைந்த அளவிலான மெமரி நீட்டிப்பு வசதி வழங்கும் கருவியை தேர்ந்தெடுக்கவும்.

4ஜி வோல்ட் ஆதரவு தேவையா.?

சமீப காலமாக ஸ்மார்ட்போனில் பல இணைப்பு விருப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, 4ஜி வோல்ட் ஆதரவு தான் இப்போது அதிக அளவில் வளர்ந்து வருகிறது மற்றும் பல மலிவு ஸ்மார்ட்போன்களில் கூட இந்த அம்சம் கிடைக்கப்பெறுகின்றது. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் முன், அக்கருவி 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுருக்க வேண்டுமா..? உங்களுக்கு 4ஜி கருவி தேவைதானா.? என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் அளித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்.

ஓஎஸ் -எதை பெறுகிறோம் என்ற புரிதல்.!

ஸ்மார்ட்போன் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பிரபலமான இயங்குதளங்களாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளன. ஐஓஎஸ், ஒரு பாதுகாப்பான தளமாக இருப்பினும் பயனர்களுக்கு வரம்புகள் விடுப்பதாக, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழல் கொண்டுள்ளதாக குறைபாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. மறுபுறம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பல்வேறு வழிகளில் வேலை புரிகிறது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர் ஆனது ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் உடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான பயன்பாடுகளை கொண்டுள்ளது. குறைவான அளவில் விண்டோஸ் தொலைபேசிகளும் ஒரு ஸ்டைலான மற்றும் மென்மையான இயங்குதளமாக உள்ளது. ஆனால் அதுவும் பயன்பாடுகள் எண்ணிக்கை அடிப்படையில் பின்தங்கியுள்ளது. பிளாக்பெர்ரி ஓஎஸ், பாதுகாப்பான ஒன்று என்ற போதிலும் ஒரு சிறிய அளவிலான பயன்பாடுகளையே கொண்டுள்ளது. எனவே நீங்கள் உங்கள் பயன்பாடு மற்றும் தேவைகளை அடிப்படையாக கொண்டு எந்த இயங்குதளம் தேவை என்ற முடிவை எடுக்க வேண்டும்.

டிஸ்ப்ளேவின் நன்மைகளும் தீமைகளும்.!

ஸ்மார்ட்போன்களில் எல்சிடி, அமோஎல்இடி, மற்றும் வளர்ந்து வரும் ஓல்இடி என பல பேனல்கள் உண்டு டிஸ்ப்ளேவின் ஒவ்வொரு வகையிலும் அதன் சொந்த சாதக பாதகங்கள் உள்ளது. அதாவது கருவி மீதான அக்கறை, அதன் பிரகாசம், தேய்மானம் மற்றும் தரமான, மென்மையான, பளபளப்பான மேற்பரப்பு என அடிப்படையில் வெவ்வேறு நன்மைகளை நீங்கள் அடைய முடியும். முதலில் டிஸ்ப்ளேவின் அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மற்றும் அக்கருவியின் தீர்மானத்திலும் (ரெசெல்யூஷன்) கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு அங்குலத்திலும் வைக்கப்பட்டுள்ளன பிக்சல்கள் எண்ணிக்கை சார்ந்த பிக்சல் அடர்த்தியை புரிந்துக்கொள்ள வேண்டும், பின்னர் நீங்கள் கருவியின் டிஸ்பிளே சார்ந்த முடிவை எடுக்க வேண்டும்.

பேட்டரி திறன் மிக முக்கியம்.!

வாங்க போகும் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் அக்கருவியில் தீவிர பணிகளுக்காக சாதனத்தையு பயன்படுத்தும் ஒரு நபர் என்றால், நீங்கள் ஒரு நீண்ட கால பேட்டரி ஆயுள் கொண்ட ஒரு சாதனத்தை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் சரியான சாதனத்தை தேர்வு செய்ய தவறினால், நீங்கள் அடிக்கடி உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய நேரிடும். கவனமாக கருவிகளை தேர்ந்தெடுங்கள் மற்றும் உங்கள் பணத்திற்கான மதிப்பை பெறுங்கள்.!

பீம் ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்ற எளிய வழிமுறைகள் கொண்ட டூடோரியலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Pick the right smartphone for your needs with these tips. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X