ஜியோ பயனாளியாக இல்லாமலேயே ஜியோ ஆப்ஸ்களை இலவசமாக அணுகலாம், எப்படி?

நீங்கள் ஒரு ஜியோ பயனாளியாக இல்லாமலும் கூட வெல்கம் ஆஃபர் முடியும் வரை இலவசமாக ஜியோ ஆப்ஸ்களை அனுபவிக்க முடியும். அதெப்படி என்ற வழிமுறைகள் இதோ.!

Written By:

ஒருவேளை உங்களுக்கு ஜியோ சிம் கார்ட் வேண்டாம், அதன் வெல்கம் ஆபர் வேண்டாம் ஆனால் ஜியோ ஆப்ஸ்கள் தேவைப்படுகிறது என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, செய்தி என உங்களின் தேவை எதுவாக இருப்பினும் அதை ரிலையன்ஸ் ஜியோ ஆப்ஸ் பூர்த்தி செய்து வைக்கும். குறிப்பாக அது ஜியோ பயனாளிகளுக்கு மட்டுமின்றி ஜியோ பயன்படுத்தாதவர்களுக்கும் ஜியோ ஆப்ஸ் பயன்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜியோ பயனர்கள் அல்லாதவர்கள் கூட ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசாட், ஜியோக்ளவுட், ஜியோம்யூசிக்மற்றும் பல உட்பட அனைத்து ஜியோ ஆப்ஸ்களையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

அப்படியாக ஜியோ பயன்ரகள் அல்லாதவர்கள் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஜியோ ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்வதோடு அதை டிசம்பர் மாத இறுதி வரையிலாக அனுபவிக்கவும் முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#01 டவுண்லோட் ரீமிக்ஸ்ஓஎஸ்

ரீமிக்ஸ்ஓஎஸ் (RemixOS) என்பது ஒரு ஆண்டராய்டு எமுலேட்டர் ஆகும். இது உங்கள் பிசியில் அல்லது கம்ப்யூட்டரில் எந்தவொரு ஆண்ட்ராய்டு ஆப்பையும் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். ஆக, இது ஜியோ பயனாளிகள் அல்லாதவர்கள் ஜியோ ஆப்ஸ்களை அனுபவிக்கவும் உதவும்.

#02 பிசியில் இன்ஸ்டால் செய்யவும்

பயனர்கள் ரீமிக்ஸ்ஓஎஸ் ஆனது இரண்டு வகைகளில் கிடைக்கும் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஒன்று, ரீமிக்ஸ் ஓஎஸ் - இது ஆண்ட்ராய்டை இன்ஸ்டால் செய்ய உதவும். மற்றொன்று ரீமிக்ஸ்ஓஎஸ் ப்ளேயர் - இது விண்டோஸ்தனை இன்ஸ்டால் செய்ய உதவும். இந்த வழக்கில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது - ரீமிக்ஸ் ஓஎஸ்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#03 ஜியோ ஆப்ஸ் ரன் செய்யவும்

பயனர் அவர்தம் கணினியில் ரீமிக்ஸ்ஓஎஸ் நிறுவிய பின்னர், அவர்கள் இப்போது வெறுமனே தங்களுக்கு விருப்பமான ஜியோ பயன்பாடுகளை நிறுவிக்கொள்ள முடியும். அதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் > ப்ளே ஆக்டிவேஷன் ஆப் கிளிக் செய்து பின்னர் கூகுள் அக்கவுண்ட் கொண்டு உள்நுழையவும்.

#04 பதிவிறக்கம் மற்றும் நிறுவல்

பயனர் இப்போது அவர்கள் பயன்படுத்த விரும்பும் ஜியோ பயன்பாட்டை தேர்வு செய்து மற்றும் பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பதிவிறக்கம் மற்றும் நிறுவல் வெற்றிகரமாக முடிந்த பின், பயனர் வெறுமனே பயன்பாட்டை திறந்து, தங்களை பதிவு செய்து கொள்ளலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேறு வழிகள்

ஒரு ஜியோ பயனர் அல்லாதவர் க்ரோம் மற்றும் ப்ளூஸ்டாஸ்-ல் உள்ள ஆர்க் வெல்டர் (Arc Welder) பதிவிறக்கம் செய்து கூட ஜியோ ஆப்ஸ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க

7.25% வட்டி கொடுக்கும் ஏர்டெல் பேங்க், அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டுமா.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Non-Jio Users Can Enjoy Reliance Jio App Services For Free Until Welcome Offer Ends. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்