மைக்ரோ எஸ்டி கார்டு வாங்கும் போது, தப்பு பண்ணாதீங்க மா.!!

Written By:

இன்று மெமரி கார்டுகள் பெரும்பாலும் எல்லா கருவிகளிலும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய கருவியாகி விட்டது. ஸ்மார்ட்போன், டிஜிட்டல் கேமரா, டேப்ளெட் மற்றும் எம்பி3 பிளேயர் வரை அனைத்து கருவிகளும் மெமரி கார்டு தேவைப்படுகின்றது என்பதால் பல்வேறு சிறிய நிறுவனங்களும் மெமரி கார்டு தயாரிக்க துவங்கி விட்டது. இவைகளில் சில கார்டுகள் சரியாக வேலை செய்யாமல் போவதும் உண்டு.

அனைத்து எஸ்டி கார்டுகளும் ஒரு மாதிரி உருவாக்கப்படுவதில்லை. இவைகளில் பல்வேறு வேகம், அளவு மற்றும் கொள்ளளவு போன்றவைகளில் வித்தியாசமாக இருக்கின்றது. தகவல்களை சேமித்து வைக்க மெமரி கார்டுகள் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கின்றது.

இங்கு மெமரி கார்டு வாங்கும் போது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களை தான் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01

மைக்ரோ எஸ்டி கார்டுகளை பொருத்த வரை SD, SDHC, மற்றும் SDXC என மூன்று வகை ஃபார்மேட்கள் இருக்கின்றன. இதில் மைக்ரோ SD வகை கார்டுகளில் 2ஜிபி வரை கொள்ளளவு இருப்பதோடு பல்வேறு ஸ்லாட்களிலும் பயன்படுத்த முடியும். மைக்ரோ SDHC வகை கார்டுகளின் கொள்ளளவு 2ஜிபி முதல் 32 ஜிபி வரை இருக்கின்றது, மைக்ரோ SDXC வகை கார்டுகளின் கொள்ளவு 32ஜிபி'களில் துவங்கி 2000 ஜிபி வரை நீள்கின்றது.

02

மைக்ரோஎஸ்டி கார்டு கிளாஸ் 2, 4, 6 மற்றும் 10 என பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றது. இவை தரவுகளை பரிமாற்றம் செய்யும் வெவ்வேறு வகைகள் ஆகும். இதோடு இரண்டு UHS (Ultra High Speed) அதாவது தரவுகளை அதிவேகமாக பரிமாற்றம் செய்யும் வகைகள் இருக்கின்றது. இவைகளின் விலை அதிகம் ஆகும்.

03

உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப கார்டுகளை தேர்வு செய்ய வேண்டும். சில சமயங்களில் அதிக திறன் கொண்ட கார்டுகள் சில கருவிகளில் அவைகளின் முழு திறன் படி இயங்காது.

04

மெமரி கார்டு வாங்கும் போது போலிகளை கண்டு ஏமாறாமல் இருக்க வேண்டும். சான்டிஸ்க் போன்ற நிறுவங்கள் போலி கார்டுகள் குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளன. ஒரு வேலை நீங்கள் வாங்கும் கார்டுகள் போலியானதா என்பதை தெரிந்து கொள்ள கணினியில் H2testw என்ற மென்பொருளை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும்.

05

மெமரி கார்டுகளை குறைந்த விலையில் வாங்குவது சில சமயம் ஆபத்தில் முடியலாம். இதனை தவிர்க்க பிராண்டெட் கார்டுகளை வாங்குவது நல்லது. இதன் மூலம் நீண்ட வாழ்நாள், சிறந்த பயன் பெற முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Mistakes To Avoid When Buying MicroSD Card Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்