தொலைந்த ஆண்ட்ராய்டை கூகுளின் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி.?

Written By:

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன்கள் தொலைக்கப்படுவதும் அல்லது களவாடப்பட்டு விடுவதுமான ஏராளமான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் தொலைக்கப்பட்ட அல்லது களவாடப்பட்ட கருவிகள் அனைத்தும் மீண்டும் கண்டெடுக்கப்பட்டதுஎன்று கூறி விட இயலாது. மறுபக்கம் தொலைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கருவிகளை ட்ராக் அல்லது லோக்கேட் செய்ய பயனர்கள் எளிமையான பல வழிகள் உள்ளன. அதில் ஒரு சிறப்பான வழிதான் இது.!

தொலைந்த ஆண்ட்ராய்டை கூகுளின்

(தொலைந்த உங்களின் ஆண்ட்ராய்டு கருவிகளை ட்ராக் அல்லது லோக்கேட் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் பல மூன்றாம் தரப்பு ஆப்ஸ்கள் இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது)

சரி, தொலைக்கப்பட்ட உங்களின் ஆண்ட்ராய்டு கருவியை கூகுளில் "பைண்ட் மை போன்" என்று டைப் செய்வதின் மூலம் கண்டறிய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

1. உங்களின் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் ப்ரவுஸரை திறக்கவும்.
2. பின்னர் உங்கள் தொலைந்த கருவியில் உள்ள கூகுள் அக்கவுண்ட்தனில் லாக்-இன் செய்யவும்.
3. இப்போது "பைண்ட் மை போன் ஆன் கூகுள்" என்று டைப் செய்யவும்.
4. உங்களுக்கு மொபைலின் பின் பாயின்டட் லோக்கேஷன் காட்டபப்டும்.
5. மேலும் ஆழமான தகவல்களுக்கு மேப்பில் தென்படும் ரிங் பட்டனை அழுத்தவும்.
6. அழுத்தியதும் உங்கள் கருவி பலமாக ரிங் ஒலிக்கப்படும், ஒருவேளை உங்கள் சாதனம் உங்களுக்கு அருகில் இருந்தால் இந்த ரிங் உங்களுக்கு உதவலாம்.

தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்Read more about:
English summary
Locate Your Lost Android Phone Just By Typing “Find My Phone” On Google. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்