இரகசியமான ஆன்லைன் உரையாடல்களில் ஈடுபடுபவரா நீங்கள்.? உஷார்.!

இணையத்தினைப் பயன்படுத்தி பாதுகாப்பாக பிரைவஸி சாட்டிங் மேற்கொள்வது குறித்து ஓர் பார்வை.

Written By:

இன்றைய காலகட்டத்தில் நம் அன்றாட வாழ்வின் தினசரி நிகழ்வுகளில் கூட நீக்க இயலாத ஓர் அத்தியாவசியமான பொருளாக ஆகிப்போனது எதுவெனில் இணையம் தான்.மேலும் இப்போது எல்லாச் செயல்களுமே அதாவது கல்வி,பணி,பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துமே இணையத்தை மையப்படுத்தியே அமைந்துவிட்டதெனில் அதுமிகையல்ல.

எல்லாவற்றிலுமே இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டதனைப்போல கணினி,தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியாகவும் இணையத்தின் துணைகொண்டே தகவல்கள் பரிமாறப்படுகிறது.

தபால் முறை வழக்கொழிந்து போனதனைப்போல இப்போது குறுஞ்செய்தி முறையும் இப்போது முற்றிலுமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றே கூறலாம்.எல்லாமும் சமூகவலைத்தளங்கள் வாயிலாகவும் பிற இணையதளங்கள் வழியாகவும் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.அவ்வாறு தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகையில் எப்படி பாதுகாப்புடன் இருப்பது என்பது குறித்த தகவல்கள் கீழே.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இணையமும் வாழ்வும்:

மேற்கூறியதனைப் போலவே தகவல்பரிமாற்றம் உள்ளிட மனித வாழ்வின் அத்துணை அடிப்படை நிகழ்வுகளிலும் இணையம் மற்றும் கணினி ஆகியவை ஊடுருவிட்டன.ஆனாலும் இதுவேதான் காலத்தின் கட்டாயமும் கூட.ஏனெனில் மனிதனால் செய்ய இயலாதவற்றையும் இவை எளிதாகச் செய்துமுடிக்கின்றன என்ற ஓர் காரணமும் அதுமட்டுமன்றி நேரம் உள்ளிட்டவற்றினை மிச்சப்படுத்துகின்றன என்பதுவும் நிதர்சனமான உண்மை.

ஏதுமில்லை இணையமின்றி:

இன்றையச் சூழலில் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமன்றி சமூகத்தின் அடித்தளத்திலிருந்தே அணைத்து துறைகளிலும் கணினி மற்றும் இணையத்தின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பதுதான் மறுக்கவியலாத உண்மையாகும்.துறைகளைப்பொறுத்து பயன்படும் விதம் மாறலாம்.அனால் இணையம் மற்றும் கணினியின் தேவை என்பது அத்தியாவசியமான ஒன்று.

தகவல் பரிமாற்றம்:

இணையத்தின் பயன்பாடானது எப்போது அதிகரிக்கத்துவங்கியதோ அப்போதே இன்னொரு பக்கத்தில் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் வழியாக அனுப்பக்கூடிய மெசேஜ் முறை குறைந்துபோனது.சமூகவலைத்தளங்கள் வழியாகவும் இணையதளங்கள் வழியாகவும் மக்கள் தகவல்களை எளிதாகப் பரிமாறிக்கொள்ளத்துவங்கி விட்டனர்.

நன்மையையும் தீமையும்:

உலகின் எங்கோ ஓர் மூலையில் இருப்பவரையும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி ஆகியவை இருக்குமெனில் எளிதாக தொடர்புகொள்ள இயலும்.மேலும் இப்போது சமூக வலைத்தளங்கள் லைவ் வீடியோ கால் உள்ளிட்ட வசதிகளை வழங்கத்துவங்கிவிட்டன.இருவருக்கிடையேயான தூரம் தெரியாத அளவினுக்கு இவை வழியாக நாம் இணைந்திருக்க இயலும் எப்போதும்.
இத்துணை நன்மையுள்ள இணைய வழியில் அதே அளவினுக்கு மட்டுமன்றி அதிகப்படியான ஆபத்துகள் நிரம்பியிருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை.

தகவல்களை திருடுதல்:

இணையத்தின் வழியிலுள்ள பெரிய ஆபத்து இதுவாகும்.ஹேக்கிங்,பிறரது தனிப்பட்ட தகவல்களை கண்காணித்தல் திருடுதல் ஆகியன இணையத்தை பயன்படுத்துபவர்கள் முன் உள்ள பெரிய பயமுறுத்திடக்கூடிய ஒன்றாகும்.

தற்காத்துக்கொள்ள:

இத்துணை ஆபத்துக்கள் இருந்தாலுமே இணையத்தின் வழி பிறரை தொடர்பு கொள்ளவது,சாட் உள்ளிட்ட விடயங்களை தவிர்க்க இயலாது,ஆனாலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.

கடினமான பாஸ்வேர்ட்:

சமூகவலைத்தளங்கள் மற்றும் பிற இணையதளங்களில் கணக்கு வைத்திருந்தால் கடினமான கடவு எண் என்பது அடிப்படையான ஒன்று.மேலும் இதன் மூலம் உங்கள் அக்கௌன்ட் உள்ளிட்டவற்றைலிருந்து தகவல்கள் திருடப்படுவதனிலிருந்தும்,பிரைவஸி பக்கங்களையும் காப்பாற்றலாம்.

டேட்டிங் ஆப்:

உங்களது துணையுடன் நீங்கள் பிரைவஸி சாட் மேற்கொள்ளவேண்டுமெனில் பெரும்பான்மையோர் பயன்படுத்துகிற நம்பத்தகுந்த வலைத்தளங்களை பயன்படுத்துங்கள்.ஏனெனில் பிற இணையதளங்களை பயன்படுத்தினால் அவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க வாய்ப்புண்டு.

விவரங்களை பகிறாதீர்கள்:

அதுமாதிரியான பிரைவஸி சாட் உள்ளிட்டவற்றை மேற்கொள்கையில் உங்கள் சமூகவலைத்தள க்கணக்குகள் மெயில் ஐடி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பகிராதீர்கள்.ஏனெனில் இது விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிகோலும்.

முன்னெச்சரிக்கை:

இயன்றவரையில் இணையத்தினைப் பயன்படுத்தி டேட்டிங்,பிரைவசி சாட் உள்ளிட்டவற்றில் ஈடுபடாதீர்கள்.அப்படி ஈடுபட்டிற்களெனில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை பகிராமல் முன்னெச்சரிக்குடன் இருப்பது நல்லது.ஏனெனில் இணையத்தினை தாண்டி இங்கு சராசரி வாழ்வொன்று உண்டுதானே.

மேலும் படிக்க

இணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
keep yourself secure while dating online.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்